{காயத்ரி ஜெப பிரபாவம் பற்றி நண்பர் ஒருவர் கல்ப க்ரந்தங்கள், புராணங்களில் இருப்பவற்றைத் தொகுத்து தந்ததை சாதகர்களுக்காக தமிழாக்கித் தந்துள்ளோம்}
- ஒரு கோடி ஜெபப் பூர்த்தி - மோக்ஷம்
- லக்ஷ ஜெபப் பூர்த்தி - சொர்க்கப் பிராப்தி
- ஐம்பதாயிரம் ஜெபம் - செல்வம் அடையவேண்டிய மனோ இச்சை பூர்த்தியாகும்.
- ஐம்பதாயிரம் ஜெபம் - நல்ல மனைவி/மகன்/மகள் கிடைக்க
- ஒரு கோடி ஜெபப் பூர்த்தி - இராஜ்ய ப்ராப்தி, இன்றைய காலத்தில் அரசியலில் உயர் நிலை அல்லது வியாபார சாம்ராஜ்யம்
- இருபத்தி ஐயாயிரம் ஜெபப் பூர்த்தி - செல்வம், உடல் நலம், ஆயுர் விருத்தி
- இருபத்தியையாயிரம் ஜெபப்பூர்த்தி - மழை விருத்தி, தொழில் இடத்தில் செல்வாக்கு
- ஒரு லக்ஷ ஜெபம் - உயர் பதவி பெற
- இருபத்தியையாயிரம் ஜெபப் பூர்த்தி - உடலில் உள்ள எந்த நோயிலிருந்தும் விடுதலை
- ஒரு கோடி ஜெபம் - பிரம்ம ஹத்தி முதலான மகாபாவங்களில் இருந்து விடுதலை.
- ஒரு லக்ஷ ஜெபம் - த்விஜன் (அறிவுள்ளவன்/உபதேசம் பெற்ற சாதகன்) ஆக இருந்து தங்கத்தை அபகரித்தல், மது அருந்துதல், சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட பாவத்தைச் செய்திருந்தால் அதற்கான பிராயச்சித்த ஜெபம்
- ஒரு லக்ஷ ஜெபம் - கோஹத்தி (பசுவை துன்புறுத்திய, கொன்ற) தோஷத்திற்கு
- ஓரு லக்ஷ ஜெபம் - பெண்களை குழந்தகளைக் கொன்றவர்கள், நன்றி கெட்டவர்கள், மற்றவர் சொத்துக்களை அபகரிப்பவரர்கள் இவர்களுடன் தொடர்பினைக் கொண்டிருப்பதால் வரும் பாவத்திற்கான பிராயசித்தம்.
- ஒரே கோத்திரத்தில் மணம் செய்வதால் ஏற்படும் பாவத்திற்கு - ஐம்பதாயிரம் ஜெபம்
- மாற்றான் மனைவி, குடும்ப கௌரவத்தைக் கெடுத்தல், பெண்களை கொடுமைப் படுத்தல், மற்றவர் நிலத்தை அபகரித்தல், துன்புறுத்தல், வீடுகளைக் கொளுத்துதல் போன்ற பாவப் பிராயச்சித்த ஜெப எண்ணிக்கை - இருபத்தியையாயிரம்.
- தவறான நபர்களிடமிருந்து நன் கொடை பெறுதல், எடுத்துக்கொண்ட உறுதிமொழியில் இருந்து தவறுதல், நித்திய கர்மம், கோயில் பணிகளில் இருந்து தவறுதலுக்கு பிராயச்சித்த ஜெப எண்ணிக்கை எட்டாயிரம்.
- வேதத்தில் பிராயச்சித்த கர்மங்களாகக் கூறப்படுவதற்கு மாற்றாக கீழ்வரும் எண்ணிக்கை காயத்ரி ஜெபம் பயன்படுத்தலாம்.
- தினசரி சந்தியா வந்தனம் செய்யாதவனது தர்ப்பணங்களை எந்த தேவதைகளோ, பித்ருக்களோ ஏற்றுக்கொள்வதில்லை.
- ஒரு தடவை காயத்ரி ஜெபிப்பது அன்றைய பகலில் செய்த பாவங்களை அனைத்தையும் இல்லாதாக்கும்.
- பத்துத் தடவை காயத்ரி ஜெபிப்பது அன்றைய நாளின் இரவு பகல் இரு நேரத்திலும் செய்த பாவங்களை நீக்கும்.
- நூறு தடவை காயத்ரி ஜெபிப்பது ஒரு மாதத்தில் செய்த பாவங்களை அனைத்தையும் நீக்கும்.
- ஆயிரம் தடவை காயத்ரி ஜெபிப்பது ஒருவருட பாவங்களை அனைத்தையும் நீக்கும்.
- ஒரு லக்ஷ ஜெப பூர்த்தி அந்தப்பிறப்பில் செய்யப்பட்ட பாவங்கள் அனைத்தையும் நீக்கும்
- பத்து லக்ஷ ஜெபப் பூர்த்தி எல்லாப்பிறப்புகளிலும் செய்யப்பட்ட பாவங்களையும் நீக்கும்.
ஆகவே சாதகர்களே நாம் ஏன் குறித்தளவு எண்ணிக்கை தினசரி சாதனை செய்து வாருங்கள் என்று கூறுகிறோம் என்பதன் அர்த்தம் விளங்கியிருக்கும்.
நாம் இந்தப்பிறப்பில் செய்த பாவங்களை வயதின் ஆயிரம் மடங்குகளில் காயத்ரி அனுஷ்டானம் செய்து நீக்கி விடலாம். உதாரணமாக உங்கள் வாழ்க்கையில் பிரச்சனை இந்தப்பிறப்பில் செய்த பாவங்களால் வருவதாக இருந்தால், உங்கள் வயது 30 என்று கொண்டால் முப்பதாயிரம் ஜெபம் தாண்டும் போது உங்கள் வாழ்க்கை மாறுதலடையும்.
அப்படி மாறுதல் அடையவில்லை என்றால் ஜெபத்தைத் தொடர ஐம்பதாயிரம் அடையும் போது உங்கள் வாழ்க்கை மன அமைதியுடையதாக இருக்கும். அதிக பாவங்களைச் செய்தவராக இருப்பின் அவற்றிற்கு பிராயச்சித்த ஜெபங்களை செய்தாகவேண்டும். இப்படி ஒரு லக்ஷ ஜெபம் பூர்த்தியாகும் போது உங்கள் பாவ சம்ஸ்காரங்கள் தீர்ந்து புது வழி பிறக்கும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.