பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தவர்களுக்கு வீட்டில் இருப்பது மிகுந்த மன உளைச்சலைக் கொடுக்கக் கூடும், வாழ்க்கை இருண்டுவிட்டது போல் தோன்றும்; உலகம் அழியப்போகிறது என்று எண்ணத்தோன்றும்; கடவுள் தண்டிக்கிறான் என்ற பயம் வரும்;
இவை அனைத்தும் எமது கொதிக்கும் மனதிற்கான தற்காலிக காரணந் தேடலே!
இவையெல்லாம் வந்தால் உண்மையான நோய்த்தாக்கத்தை விட மனம் பலவீனமாகி பிராணன் வீணாகி எமக்கு நாமே ஆபத்து ஏற்படுத்திக்கொள்வோம்.
நதி பலங்கொண்டு அணையை உடைத்துவிட்டால் துரும்பும், நாணலும் ஆவதைத் தவிர வேறு சரியான வழி பிழைத்தலுக்கு இல்லை.
ஆகவே உலகை நினைத்து அக்கறைப்படுகிறேன் என்று வீணாக கொரோனா புள்ளி விபரவியல் ஆய்வினை செய்து கிலியைக் கூட்டி அழியாமல் இறை நம்பிக்கை உடையவராக இருந்தால் ஜெப தபங்களைச் செய்யுங்கள்!
மக்கள் தான் இறைவன் என்று நம்புபவராக இருந்தால் சக மனிதனுக்கு எப்படி உதவ முடியும் என்று சிந்தித்து புது யோசனைகளை கண்டுபிடியுங்கள்.
1720களில் பிளேக் கொள்ளை நோயின் போது சேக்ஸ்பியர் king lear காவியம் படைத்த மாதிரி ஏதாவது செய்யலாம்.
போட்டிகள், அதிகாரங்கள், நம்பிக்கைகள், ஆணவங்கள், கேளிக்கைகள் எல்லாம் அற்று மனிதன் தனது அடிப்படைத் தேவைகளுடன் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை சிந்தித்துத் தெளியக் கிடைத்த சந்தர்ப்பமாகப் பாருங்கள்.
ஏனென்றால் இயற்கையில் எதுவும் வீரியமாக வளர்ந்து கொண்டு மட்டுமே செல்ல முடியாது; அதிகாரமாக இருந்தாலும் சரி, நோயாக இருந்தாலும் சரி ஒரு கட்டத்தில் flatten the curve நிலையை அடைய வேண்டும்.
இப்போது உள்ள நிலவரத்தில் அது எப்போது நடக்கும் என்று தெரியாததாலும், அதுவரை நான் இருப்பேனா என்ற பயமும் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.