முதலில் உங்கள் தினசரி குரு அகத்திய காயத்ரி சாதனாவை செய்து முடித்துவிடுங்கள். புதியவர்களாக இருந்தால் சாதனை முறையினை இங்கு பாருங்கள்.
அதன் பின்னர் கண்களை மூடி தேவி பேரொளி வடிவமாக இருப்பதை மனக்கண்ணில் பார்த்து தீர்க்க சுவாசத்துடன் சில நிமிடங்கள் அந்த ஒளியை மனக்கண்ணில் பார்த்து அந்த ஒளி மெதுவாக உங்கள் தலையுச்சியினூடாக முள்ளந்தண்டினூடாகப் பரவி மூலாதாரம் வரை பரவுவதாக பாவியுங்கள். இப்படிப் பரவிய ஒளி ஒவ்வொரு ஆதாரங்களினூடாகவும் உடலில் உள்ள நரம்புக்கலங்களில் பரவுவதாக பாவிக்க வேண்டும்.
தலையில் மூளையில் உள்ள ஒவ்வொரு கலங்களும் இந்த ஒளி பரவி ஒவ்வொரு கலத்தையும் ஆரோக்கியமாக்குகிறது என்று மனதினால் காணவேண்டும்.
பின்னர்
- கண்கள்
- மூக்கு, சுவாசக்குழாய், சுவாசப்பைக்குள் இந்த ஒளி பரவி இரத்தத்தில் கலப்பதை பாவிக்க வேண்டும்.
- வாய், நாக்கு, உணவுக்குழாய், இரைப்பை, கல்லீரல், மண்ணீரல், சதையி, சிறுகுடல், பெருங்குடல், குதம் வரை பரவி அனைத்துக்கும் இந்த ஒளி பரவி அவற்றை உயிர்ப்படையச் செய்வதாக பாவிக்க வேண்டும்.
- இப்படி தலை முதல் காலை வரை ஒவ்வொரு உறுப்பின் வெளிப்புறத்தையும் கவனித்து அவற்றில் இந்த ஒளி நிரம்பி வெளியேறுவதாகப் பாவிக்க வேண்டும்.
- இறுதியாக எமது உடலில் இருந்து இந்த ஒளி நிரம்பி வெளியாகி எம்மை சூழ ஒரு ஒளி வட்டத்தை உருவாக்குவதாக பாவிக்க வேண்டும்.
- இந்த ஒளி வட்டத்திற்குள் எந்த தீய சக்தியும் வரமுடியாது.
- எம்முடன் தொடர்பு கொள்ளும் எல்லோரும் இந்த சக்தியைப் பெற வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.
- ஒவ்வொரு உறுப்புகளில் எமது மனக்கண் பார்வையைச் செலுத்தும் போதும் ஒரு தடவை காயத்ரி மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.