ஸ்ரீ அரவிந்தர் நான்கு அதிமுக்கிய கருவிகளை யோகசித்திக்கான வழியாகக் கூறுகிறார்.
இதை ஒரு புரிதலுக்காக இன்றைய விஞ்ஞான ஆய்வு முறை (Research methodology) உடன் ஒப்பிட்டுப்புரிந்து கொள்ளலாம்.
முதலாவது யோகத்தின் அடிப்படைகள், கோட்பாடுகள், பயிற்சி,
தத்துவம், செயல்முறை ஆகியவற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் சாத்திரப்படிப்பு - இன்றைய ஆய்வு முறையில் முழுமையான literature review என்று கூறலாம்.
அடுத்து கற்றுக்கொண்ட சாத்திரப்படிப்பினை பிரயோகித்து சாதனை செய்யும் உற்சாகத்துடன் கூடிய சுயமுயற்சி - Personal effort and action!
நேரடி அனுபவம் பெற்ற, ஆற்றலுள்ள, எமது சந்தேகங்களைத் தீர்த்து எம்மை சாதனையில் முன்னேறத் தூண்டிக்கொண்டிருக்கும் குரு - Supervisor
நான்காவது முயற்சி கனிவதற்குரிய சரியான காலம்!
இந்த நான்கினையும் சரியாக உணர்ந்து பின்பற்றும் சாதகன் தனது யோகத்தில் சித்தி/பூர்ணத்துவம் (Perfection) அடைகிறான்.
இன்று பலரும் யோகம் என்பது எங்காவது சென்று சில ஆசனங்களைக் கற்றுகொண்டு பிறகு தாமும் மற்றவர்களுக்கு கற்றுத்தருவதுடன் நின்று விடுகிறது.
உண்மையான யோகம் என்பது உடலைச் செம்மையாக்கி, அந்தக்கரணங்கள் எனும் மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் ஆகிய நான்கினையும் ஒருங்கிணைத்து ஆற்றலை ஒருமுகப்படுத்தி எம்மைச் செம்மைப்படுத்தும் கலை!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.