குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, March 30, 2020

தலைப்பு இல்லை

இனிமேல் எப்படி வாழலாம் என்ற சிந்தனை; 

ஒரு வருடத்திற்குத் தேவையான அரிசி ஒரு போகத்திற்கு தரக்கூடிய வயல் நிலம், 

வருடம் பூராகவும் விளைச்சல் தரக்கூடிய இயற்கை விவசாய மரக்கறித் தோட்டம், 

20 பசுமாடுகளும் காளைகளும், 

நிம்மதியாக படுத்து உறங்க ஒரு வீடு; 

எமக்கு உணவுத் தேவைப் பூர்த்தி செய்துவிட்டு மிகுதியை எம்மை அண்டி இருக்கக் கூடியவர்களின் தேவைக்கு ஏதாவது பண்டமாற்று! மிகுதியை விற்று சிறிது பணம் (internet, utility bill, வாகனத்திற்கு எரிபொருள் வாங்க) புத்தகங்கள் வாங்க! 

இப்படியொரு system இனை உருவாக்கி விட்டு அமைதியான அகத்தில் மூழ்கிய ஆனந்தமான வாழ்க்கை! 

இது போதும்!


தலைப்பு இல்லை

My working table!

Saturday, March 28, 2020

COVID-19 as Negative feedback (System science perspective) on Earth Air pollution

I am wondering COVID-19 is an Acute respiratory distress syndrome, in earth system science perspective impact of its attack on human is cleaning the air! 

Air,which also the basis of respiration; so some strong correlation and message on balance of nature!

we can understand this phenomenon through system science. 

in system science Negative feedback or balancing feedback will take place when system move to the exponential growth, which lead to instability. 

Then COVID-19 is a negative feedback to balance the earth air pollution. 

also we can believe their will be a negative feedback to control COVID-19 too. 


Tuesday, March 24, 2020

தலைப்பு இல்லை

பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தவர்களுக்கு வீட்டில் இருப்பது மிகுந்த மன உளைச்சலைக் கொடுக்கக் கூடும், வாழ்க்கை இருண்டுவிட்டது போல் தோன்றும்; உலகம் அழியப்போகிறது என்று எண்ணத்தோன்றும்; கடவுள் தண்டிக்கிறான் என்ற பயம் வரும்; 

இவை அனைத்தும் எமது கொதிக்கும் மனதிற்கான தற்காலிக காரணந் தேடலே! 

இவையெல்லாம் வந்தால் உண்மையான நோய்த்தாக்கத்தை விட மனம் பலவீனமாகி பிராணன் வீணாகி எமக்கு நாமே ஆபத்து ஏற்படுத்திக்கொள்வோம். 

நதி பலங்கொண்டு அணையை உடைத்துவிட்டால் துரும்பும், நாணலும் ஆவதைத் தவிர வேறு சரியான வழி பிழைத்தலுக்கு இல்லை. 

ஆகவே உலகை நினைத்து அக்கறைப்படுகிறேன் என்று வீணாக கொரோனா புள்ளி விபரவியல் ஆய்வினை செய்து கிலியைக் கூட்டி அழியாமல் இறை நம்பிக்கை உடையவராக இருந்தால் ஜெப தபங்களைச் செய்யுங்கள்!

மக்கள் தான் இறைவன் என்று நம்புபவராக இருந்தால் சக மனிதனுக்கு எப்படி உதவ முடியும் என்று சிந்தித்து புது யோசனைகளை கண்டுபிடியுங்கள். 

1720களில் பிளேக் கொள்ளை நோயின் போது சேக்ஸ்பியர் king lear காவியம் படைத்த மாதிரி ஏதாவது செய்யலாம். 

போட்டிகள், அதிகாரங்கள், நம்பிக்கைகள், ஆணவங்கள், கேளிக்கைகள் எல்லாம் அற்று மனிதன் தனது அடிப்படைத் தேவைகளுடன் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை சிந்தித்துத் தெளியக் கிடைத்த சந்தர்ப்பமாகப் பாருங்கள். 

ஏனென்றால் இயற்கையில் எதுவும் வீரியமாக வளர்ந்து கொண்டு மட்டுமே செல்ல முடியாது; அதிகாரமாக இருந்தாலும் சரி, நோயாக இருந்தாலும் சரி ஒரு கட்டத்தில் flatten the curve நிலையை அடைய வேண்டும்.

இப்போது உள்ள நிலவரத்தில் அது எப்போது நடக்கும் என்று தெரியாததாலும், அதுவரை நான் இருப்பேனா என்ற பயமும் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது.


Monday, March 23, 2020

காயத்ரி ஜெப எண்ணிக்கையும் வாழ்க்கை முன்னேற்றம் பாவப்பிராயச்சித்தங்கள்

இயற்கை விதிக்கு முரணான செயல் பாவங்கள் எனப்படுகிறது. இவற்றை நாம் செய்யும் போது அது எமது மூளையில் முடிச்சுகளை உருவாக்கி சம்ஸ்காரங்கள் என்ற சித்தப்பதிவுகளை ஏற்படுத்தி விடுகிறது. இந்த சித்தப்பதிவுகள் எமது வாழ்க்கையில் துன்பத்தினைத் தந்துகொண்டு எமது முன்னேற்றத்தை அடைய விடாமல் தடுத்துக்கொண்டு இருக்கும். உயர்ந்த விடயங்களை கற்றுக்கொள்ள விடாமல் எம்மில் உணர்ச்சிக் கொந்தளிப்பினை ஏற்படுத்தி உள்ளத்தில் சம நிலை அற்ற தன்மையை ஏற்படுத்தி மனதையும் உடலையும் வருத்திக்கொண்டு இருக்கும். 

இந்த நிலவரத்திலிருந்து மீண்டு வர மிக அரிய சாதனம் காயத்ரி மந்திர அனுஷ்டானம். இந்த அனுஷ்டானத்தை தினசரி சந்தியாவந்தனம் கடமையாக இல்லாதவர்களும் குரு உபதேசம் பெற்று செய்துவரலாம். 


காயத்ரி மந்திரம் குறித்தளவு ஜெபம் பூர்த்திக்கு என்ன பலன் என்பதை சாஸ்திரப்பூர்வமாக கீழே தந்துள்ளோம். இந்த எண்ணிக்கைகள் தினசரி சந்தியா வந்தனம் செய்பவர்களுக்கோ, அல்லது அவரவர் குரு உபதேசப்படி காயத்ரி ஜெபம் தினசரி செய்பவர்களுக்கு மட்டுமே பலனளிக்கக் கூடியது. குருமுகமாக உபதேசம் கடைப்பிடிக்காமல் பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டவுடன் மாத்திரம் சாதனை/ஜெபம் என்று அலைந்து திரியும் கொண்ட மனமுடையவர்களுக்கு இவற்றை விட அதிக ஜெப எண்ணிக்கை தேவைப்படும். இங்கு தரப்பட்டவை சாஸ்திரப்பிரமாணம் மாத்திரமே; குருவாக்கியப்பிரமாணம் சாஸ்திரப் பிரமாணத்தை விட உயர்ந்தது என்பது மனதில் இருத்துங்கள்.

{காயத்ரி ஜெப பிரபாவம் பற்றி நண்பர் ஒருவர் கல்ப க்ரந்தங்கள், புராணங்களில் இருப்பவற்றைத் தொகுத்து தந்ததை சாதகர்களுக்காக தமிழாக்கித் தந்துள்ளோம்}

  • ஒரு கோடி ஜெபப் பூர்த்தி - மோக்ஷம்
  • லக்ஷ ஜெபப் பூர்த்தி - சொர்க்கப் பிராப்தி
  • ஐம்பதாயிரம் ஜெபம் - செல்வம் அடையவேண்டிய மனோ இச்சை பூர்த்தியாகும்.
  • ஐம்பதாயிரம் ஜெபம் -  நல்ல மனைவி/மகன்/மகள் கிடைக்க
  • ஒரு கோடி ஜெபப் பூர்த்தி - இராஜ்ய ப்ராப்தி, இன்றைய காலத்தில் அரசியலில் உயர் நிலை அல்லது வியாபார சாம்ராஜ்யம்
  • இருபத்தி ஐயாயிரம் ஜெபப் பூர்த்தி - செல்வம், உடல் நலம், ஆயுர் விருத்தி
  • இருபத்தியையாயிரம் ஜெபப்பூர்த்தி - மழை விருத்தி, தொழில் இடத்தில் செல்வாக்கு
  • ஒரு லக்ஷ ஜெபம் - உயர் பதவி பெற
  • இருபத்தியையாயிரம் ஜெபப் பூர்த்தி - உடலில் உள்ள எந்த நோயிலிருந்தும் விடுதலை
  • ஒரு கோடி ஜெபம் - பிரம்ம ஹத்தி முதலான மகாபாவங்களில் இருந்து விடுதலை. 
  • ஒரு லக்ஷ ஜெபம் - த்விஜன் (அறிவுள்ளவன்/உபதேசம் பெற்ற சாதகன்) ஆக இருந்து தங்கத்தை அபகரித்தல், மது அருந்துதல், சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட பாவத்தைச் செய்திருந்தால் அதற்கான பிராயச்சித்த ஜெபம்

  • ஒரு லக்ஷ ஜெபம் - கோஹத்தி (பசுவை துன்புறுத்திய, கொன்ற) தோஷத்திற்கு
  • ஓரு லக்ஷ ஜெபம் - பெண்களை குழந்தகளைக் கொன்றவர்கள், நன்றி கெட்டவர்கள், மற்றவர் சொத்துக்களை அபகரிப்பவரர்கள் இவர்களுடன் தொடர்பினைக் கொண்டிருப்பதால் வரும் பாவத்திற்கான பிராயசித்தம். 
  • ஒரே கோத்திரத்தில் மணம் செய்வதால் ஏற்படும் பாவத்திற்கு - ஐம்பதாயிரம் ஜெபம்
  • மாற்றான் மனைவி, குடும்ப கௌரவத்தைக் கெடுத்தல், பெண்களை கொடுமைப் படுத்தல், மற்றவர் நிலத்தை அபகரித்தல், துன்புறுத்தல், வீடுகளைக் கொளுத்துதல் போன்ற பாவப் பிராயச்சித்த ஜெப எண்ணிக்கை - இருபத்தியையாயிரம்.
  • தவறான நபர்களிடமிருந்து நன்  கொடை பெறுதல், எடுத்துக்கொண்ட உறுதிமொழியில் இருந்து தவறுதல், நித்திய கர்மம், கோயில் பணிகளில் இருந்து தவறுதலுக்கு பிராயச்சித்த ஜெப எண்ணிக்கை எட்டாயிரம். 
  • வேதத்தில் பிராயச்சித்த கர்மங்களாகக் கூறப்படுவதற்கு மாற்றாக கீழ்வரும் எண்ணிக்கை காயத்ரி ஜெபம் பயன்படுத்தலாம். 
  • தினசரி சந்தியா வந்தனம் செய்யாதவனது தர்ப்பணங்களை எந்த தேவதைகளோ, பித்ருக்களோ ஏற்றுக்கொள்வதில்லை. 
  • ஒரு தடவை காயத்ரி ஜெபிப்பது  அன்றைய பகலில் செய்த பாவங்களை அனைத்தையும் இல்லாதாக்கும். 
  • பத்துத் தடவை காயத்ரி ஜெபிப்பது அன்றைய நாளின் இரவு பகல் இரு நேரத்திலும் செய்த பாவங்களை நீக்கும். 
  • நூறு தடவை காயத்ரி ஜெபிப்பது ஒரு மாதத்தில் செய்த பாவங்களை அனைத்தையும் நீக்கும். 
  • ஆயிரம் தடவை காயத்ரி ஜெபிப்பது ஒருவருட பாவங்களை அனைத்தையும் நீக்கும். 
  • ஒரு லக்ஷ ஜெப பூர்த்தி அந்தப்பிறப்பில் செய்யப்பட்ட பாவங்கள் அனைத்தையும் நீக்கும்
  • பத்து லக்ஷ ஜெபப் பூர்த்தி எல்லாப்பிறப்புகளிலும் செய்யப்பட்ட பாவங்களையும் நீக்கும்.
Translation of this post Gayatri mantra prabhAvam 

ஆகவே சாதகர்களே நாம் ஏன் குறித்தளவு எண்ணிக்கை தினசரி சாதனை செய்து வாருங்கள் என்று கூறுகிறோம் என்பதன் அர்த்தம் விளங்கியிருக்கும்.

நாம் இந்தப்பிறப்பில் செய்த பாவங்களை வயதின் ஆயிரம் மடங்குகளில் காயத்ரி அனுஷ்டானம் செய்து நீக்கி விடலாம். உதாரணமாக உங்கள் வாழ்க்கையில் பிரச்சனை இந்தப்பிறப்பில் செய்த பாவங்களால் வருவதாக இருந்தால், உங்கள் வயது 30 என்று கொண்டால் முப்பதாயிரம் ஜெபம் தாண்டும் போது உங்கள் வாழ்க்கை மாறுதலடையும்.

அப்படி மாறுதல் அடையவில்லை என்றால் ஜெபத்தைத் தொடர ஐம்பதாயிரம் அடையும் போது உங்கள் வாழ்க்கை மன அமைதியுடையதாக இருக்கும். அதிக பாவங்களைச் செய்தவராக இருப்பின் அவற்றிற்கு பிராயச்சித்த ஜெபங்களை செய்தாகவேண்டும். இப்படி ஒரு லக்ஷ ஜெபம் பூர்த்தியாகும் போது உங்கள் பாவ சம்ஸ்காரங்கள் தீர்ந்து புது வழி பிறக்கும்.



தலைப்பு இல்லை

Our team on planning to plant vegetables to manage the forthcoming food crisis and help some of our fellow citizens! 

Every agriculture professional/farmer need to think proactively and act to prevent food crisis to our mother Land and our people!

Joint the hands!


Sunday, March 22, 2020

தலைப்பு இல்லை

நான் ஒரு பன்னீர் பிரியன், கொழும்பில் துவாரகா சென்றால் Order எடுக்கும் தம்பிமாருக்கு மெனுக்காட் கொடுக்காமல் அண்ணாவிற்கு பன்னீர் புலவு என்று குறித்துக் கொள்ளும் அளவிற்கு பிரபலம்!

அது போல் சென்னை சென்று இறங்கினால் இரண்டு வேளை வித விதமாக பன்னீர் சாப்பிடாமல் இருப்பதில்லை! 

ஆக ஊரடங்குச் சட்டம் என்பதால் பால்கார அண்ணாவிற்கு பால் விற்க முடியாத நிலவரம், அவர் விற்கும் விலைக்கே ஐந்து லீட்டர் பால் வாங்கி நன்றாக நீர் வற்றக் காய்ச்சி மிச்சம் இருந்த எலுமிச்சம் காயையும் வைத்து பன்னீர் செய்தாகிவிட்டது. 

தரமாக வந்திருக்கிறது! 

பசுமாடு வைத்திருந்து ஊரடங்குச் சட்டம் போடப்பட்டு பால் மீதமாகிவிட்டால் பன்னீராக்கிவிட்டு அடுத்த இரண்டு நாள் சாப்பாட்டிற்கு வைத்துக்கொள்ளலாம்!

அல்லது தயிராக்கி சோற்றிற்கு வைத்துக்கொள்ளலாம்!

கடைந்து வெண்ணெயாக்கி, நெய்யாக்கலாம்! 

மோராக்கி வெயில் சூட்டிற்கு பருகலா! 


Saturday, March 21, 2020

தலைப்பு இல்லை

வைரசு நோயிற்கு ஏன் ஊரடங்குச் சட்டம்?
காரண காரியம் புரியாமல் மக்களின் நடத்தையைக் கட்டுப்படுத்துவது மிகுந்த சிரமமானது. 
ஆகவே தெளிவிற்கு இந்தப்பதிவு;
வைரசை கட்டுப்படுத்துகிறோம் என்பது ஒரு வேடிக்கையான நகைச்சுவை! வைரசு ஒரு மாயக்கள்வன், எப்படி உடலுக்குள் வருகிறான், வந்துவிட்டானா இல்லையா என்று தெரியாது! வைரசு உடலிற்குள் வந்து விட்டால் எமது கலங்கள் எமது உடலில் பாதுகாப்பு அமைச்சான (defense ministry) நிர்ப்பீடனத் தொகுதிக்கு (immune system) செய்தி அனுப்பும். செய்தி பறந்ததும் நிர்ப்பீடனத்தொகுதி தனது படைகளைச் சரி செய்து சண்டைக்குத் தயாராக வேண்டும். 
இங்குதான் வைரசுடனான போரானது உடலின் பாதுகாப்பு அமைச்சான நிர்ப்பீடனத்தொகுதிக்குச் சிக்கலானது. இந்தச் சிக்கல் இரண்டு காரணிகளைக் கொண்டுள்ளது. 
1) உடல் வைரசுடனான சண்டைக்காக தனது படையினை உருவாக்கும் வேகத்தினை விட வைரசு தன்னை பெருக்கிக் கொள்ளும் வேகம் அதிகமானது. நீ ஒரு தடவை பெருகினா நான் நூறு தடவை பெருகுவேன் என்று பஞ்ச் சொல்லிக்கொண்டு வைரசு உடலிற்குள் பெருகிக் கொள்ளும்.
2) மனிதன் ஒரு அறிவு (கெட்ட) விலங்கு; வைரசு புகுந்து விட்டது என்று உடல் அறிவித்து சோர்வை, காய்ச்சலை ஏற்படுத்தி நான் போருக்குத் தயார், நீ வேறு வேலைகள் எதுவும் செய்யாமல் ஓய்வெடுத்து சக்தியை வீணாக்காமல் எனது போருக்கு ஒத்துழைப்புச் செய் என்று செய்தி அனுப்பினாலும் வேலை, பணம், கேளிக்கை என்று எவற்றாவதன் பின்னால் ஓடி நிர்ப்பீடனத்தொகுதியின் வேலையைக் குழப்பி அழிவைத்தான் தேடுவான். 
இதனால் தான் வைரசு நோய்களுக்கு ஓய்வு தான் முதல் மருந்து, எமது உடல் நிர்பீடன சக்திக்கு உதவும் வகையில் நாம் எமது உடலின் சக்தி விரயத்தைத் தடுக்க வேண்டும். 
உடலிற்குள் வைரசு புகுந்தவுடன் விளையாட்டு ஆரம்பமாகும்! வைரசு வேகமாக பல்கிப் பெருகும், உடல் அதை எதிர்த்துப் போராடத் தேவையான முழுமையான நிர்ப்பீடன சக்தியைப் பெற குறைந்தது மூன்று நாட்கள் தேவை! இது பரிபூரண ஆரோக்கியமானவர்களுக்கு!
குடி, கும்மாளம், புகை என்று உடலைக் கெடுத்து வைத்திருப்பவர்களுக்கும் சதா மன அழுத்ததில் இருப்பவர்களுக்கு, வேறு நாட்பட்ட நோய் இருப்பவர்களுக்கு இதைவிட அதிக நாள் எடுக்கும். 
முதல் தடவை புதிய வைரசினை எதிர்கொள்ள, நிர்ப்பீடனத்தை உருவாக்க உடல் மிகுந்த சிரமம் அடையும். இந்தக்கட்டத்தைத் தாண்டி விட்டால் பிறகு எப்போது உள்ளே நுழைய முயன்றாலும் தகுந்த தாக்குதலைக் கொடுத்து உடல் வெல்லும்! 
ஆகவே மக்களே வீட்டிற்குள் இருக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்கள் என்றவுடன் மற்றவர்களுக்குப் பரவி விடும் என்று எதோ ஓசியில் பொதுச் சேவை செய்கிறோம் என்ற நினைப்பை விட்டுவிட்டு, இந்த மூன்று நாள் ஓய்வு நீங்கள் வைரசு தொற்று இருந்தாலும் உங்கள் உடலை வைரசுடனான போரிற்கு தயார்படுத்தும் காரியத்திற்கான ஓய்வாக, நல்ல மகிழ்ச்சி தரும் உணவையும், குடும்பத்துடன் ஆரோக்கியத்தைத் தரும் கேளிக்கையையும் கொள்ளுங்கள்!
உடல் ஆரோக்கியமாகவும் ஓய்வாகவும் இருந்தால் எந்த நோய் வந்தாலும் உடலில் பாதுகாப்பு அமைச்சான நிர்ப்பீடனத் தொகுதி (Immune system) பார்த்துக்கொள்ளும்! நீங்கள் செய்யவேண்டியது உடலையும் மனதையும் ஓய்வாக வைத்துக்கொள்ளவேண்டியதுதான்
ஆகவே ஊரடங்குச் சட்டம் உங்களை வைரசுடனான போரிற்காக தயார்படுத்தலுக்கானது! அதன் அடிப்படை உடலிற்கும், மனதிற்குமான ஓய்வும், உங்கள் நிர்ப்பீடனத் தொகுதிக்கு உதவி நிர்ப்பீடன சக்தியை அதிகரித்தலும்!

தலைப்பு இல்லை

தற்போது கனடா முத்தமிழ் FM இல் கொரோனாத் தாக்கத்தின் சூழலியல் நன்மைகள் பற்றிய உரையாடல் 

நன்றி Suman Thevakanthan


தலைப்பு இல்லை

வீட்டில் இருப்பது பொழுதுபோகவில்லை என்று எவரும் கூறக்கூடாது! குறிப்பாக குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் பயனுள்ள வகையில் நேரத்தை கழிப்பது/களிப்பது எப்படி என்று திட்டமிட வேண்டும். 

உலக நடப்புகளை கவனிக்கிறோம் என்று பயந்து பிராணனை போக்காமல் எதிர்காலத்தை எப்படி சமாளிப்பது என்று திட்டமிட இந்த ஓய்வைப் பயன்படுத்த வேண்டும். 

கணணி மட்டும் தான் திறமை என்று இருந்தால் ஆபத்துக்காலத்தில் உணவிற்கு எங்கே போக முடியும். அடுத்த தலைமுறை பிழைக்க வேண்டும் என்றால் உணவு உற்பத்தியைப் பற்றிக் கற்பிக்க வேண்டும். வீட்டுத் தோட்டம், செயற்கை உள்ளீடு இல்லாத இயற்கை விவசாயம், செயற்கை உள்ளீடு இல்லாத உணவுப் பதனிடல், நோயணுகா விதி, மூலிகைகளையும் உணவையும் பயன்படுத்தி ஆரோக்கியமாக இருப்பது எப்படி இதுவே பிள்ளைகளுக்கு நாம் கற்பிக்க வேண்டும். 

உணவு உற்பத்தி தெரிந்த பிள்ளை தானும் பிழைத்து மற்றவர்களையும் பிழைக்க வைப்பாள்/ன்! 

தோட்டத்தில் இருந்து கொண்டு வந்த நல்ல பழுத்த எலுமிச்சம் பழம் அறுத்து ஊறுகாய் போடுவது எப்படி என்று இன்று அம்மாவிடம் நானும் மகளும் கற்றுக்கொண்டிருக்கிறோம். 

அம்ருதவர்ஷினி தனது ஆசிரியர்களுக்கு பள்ளி தொடங்கியவுடன் தனது தயாரிப்பாக இந்த ஊறுகாய் விநியோகிக்க இருக்கிறாள்!


தலைப்பு இல்லை

சில நாட்களுக்கு முன்னர் சிலேடையாக COVID-19 இனை பூமி தன்னை ஆள நினைக்கும் மனிதர் குலத்தை அடக்கி ஒடுக்கி வீட்டில் வைக்க அனுப்பிய இராணுவம் என்று கூறிப்பதிவிட்டிருந்தேன். 

இன்று அதற்குரிய ஆதாரத்தைத் தொகுத்து இணைப்பு வீடியோவில் தந்திருக்கிறார்கள். 

பூமி மாசாகி அழிந்து விடும் என்று பயம் காட்டி புதிய வரிகளையும், புதுப்புது தொழில் நுட்பங்களையும் உருவாக்கி பூமியைக் காக்கப்போகிறோம் என்று ஊளையிட்டவர்களை எல்லோரும் இரண்டு வாரங்கள் வீட்டில் இருங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று பூமி சொல்லியிருக்கிறது. 

சூழலியல் விஞ்ஞானத்தில் உயிரியல் குறிகாட்டி (Biological indicator) என்று சொல்லுவார்கள். கிணற்று நீரில் மாசினைத் தாங்கமுடியாத தவளை, மீன்கள் இருந்தால் அந்த நீர் தரமான இரசாயன மாசற்ற நீர் என்று கூறமுடியும். 

அதுபோல் வெனிஸ் கால்வாயில் டொல்பின் வருகிறது என்றால் அந்த நீர் தூய்மையாகியுள்ளது என்று அர்த்தம். 

ஆக பூமியைக்காப்பாற்ற நீங்கள் எவரும் திட்டம் போடத்தேவையில்லை, தேவையில்லாமல் அடிப்படைத் தேவைக்கு மேல் பூமியைச் சுரண்டாமல் விட்டாலே பூமி தன்னைத்தானே மீளமைத்துக்கொள்ளும்!

https://www.ecowatch.com/coronavirus-italy-air-pollution...

https://globalnews.ca/.../668.../climate-change-coronavirus/


Friday, March 20, 2020

தலைப்பு இல்லை

{ Sri Lanka declares island wide curfew from 6 pm today till Monday 6 am }

The operation was successful, but the patient died movement happening in Sri Lanka;

it is funny people react in reverse! may be that is the real solution to the problem.

My believe nature's intelligence is higher than human intelligence, it push people to fight with virus & become strength! if you are not fit enough to fight you will loss the game and eliminated; so what was happening "Panicking" may be the natural solution to the problem, to pandemic herd immunity (60% of population take the infection and create immunity) is the appropriate solution, so now very soon this outbreak reach peak and come to down & under control in Sri Lanka. 

Just my theoretical thinking

இன்று மாலை ஊரடங்குச் சட்டம் என்று அறிவித்தவுடன் அதன் நோக்கம் நடமாட்டத்தைத் தடுத்து நோய்ப்பரவலைத் தடுப்பது. 

ஆனால் மக்கள் அடுத்து என்ன நடந்துவிடுமோ என்ற பயத்தில் பொருட்கள் வாங்க என்று வீதியில் குவிந்து நெரிசலில் திரிகிறார்கள். 

வைரசு எப்படியெல்லாம் பரவும் என்று கூறப்படுகிறதோ அப்படி நடப்பதற்கான சாத்தியம் முழுமையாக சில மணி நேரத்திற்குள் நடந்தாகிவிட்டது. 

இப்போதைக்கு தேவையான அளவு வைரசு பரவியிருக்கும்! இனி lock down, shut down எல்லாம் செய்தாலென்ன செய்யாவிட்டால் என்ன என்ற நிலவரத்திற்குத் தான் வரப்போகிறது. 

ஆகவே இனி உடலை ஆரோக்கியமாக வைத்துகொண்டு உடல் நோய் எதிர்ப்பு சக்தியால் போராடத் தயாராகுங்கள் மக்களே! 

வெகுவிரைவில் 60% நோய்த் தொற்றாகி மந்தை நிர்ப்பீடனம் உருவாகி கொரோனாவினை எதிர்க்கும் வலுவுள்ள மனிதர்களாக மாறுவோம்!   

போருக்கு தயாராகுங்கள் மக்களே!

Photo credit: Anuthinan Suthanthiranathan


புனித தலங்களும் நோய்ப் பரவலும்

நண்பர் ஒருவர் எல்லா மதஸ்தலங்களும் கொரோனா வைரசினால் மூடப்பட்டுவிட்டது. கடவுளிற்கே வைரசு பயமா? புனித நீர் கொரோனா பரவும் என்ற பயத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது, பிறகு எப்படி புனித நீர் என்றாகும் என்று கேள்வி எழுப்பினார்; 

சுத்தம் அசுத்தம் என்பது இயற்கையிற்கு பயந்த மனிதனின் பாகுபாடு; இயற்கையோ தனக்கு தரும் எதையும் வெறுத்து ஒதுக்காமல் எப்படி உயிர்களுக்கு நன்மை தரும் ஒன்றாக மாற்றுவது என்பதற்கு வேலை செய்துகொண்டிருக்கிறது. மண்ணில் போடும் கழிவை உரமாக மாற்றுகிறது, மண் உரமாக்கவே முடியாத பிளாஸ்டிக் கழிவினை உருவாக்கி இயற்கையே சவால் விடும் அறிவினைப் பெற்றதுதான் இன்றைய மனித குலத்தின் சாதனையும் பிரச்சனையும்; 

நாம் புனிதம் என்று நினைக்கும் நீர் தான் நவீன அறிவியலில் அதியுச்ச அசுத்தமாக இருக்கும், புராதன கலாச்சாரம் இயற்கையின் தக்கனத் தேர்விற்கு மதிப்புக்கொடுத்து, மந்தை நிர்ப்பீடனத்தை உருவாக்க இத்தகைய முறைகளைப் பின்பற்றினார்கள் என்று நினைக்கிறேன். 

அவர் இன்னும் புரியும் படி சொல்லுங்கள் என்றார்; 

கோவில்கள், சர்ச்சுகள் மக்கள் அனைவரும் கூடும் இடம். தற்போதைய சுத்தம் என்ற வரைவிலக்கணப்படி மிகவும் அசுத்தமாகக்கூடிய இடங்கள், புனிதமான நதி, இடங்கள் என்பதன் மறுபுற அர்த்தம் நாம் அதிகம் அசுத்தப்படுத்தப்போகும் நதி என்பதாகும். எமது அசுத்தங்களைக் கொட்டப்போகும் இடம் என்பதாகும். ஆகவே நாம் புனித தலங்கள் என்று நம்பும் இடங்கள் அனைத்தும் பௌதீகமாக மிக அசுத்தமான இடங்கள் ஏன் என்றால் மிகவும் அசுத்தமான மிருகமான மனிதன் தனது பாவங்களையும், அசுத்தங்களையும் கொட்டும் இடங்கள். 

அப்படியானால் இந்த அசுத்தங்கள் கேடு விளைவிக்காதா என்றால் அளவிற்கு மிஞ்சினால் அம்ருதமும் நஞ்சு என்ற விதிப்படி அளவு மீறினால் கேடு விளைவிக்கும். அளவோடு இருந்தால் உடல் அதை தனக்கு ஏற்றதாக மாற்றிக்கொள்ளும். 

இப்படி உடல் தீயதை நல்லதாக மாற்றிக்கொள்ள உணர்வு (Consciousnesses) உயர் நிலையில் இருக்க வேண்டும். 

இப்படி உணர்வை உயர் நிலைக்கு கொண்டு செல்லும் பயிற்சிகளையே ஆன்மீகம், சாதனை என்றார்கள். அவற்றை அடைய கோயில், குளம், மலை, தீர்த்தம் என்று உருவாக்கி வைத்தார்கள். 

இந்த இடங்களுக்கு செல்லும் போது உணர்வு மிக உயர்ந்த நிலையில் (our consciousnesses need to be in higher level) இருக்க இறைவனை எண்ணச் சொன்னார்கள். உயர்ந்த உணர்வு நிலை (elevation of consciousnesses) மனதினை வலுப்படுத்தும், மனம் வலுவடைந்தால் உடல் வலிமையடையும். ஆகவே புனித இடங்களிற்குச் செல்லும் போது உயர் உணர்வு நிலையைப் பெற மனப்பண்பு மிக அவசியமாகியது. 

இப்படி உயர்ந்த உணர்வுடன் அசுத்தமான இடத்தை அணுகும் போது அந்த அசுத்தம் எமக்குள் சேர்ந்து அந்த அசுத்தத்தை வென்று நிர்ப்பீடனம் உருவாகிறது. அசுத்தம் எம்மை வெல்லாத எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிறோம். இதை இன்னும் வலுப்படுத்த ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு மூலிகை, வாசனைப் பூ பிடிக்கும் என்று உருவாக்கி

சக்திக்கு வேப்பிலை,

விஷ்ணுவிற்கு துளசி,

பிள்ளையாருக்கு அருகம்புல்,

சிவனுக்கு வில்வம்,

என்று சொல்லி அதனை தீர்த்ததில் கலந்து, உபசாரமாகப் படைத்து பிரசாதமாகக் கொடுத்தார்கள். 

இவை எல்லாம் பலன் தருவதற்கு சமூகம் ஒரு குறித்த நிபந்தனையில் இயங்கவேண்டும். இன்று அந்த ஒழுங்குமுறை அற்றுப் போய் இவற்றை தமது பணம், பேராசை, புகழ், அதிகாரம் என்பவற்றிற்காக போலியாகப் பின்பற்ற இவ்வகையான முறைகள் பலன் தராமல் போகத்தொடங்கியது. 

ஆக கோவில், சர்ச்சு, நதிகள், மலைகள் ஏறுவதெல்லாம் உணர்வினை உயர்வாக்கி, மனதினைச் சுத்தப்படுத்தி, அங்கு உள்ள அசுத்தங்களை ஏற்று, அதை வென்று நிர்ப்பீடனத்தை ஏற்படுத்தி வலிமையாக்கும் நிலையைப் பெறுவதற்காக. 

{அறிவியலை மதமாகப் பின்பற்றிக்கொண்டு மதங்களைக் கேலி செய்வதையே அறிவியல் என்று நம்பிகொண்டிருக்கும் அறிவியல் பக்தர்களே, நான் ஏதோ மதத்திற்கு முட்டுக்கொடுக்கிறேன் என்ற முன் துணிபுடன் வாசித்து விட்டுக் கடுப்பாகும் நாத்திக நண்பர்கள் கவனத்திற்கு; நான் ஒரு சூழலியல் சிந்தனையாளன் எனது சிந்தனை நவீன அறிவியலையும், புராதன யோக விஞ்ஞானத்தையும் அடிப்படையாகக் கொண்டது; ஒவ்வொரு செயலுக்கும் மறைவான காரணம், ஏன் அது நடக்கிறது என்ற தத்துவத்தையும் ஆராயும் நோக்கில் இவற்றை அணுகுகிறேன்}


Thursday, March 19, 2020

கொள்ளை நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள எளிய மனச்சாதனை - சாதகர்களுக்கு மட்டும்

தற்போதைய கொள்ளை நோய் நிலவரத்தில் குரு அகத்திய காயத்ரி சாதனா செய்யக்கூடியவர்களுக்கு உதவக்கூடிய சில பிரயோக முறைகளை இங்கு கூறுகிறோம்; பலர் வீட்டிலிருந்து வேலை செய்வதால் இந்த சாதனையை தாராளமாகச் செய்யலாம்.

முதலில் உங்கள் தினசரி குரு அகத்திய காயத்ரி சாதனாவை செய்து முடித்துவிடுங்கள். புதியவர்களாக இருந்தால் சாதனை முறையினை இங்கு பாருங்கள்.

அதன் பின்னர் கண்களை மூடி தேவி பேரொளி வடிவமாக இருப்பதை மனக்கண்ணில் பார்த்து தீர்க்க சுவாசத்துடன் சில நிமிடங்கள் அந்த ஒளியை மனக்கண்ணில் பார்த்து அந்த ஒளி மெதுவாக உங்கள் தலையுச்சியினூடாக முள்ளந்தண்டினூடாகப் பரவி மூலாதாரம் வரை பரவுவதாக பாவியுங்கள்.  இப்படிப் பரவிய ஒளி ஒவ்வொரு ஆதாரங்களினூடாகவும் உடலில் உள்ள நரம்புக்கலங்களில் பரவுவதாக பாவிக்க வேண்டும்.

தலையில் மூளையில் உள்ள ஒவ்வொரு கலங்களும் இந்த ஒளி பரவி ஒவ்வொரு கலத்தையும் ஆரோக்கியமாக்குகிறது என்று மனதினால் காணவேண்டும்.

பின்னர்

  1. கண்கள்
  2. மூக்கு, சுவாசக்குழாய், சுவாசப்பைக்குள் இந்த ஒளி பரவி இரத்தத்தில் கலப்பதை பாவிக்க வேண்டும். 
  3. வாய், நாக்கு, உணவுக்குழாய், இரைப்பை, கல்லீரல், மண்ணீரல், சதையி, சிறுகுடல், பெருங்குடல், குதம் வரை பரவி அனைத்துக்கும் இந்த ஒளி பரவி அவற்றை உயிர்ப்படையச் செய்வதாக பாவிக்க வேண்டும். 
  4. இப்படி தலை முதல் காலை வரை ஒவ்வொரு உறுப்பின் வெளிப்புறத்தையும் கவனித்து அவற்றில் இந்த ஒளி நிரம்பி வெளியேறுவதாகப் பாவிக்க வேண்டும். 
  5. இறுதியாக எமது உடலில் இருந்து இந்த ஒளி நிரம்பி வெளியாகி எம்மை சூழ ஒரு ஒளி வட்டத்தை உருவாக்குவதாக பாவிக்க வேண்டும். 
  6. இந்த ஒளி வட்டத்திற்குள் எந்த தீய சக்தியும் வரமுடியாது. 
  7. எம்முடன் தொடர்பு கொள்ளும் எல்லோரும் இந்த சக்தியைப் பெற வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். 
  8. ஒவ்வொரு உறுப்புகளில் எமது மனக்கண் பார்வையைச் செலுத்தும் போதும் ஒரு தடவை காயத்ரி மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.
இப்படி எமக்கு பாவனையைச் செய்த பின்னர் எமது குடும்ப உறுப்பினர்களுக்கு {தாய், தந்தை, மனைவி/கணவன், பிள்ளைகளுக்கு} எமது மனகண்ணில் இதோபோல் பாவனையை  நாம் செய்யலாம். அவர்களைத் தவிர்ந்து வேறு எவருக்கும் இதைச் செய்ய முயல வேண்டாம். 

இந்த அறிவுறுத்தலை பலதடவை படித்து நன்கு புரிந்த பின்னர் செய்ய முயற்சிக்க வேண்டும். சந்தேகங்கள் இருப்பின் எம்முடன் உரையாட வேண்டுகிறோம். 


Wednesday, March 18, 2020

தலைப்பு இல்லை

{எவரும் படத்தைப் பார்த்துவிட்டு நான் மருந்து கண்டுபிடித்திருக்கிறேன் என்று கற்பனை செய்துகொள்ளக்கூடாது. இணைக்கப்பட்ட படத்திற்குரிய விமர்சனமே இந்தப்பதிவு, முழுமையாகப் படிக்காமல் படத்தைப் பார்த்துவிட்டு உடனடியாக முன் துணிவிற்கு வரவேண்டாம்} 

இன்று ஒரு நண்பர் சித்தர்கள் கொரோனாவைப் பற்றிக் கூறியுள்ளார்கள் கொரோனாக்கு மருந்து கூறியுள்ளார்களாமே என்று என்னிடம் கேள்வி அனுப்பியிருக்கிறார். 

சித்தர்கள் எந்த வியாதிக்கும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றேன், இதெல்லாம் வீண் வெட்டி ஜம்பம், தமிழனா இருந்தா share பண்ணு போன்றவொரு வீண் வெட்டி ஜம்பப் பேச்சுத்தான் என்றேன். 

உடனே அவர் அப்படியே பிரமித்துப்போய் நீங்கள் இப்படிப் பேசலாமா? என்றார். 

அதிலென்ன தவறு என்று நான் கேட்டேன்? 

சித்தர்களைக் குறைத்து மதிப்பிடுவது போல் சொல்கிறீர்களே என்றார்?

நான் எங்கே குறைத்துச் சொல்கிறேன், சித்தர்களின் மருத்துவத்தின் தத்துவத்தை ஒழுங்காகப் பயிலாமல் மேற்கத்தேய மருத்துவம் தான் நம்பகமான மருத்துவம் என்று உள்ளூர நம்புபவர்களின் அறியாமைப் பேச்சுதான் இது என்றேன். 

அவர் குழம்பி விட்டு இன்னும் விரிவாகச் சொல்லுங்கள் என்றார். 

சித்த மருத்துவம் குறித்த தத்துவ அடிப்படையைப் பின்பற்றுகிறது. இதன்படி மனிதன் 96 தத்துவங்களால் ஆனவன். இந்த 96 தத்துவங்களில் நோய் என்பது திரிதோஷம் சம நிலை இழத்தலும், சப்த தாதுக்கள் கெடுதலும். உடலை ஒரு இயந்திரமாக எடுத்தால் இந்த திரிதோஷமும், சப்த தாதுக்களுமே main switch. இவற்றை சரி செய்வதே வைத்தியம் எனப்படுகிறது. இந்த இரண்டையும் சரி செய்பவையே மருந்துகள் எனப்படுகிறது. திரிதோஷத்தையும் சப்த தாதுக்களையும் சரிசெய்தால் நோய் குணமாகும். 

இந்த இரண்டும் சரி செய்யப்பட்டால் பின்னர் உடல் எனும் கோட்டையின் வாயில்களான ஐம்புலன்களையும், அந்தக்கரணங்களையும், பிராணனையும் சரியாக வைத்திருந்தால் ஆரோக்கியம் வாய்க்கும் என்கிறது. 

ஆகவே சித்த ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படை; நீ வலுவாக உனது திரிதோஷம், சப்த தாதுக்களை வைத்துக்கொள்! வெளியில் இருந்த எதுவந்தாலும் அவை பார்த்துக்கொள்ளும், உனது கோட்டையை தினாச்சாரத்தால், நோயணுகா விதியால் சுத்தம் செய்து கொள் என்பதாகும்.

இந்த மருத்துவமுறை பிரபஞ்ச ஒழுங்கினை மதித்து நடக்கும் போது மாத்திரம் தான் நன்மை செய்யும்! 

பிரபஞ்ச ஒழுங்கினை மதிக்காத குழப்பும் குள்ள நரித்தனப் புத்திசாலி மனிதன் உருவாகிய பின்னர், உனக்குள் இருக்கும் திரிதோஷ சம நிலையும், சப்த தாதுக்கள் என்று எதுவும் இல்லை, நீ உனது நிர்ப்பீடனத்தை நம்பாமல் நான் தரும் மருந்து உனக்கு வரும் நோயின் காரணியை அழித்துதான் நோயை வெற்றி பெறும் என்ற கோட்பாட்டினை சிகிச்சை என்று கொண்டுவந்து, உனது எதிரியை அழிக்கும் போது உனது படையும் சாகும் என்று பக்கவிளைவையும் இயல்பான ஒன்று என்று ஏற்றுக்கொண்டு மருந்துகளைக் கண்டுபிடிக்கிறோம்; நோய்களைக் கண்டுபிடிக்கிறோம் என்ற நிலைதான் இன்றைய நவீன மருத்துவம். 

ஆக பிரபஞ்ச ஒழுங்கை மதித்து ஒழுகுபவர்களுக்கு சித்த ஆயுர்வேத மருத்துவம் பலன் தரும். 

ஆகவே சித்த ஆயுர் வேத மருத்துவத்தில் நோய்களுக்கு மருந்தினைக் கண்டுபிடிப்பதில்லை. வரும் குணங்குறிகளால் எந்த தோஷமும், எந்த தாதுவும் கெட்டிருக்கிறது என்பதைக் கவனித்து அவற்றைச் சீர் செய்யும் குண, வீரிய, விபாகத்தினை சரி விகிதத்தில் உடலுக்குள் தந்தால் நோய் உடலை விட்டுப்போகும். ஆனால் இது பலனளிக்க அனுபானம், பத்தியம், துணை மருந்து, தினாச்சாரம் என்பவை அவசியம். இவை எல்லாம் கடைப்பிடிக்க முடியாத குழம்பிய சமூகத்தில் சித்த ஆயுர்வேத மருத்துவம் சரியான பலனை தராது என்ற போது நவீன மருத்துவமே சரியான ஒற்றைத்தீர்வாக காட்சியளிக்கிறது.

யாராவது சித்த மருத்துவத்தில் வைரசுக்கு, பற்றீரியாவுக்கு மருந்து கண்டுபிடிக்கிறேன் என்றால் அவர் சித்த மருத்துவ தத்துவம் தெரியாத மேற்கத்தேயத்தைப் பார்த்து வியந்து அதுதான் இதுதான் அது என்று குழம்பிப்போனவர் என்றுதான் அர்த்தம்! 

இப்படி சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் வீணான வேலை பார்த்து புகழ் சம்பாதிக்கும் நோக்கம் சித்த மருத்துவத்திற்கு எந்தப் புகழையும் தரப்போவதில்லை.

உண்மையில் சித்த மருத்துவத்தை வளர்க்கும் ஆர்வம், அர்ப்பணிப்பு இருந்தால் ஒரு சித்த மருத்துவ மூல நூலையாவது திரும்பத்திரும்பக் கற்று, ஆராய்ந்து, தெளிந்து மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து சித்த ஆயுர்வேத மருத்துவ முறை பலனளிக்கக்கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப பாடுபடுங்கள்! 

இரண்டு மருத்துவ முறைகளும் வெவ்வேறான தத்துவ அடிப்படையுடையவை, ஒன்றுக்கொன்று Complement ஆக இருக்கக்கூடியவை; ஆனால் இன்றைய அறியாமை மிகுந்தவர்களால் ஒருவர் மேல் இன்னொருவர் பழியும், ஏளனமும் செய்து குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.


Sunday, March 15, 2020

சீனப்பாரம்பரிய மருத்துவமும் கொரோனா வைரசும்

கொத்தமல்லியும் வெள்ளைப்பூடும் மருந்தாகுமா, பாரம்பரிய மருத்துவம் பலன் தராது, WHO வந்து மருந்து தரும் என்று அறிவியல் பேசிக்கொண்டிக்கும் வெங்காயங்களுக்கு ஆமாடா பலன் தரும் என்று சீனா அதிர்ச்சி செய்தி அளித்திருக்கிறது! 

கொரோனோ வைரசு குணமாக்கலில் சீன அனுபவம் எமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த ஆயுர்வேத மருத்துவர்களுக்கு நம்பிக்கை தரும் செய்தி! 

உடனடி அவசரத்திற்கு நவீன மருத்துவ வசதிகளையும், ஆபத்துக்கட்டம் தாண்டியபின்னர் துரித குணமாதலுக்கு பாரம்பரிய மருத்துவமும் சேர்ந்த மாதிரியுருவை சீனா பின்பற்றியிருக்கிறது. 

As of late last month, more than 85% of all coronavirus patients in China -- about 60,000 people -- had received herbal remedies alongside mainstream antiviral drugs, according to the Ministry of Science and Technology.

TCM treatments are not just being carried out in Wuhan, the epicenter of the outbreak.

In eastern Zhejiang province, more than 95% of coronavirus patients had been given traditional medicines as of late February, according to the state run Global Times.

In Beijing, that ratio stood at 87%. Among those who had received TCM, 92% had shown improvement, said Gao Xiaojun, a spokesperson for the Beijing Health Commission.

"Traditional Chinese medicine has played an active role in improving the recovery rate and lowering the fatality rate among patients," he told a press conference late last month.

However, Yanzhong Huang, a senior fellow for global health at the Washington-based Council on Foreign Relations, said the claimed improvement rate of 92% should be taken with a pinch of salt.

விபரம் முதல் Comment இல்..................

{எழுதப்பட்டிருக்கும் வாக்கியங்களை சரியான அர்த்தத்தில் படிக்கவும், வெள்ளைப்பூடும், கொத்தமல்லியும் கொரோனாவைக் குணப்படுத்தும் என்று கூறப்படவில்லை, தமிழில் அணி இலக்கணம் பாவித்து உயர்வு நவிற்சியில் எழுதப்பட்டதை எவரும் மருத்துவ ஆலோசனையாக எடுக்கவோ, அறிவியல் மேதைகளாக தலை சூடாகவோ கூடாது} 


சூரியனும் வைரசும்

தைத்திரிய ஆரண்யக முதல் ப்ரச்னம் அருணோப நிஷத் என அழைக்கபடும் சூரிய நமஸ்கார ப்ரச்னம் ஆகும். 

இதன் ஒன்பவதாவது அனுவாகம் (Chapter என்று வைத்துக்கொள்ளுங்கள்!) சூரியனை தினசரி உபாசிப்பவர்களுக்கு அபம்ருத்யு இல்லை என்றும் விஷத்தை வெல்லும் ஆற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள் என்றும் ஒரு குறிப்பு வருகிறது (36 & 37 வது மந்திரங்கள்)

சூரியனை உபாசிப்பது என்பது உணர்வை (consciousnesses) உணர்வின் வழி மனதை சூரிய உதயத்தின் போது புத்தியைத் தூண்டும் பரம்பொருளின் ஒளியாக பாவித்து காயத்ரி மந்திர ஜெபம், சூரிய நமஸ்கார யோகாசனப்பயிற்சி என்பவை உள்ளடங்கும். 

இது புராதன குறிப்பு; நிற்க

1919ம் ஆண்டு ஏற்பட்ட இன்புளுவென்ஸா வைரசு தொற்றுப் பற்றியும் இன்னும் இரண்டு கொள்ளை நோய்ப்பரவல்கள் பற்றியும் அதன் தாக்கத்தில் பரந்த வெளியில் சூரிய ஒளியில் சிகிச்சை செய்யப்பட்ட நோயாளர்கள் விரைவாகக் குணமடைந்தார்கள் என்பதும், இறப்பு விகிதம் குறைந்ததையும் சுட்டிக்காட்டி 2009 ம் ஆண்டு America Journal of Public Health இல் இரண்டு ஆய்வாளர்கள் ஆய்வுக்கட்டுரை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்கள். 

{Hobday, R. A., & Cason, J. W. (2009). The Open-Air Treatment of PANDEMIC INFLUENZA. American Journal of Public Health, 99(S2), S236–S242. doi:10.2105/ajph.2008.134627 }

இந்த ஆய்வுக்கட்டுரையின் 45 தொடக்கம் 50 வரையிலான reference list இன்புளுவென்ஸா வைரசினை சூரியனின் புற ஊதாக்கதிர்கள் எப்படி வீரியத்தைக் குறைக்கிறது, அழிக்கிறது என்பது பற்றிய ஆய்வுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. 

அந்த ஆய்வாளரின் நூல் The healing Sun - குணப்படுத்தும் சூரியன்.

மற்றது அருணோபநிஷத் விளக்கவுரை

{ குறை கண்டுபிடிப்பாளர்களுக்கு; எங்களுடைய வேதத்தில் அப்படிச் சொல்லியிருக்கிறது, இப்படிச் சொல்லியிருக்கிறது என்று நான் குறிப்பிட்டு பெருமை பேச வரவில்லை; எனது வாசிப்பின் ஞாபக சக்தி இவற்றை ஒருங்கிணைத்துத் தருகிறது, அவற்றை மேலதிக தகவல்களுக்கும், ஆய்வுக்கு, சிந்தனைக்கு இங்கு பகிர்கிறேன்}


கொரோனா வைரசும் 05 G மொபைல் வலைப்பின்னலும்

குவாண்டம் லீப் என்பது சடுதியான மாற்றம் அல்லது சடுதிப் பாய்ச்சல் என்று பொருள்படும். இன்றைய கொரோனா வைரசின் தாக்கத்திற்கும், முன்னைய கொள்ளை நோய்களுக்கும் (Pandemic) பூமியின் மின் காந்தப்புலத்தில் ஏற்பட்ட குவாண்டம் லீப் காரணம் என்றொரு கருதுகோளை Anthroposophy என்ற மறையியல் கோட்பாட்டாளர்கள் முன்வைக்கிறார்கள். 

கடந்த 150 வருடங்களுக்குள்ளான கொள்ளை நோய்களுக்கான காலக்கோட்டுடன் இது பொருந்துவதை சுட்டிக்காட்டுகிறார்கள். 

1900ங்களில் வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்ட ரேடியோ அலைகளின் விளைவாக 1919ம் ஆண்டும் Spanish flue உருவாகியது. 

1947 இல் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ரேடார் அலைகள் உலகமயமாக்கலினால் கொள்ளை நோய்த்தாக்கத்தை உலகம் அனுபவித்தது.

1968 இல் பூமியைச் சுற்றி செயற்கைக் கோள்கள் நிலை நிறுத்தியதன் பின்னர் Hong Kong Flue 

வைரசு என்பது உடல் இந்த அலைகளால் நச்சாக்கம் அடைந்து வெளிவரும் துணிக்கைகள் என்று கூறப்படுகிறது. 

கடந்த ஆறுமாதங்களுக்குள் உலகம் முழுக்க 05G தொலைத்தொடர்பு அலைகளால் மிகப்பெரிய குவாண்டல் லீப் நடைபெற்றதால் மக்களின் உடல் நச்சடைந்ததாலேயே இந்தக் கொள்ளை நோய் உருவாகியுள்ளதாக Dr. தோமஸ் கொவான் கூறுகிறார். 

மனிதன் என்பவன் பௌதீகமானவன் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் அடிப்படையில் மின்காந்த சக்தியினால் ஆனவன், ECG, EEG என்பவை இதற்கு ஆதாரம். 

ஆகவே பூமியின் மின்காந்தப்புலத்தில் உருவாகும் குவாண்டம் லீப் மனித உடலில் மாற்றங்களை உண்டாக்கும் என்பது மறுக்க முடியாத அனுமானமாகிறது. 

உலகின் முதல் 05G அலைக்கற்றை நாடான சீனாவில் இது தொடங்கியதற்கு காரணமாகக் கூறுகிறார்.

ஆக இந்தக் கருதுகோள் உண்மையானால் 05G வலைப்பின்னல் இல்லாத இலங்கையில் கொரோனா தாக்காது என்று நம்புவோமாக! 

{இங்கு எதையும் உண்மை என்று கூறி அடிப்படை வாதம் பேசும் நோக்கம் அல்ல; பகிரப்படும் தகவல்கள் வெறும் அறிவிற்கானவை}

வீடியோ இணைப்பு முதல் Comment இல்...


Friday, March 13, 2020

தலைப்பு இல்லை

2006ம் ஆண்டளவில் ஜேம்ஸ் லவ்லொக் என்ற அறிவியலாளர் "பூமியின் பழிவாங்கல் (revenge of Gaia என்பதன் சரியான தமிழாக்கம்) நூலை வெளியிட்டார்.

இதன் சாராம்சம் பூமி எப்படியாவது தன்னைதானே சம நிலைப்படுத்திக்கொள்ளும், அப்படி சம நிலைப்படுத்தும் போது மனிதனால் அதைச் சமாளிக்க முடியுமா? பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமா என்பதை அறிவியல் கருதுகோள்களுடன் இந்த நூலில் விளக்கியுள்ளார். 

இயற்கை நுண்மையானது; தனது பழிவாங்கல்களை கச்சிதமாக செய்யும்; இதுவும் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் சாம, பேத, தான, தண்டம் என்ற படிமுறையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். 

பூமியின் அதி உச்ச பிரச்சனை மனிதன் தனது பொருளாதார வளர்ச்சிக்காக வளியை மாசுபடுத்திக்கொண்டிருப்பது. மனிதனை சிறிது காலத்திற்கு வீட்டிற்குள் முடக்கினால்தான் பூமி தன்னை சம நிலைப்படுத்திக்கொள்ளலாம் என்ற அளவிற்கு பூமியை நெருக்கிய மனிதனிற்கு பாடம் புகட்ட நினைத்த பூமி தனது COVID-19 இராணுவத்தை இறக்கியது. 

அதன் முதற்கட்ட அதிரடித்தாக்குதலில் சீனாவின் வானத்தைத் தூய்மையாக்கி நீலவானமாக்கியது. 

https://youtu.be/9654d4dwVmw

அடுத்து ஐரோப்பாவில் களமிறக்கி வானத்தில் புகையைக்கக்கி அசுத்தப்படுத்தும் விமானங்களை படிப்படியாகக் குறைத்துக்கொண்டு வருகிறது. 

வீட்டிற்கொரு வாகனம் என்று வைத்துக்கொண்டு வளிமண்டலத்தை அசுத்தப்படுத்திக்கொண்டிருப்பவனை எல்லாம் வீட்டிற்குள் முடங்கச் செய்தது. 

இறுதியில் அசுத்தக்காற்றினைச் சுவாசித்து நுரையீரலைப் பலவீனப்படுத்திக்கொண்டுருப்பவனின் நுரையீரலைத் தாக்கி அழித்துக்கொண்டிருக்கிறது!

So be careful with intelligence of Nature! Revenge of Gaia


மந்தை நிர்ப்பீடனம்- Herd Immunity

புதிய கொள்ளை நோய் (Pandemic) உருவாகினால் அந்த நோயினை மொத்த சனத்தொகையில் 60%மானவர்கள் உள்வாங்கி அதற்குரிய நிர்ப்பீடனத்தை (Immunity) உருவாக்கினால் தான் அந்த நோயினது பரவல் தடுக்கப்படும். இதுவே மந்தை நிர்ப்பீடனம் எனப்படுகிறது. 

இந்த நிர்ப்பீடனத்தை 60% இற்கு அதிகமான சனத்தொகை அடைந்தவுடன் அந்த நோய் வீரியமிழக்கும். 

தடுப்பூசிகளது தத்துவம் இதுதான், பெருமளவில் பலருக்கு இந்த மந்தை நிர்ப்பீடனத்தை உருவாக்குவதுதான் இலக்கும். 

மனித உடலிற்குப் பழக்கப்படாத புதிய அழிவு சக்தி COVID-19 ஆக உலகத்திற்குள் இறங்கியிருகிறது.

ஆகவே சாப்பாட்டினைப் பதுக்கிக்கொண்டு வீட்டிற்கு பதுங்கிவிட்டால் நோயிலிருந்து தப்பிவிட முடியாது; நோயை எதிர்த்துப் போராடும் வலிமையை உடலும், மனதும் பெற்றிருக்க வேண்டும். 

நிர்ப்பீடனம் என்பது பல்கல உயிரினம் ஒன்று தனக்கு வெளியே இருந்து வரும் தாக்கத்திற்கு தனது சம நிலையைப் பேணும் தன்மையைக் குறிக்கும். சித்தாயுர்வேதத்தில் திரிதோஷ சமநிலை. 

நோய் குணமாவது என்பது குலைந்த இந்தச் சமநிலை மீண்டும் சரியாவது; ஆகவே உடல் நிர்ப்பீடனம் அடைதலே கொள்ளை நோய்களிலிருந்து தப்பும் வழி! 

உடல் நிர்பீடனம் பேண முதலில் நல்ல மன ஆரோக்கியம் அவசியம்; வீணான மன அழுத்தம் இன்றிய மகிழ்வான மனம் தேவை! 

உடலைப்பேணும் சாத்வீக உணவு அவசியம்;

நமக்கும் இது நடந்துவிடுமோ என்ற பயம், பதட்டம் இருக்கக்கூடாது; 

ஆகவே உறுதியுடன் எதிர்கொள்வோம் கொரோனாவை!   


Tuesday, March 10, 2020

நோய் வருதலுக்கான சில சூக்ஷ்ம காரணங்கள் - 02

ஆரோக்கியம் என்பது பரிபூரண ஒத்திசைவுடன் மனிதனின் அகமும் (மனம், எண்ணங்கள், உணர்ச்சிகளும்) பௌதீக உடலும் இயங்கும் நிலையைக் குறிக்கும்.

ஆரோக்கியத்தின் சிதைவு என்பது இந்த ஒத்திசைவுத் தன்மையைக் குலைக்கும் forces of disintegration தன்மை உருவாகும் போது ஆரோக்கியம் கெட ஆரம்பிக்கிறது. 
இது மன அளவில் பேராசை, பொறாமை, பகை, குரோதம் போன்ற தீய உணர்ச்சிகளாலும் பயம், வெறுப்பு, சலிப்பு போன்ற உணர்ச்சிகளாலும் ஆரம்பமாகிறது. இந்த உணர்ச்சிகள் தோன்றத் தொடங்கியதும் இவற்றின் தூதுவர்களாக இருக்கும் பௌதீக சிறிய நுண்கிருமிகள் அவற்றை பௌதீகத்தில் சாதிக்கக் கூடிய சூழல் உருவாகிறது. 
வைரசுகளும், பற்றீரியாக்களும் They are forces of disintegration at physical level. இவை எம்மைச்சூழ எங்கும் நிறைந்தே இருக்கிறது. எப்போது தீய இச்சா சக்தி (ill Will) எம்மைச் சூழ பரவ ஆரம்பிக்கிறதோ அப்போது இவை வலிமையாக மனிதனைத் தாக்க ஆரம்பிக்கிறது. பய உணர்ச்சி இவை ஊடுருவத் துணைபுரியும் முதன்மை ஆயுதம். இந்தப் பய உணர்ச்சிக்கு முன்னர் இவற்றைப்பற்றிய தேவையற்ற ஆராய்ச்சி அவற்றை சிவப்புக் கம்பளம் இட்டு வரவேற்று எமது பாதுகாப்புக் கவசத்தை உடைக்கும். 
{இந்த உரையாடல் யோக சாதனை செய்யும், மனம், உணர்வு, பிராணன் என்பவற்றைப் பற்றிய அடிப்படைப் புரிதல் உள்ள சாதகர்களுக்கானது; ஆகவே யோகம் பயிலாதவர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொண்டு குழம்பத் தேவையில்லை; மேலும் இது மறையியலில் (Occultism) ஆர்வமுள்ளவர்களுக்கானது; எவரும் அரைகுறையாக அறிவியல் படித்துவிட்டு வீண் விவாதங்களுக்கு வரவேண்டாம்; நான் தேவையான அளவு environmental pathology & epidemiology, virology படித்த புரிதலுடன் யோக மறையியல் அனுபவத்துடன் தான் இந்தப்பதிவுகளை எழுதுகிறேன்}

நோய் வருதலுக்கான சில சூக்ஷ்ம காரணங்கள்

நோய் வருதலுக்கான சில சூக்ஷ்ம காரணங்கள்;

ஸ்ரீ அன்னையின் உரையாடலிலிருந்து சில பகுதிகள்; இது இன்றைய காலப்பகுதிக்குப் பொருத்தமானது. 

{இந்த உரையாடல் யோக சாதனை செய்யும், மனம், உணர்வு, பிராணன் என்பவற்றைப் பற்றிய அடிப்படைப் புரிதல் உள்ள சாதகர்களுக்கானது; ஆகவே யோகம் பயிலாதவர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொண்டு குழம்பத் தேவையில்லை;}

நோய்வருதலுக்குக் இரண்டு காரணிகள் கருத்தில் கொள்ளப்படுகிறது. வெளியிலிருந்து உங்களைப் பாதிக்கும் காரணியும் உங்கள் அகத்திலிருந்து வரும் காரணியும். 

உங்களது அகக்காரணியின் ஒருபகுதி நோய் வருதலுக்குக் காரணியாக இருக்கிறது, அந்தப்பகுதி உங்களுக்கான பாதுகாப்பினை நீக்குகிறது. பாதுகாப்புத் தரும் காரணியை எதிர்த்து ஒதுக்குகிறது. சில சமயம் அந்தக்காரணியே நோயினை உங்களுக்குள் வரவேற்கிறது. இத்தகைய சிறு அசைவு உங்களில் (உங்கள் உணர்வு, மனதிற்குள்) இருந்தாலே அவை நோயினை வரவேற்று உங்களைத் தாக்கி விடும். 

இதைச் சொன்ன பின்னர் சாதகர் பாதுகாப்புத் தரும் காரணி, பாதுகாப்பு நீக்கப்படுகிறது என்பதன் பொருள் என்ன என்று ஸ்ரீ அன்னையிடம் கேட்கப்படுகிறது. 

யோகத்தில் நாம் உயர்ந்த உணர்வு நிலை (Higher consciousness state) நிலையில் இறைசக்தியுடன் தொடர்பு கொள்கிறோம். அப்போது அந்த உணர்வு நிலை எம்மைச்சூழ இத்தகைய எதிர்சக்திகள் எம்மைத் தாக்காது ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்குகிறது. ஆனால் சாதகன் தனது சந்தேகபுத்தியாலோ, பயத்தாலோ தனக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ என்றோ, அல்லது அதீத நம்பிக்கையால் தனக்கு எதுவும் நடந்து விடாது என்று உணர்வைத் தளர விட்டாலோ அந்தப்பாதுகாப்பு வளையத்தை நாம் நீக்குகிறோம். என்கிறார். 

இன்றைய நிலையில் இந்த முகநூல் நன்றாகவே அனைவரையும் பயத்தில் ஆழ்த்தி பிராண நிலையில் வலுவிழக்கச் செய்து நோயைப் பெரியளவில் உள்வாங்கும் காரணியாக இருக்கப்போகிறது என்பது சிறப்பம்சம். 

The Mother, [*Questions and Answers (1953): 22 July 1953


Monday, March 09, 2020

யோகசித்திக்கான வழி

ஸ்ரீ அரவிந்தர் நான்கு அதிமுக்கிய கருவிகளை யோகசித்திக்கான வழியாகக் கூறுகிறார். 

இதை ஒரு புரிதலுக்காக இன்றைய விஞ்ஞான ஆய்வு முறை (Research methodology) உடன் ஒப்பிட்டுப்புரிந்து கொள்ளலாம். 

முதலாவது யோகத்தின் அடிப்படைகள், கோட்பாடுகள், பயிற்சி,

தத்துவம், செயல்முறை ஆகியவற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் சாத்திரப்படிப்பு - இன்றைய ஆய்வு முறையில் முழுமையான literature review என்று கூறலாம். 

அடுத்து கற்றுக்கொண்ட சாத்திரப்படிப்பினை பிரயோகித்து சாதனை செய்யும் உற்சாகத்துடன் கூடிய சுயமுயற்சி - Personal effort and action! 

நேரடி அனுபவம் பெற்ற, ஆற்றலுள்ள, எமது சந்தேகங்களைத் தீர்த்து எம்மை சாதனையில் முன்னேறத் தூண்டிக்கொண்டிருக்கும் குரு - Supervisor

நான்காவது முயற்சி கனிவதற்குரிய சரியான காலம்! 

இந்த நான்கினையும் சரியாக உணர்ந்து பின்பற்றும் சாதகன் தனது யோகத்தில் சித்தி/பூர்ணத்துவம் (Perfection) அடைகிறான். 

இன்று பலரும் யோகம் என்பது எங்காவது சென்று சில ஆசனங்களைக் கற்றுகொண்டு பிறகு தாமும் மற்றவர்களுக்கு கற்றுத்தருவதுடன் நின்று விடுகிறது. 

உண்மையான யோகம் என்பது உடலைச் செம்மையாக்கி, அந்தக்கரணங்கள் எனும் மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் ஆகிய நான்கினையும் ஒருங்கிணைத்து ஆற்றலை ஒருமுகப்படுத்தி எம்மைச் செம்மைப்படுத்தும் கலை!


Sunday, March 08, 2020

தலைப்பு இல்லை

As a citizen/entrepreneur I recommended to the development of the new agriculture policy of our country to be a better option as "Natural Organic Agriculture" - which is an environmental friendly, good export income practice.

it was recorded in world bank agriculture modernization project stakeholder hearing video.


தலைப்பு இல்லை

வீழ்ச்சியடைந்து வரும் இலங்கையின் விவசாயத்துறைக்குரிய எனது முன்மொழிவாக "Natural Organic Agriculture" என்ற முன்மொழிவை ஒரே வரியில் 0.17 செக்கனில் பதிவு செய்துள்ளார்கள்! 

செய்வதைச் சொல்வோம்! சொல்வதைச் செய்வோம்!

முதல் Comment இனைப் பார்க்கவும்; 

As a citizen/entrepreneur I recommended to the development of the new agriculture policy of our country to be a better option as "Natural Organic Agriculture" - which is an environmental friendly, good export income practice.

it was recorded in world bank agriculture modernization project stakeholder hearing video.


Monday, March 02, 2020

தலைப்பு இல்லை

வசந்தம் தொலைக்காட்சியின் மக்கள் சேவை நிகழ்ச்சியில் 50 நிமிடம் உரையாடியிருக்கிறேன். கேட்டுவிட்டு உங்கள் கருத்தைப் பதியுங்களேன்! 

இந்த உரையின் சுருக்கம் கீழ்வரும் கேள்விக்கான விடைகள்;

1. சூழலியல் என்றால் என்ன?

2. சூழல் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள சூழலியல் விஞ்ஞானம் (Environmental Science) ஏன் அவசியம்? 

3. சூழலியல் விஞ்ஞானப்புரிதல் சமூகத்தின் அனைத்து மட்டத்திற்கும் ஏன் அவசியம்? 

4. சுயநலத்துடன் குறுகிய மனநிலையுடன் சூழல் பிரச்சனைகளை அணுகும் போது என்ன பாதிப்பு? 

5. சூழலியல் பிரச்சனையில் மனப்பாங்கின் அவசியம்? 

6. சூழலியல் பிரச்சனைகளை தீர்ப்பதில் மதிப்பீடு (evaluation) ஏன் அவசியம்? 

7. அபிவிருத்தி என்ற பெயரில் எப்படி சூழல் பிரச்சனைகளை உருவாக்குகிறோம்? - மண்சரிவு அபாயம்!

8. ஏன் சூழலியல் பிரச்சனையில் பெரும்பட முறை (Big picture method) அவசியம்?

9. சூழலியல் அறிவு இல்லாத சமூகத்தில் அரசியல்வாதிகளின் முடிவுகள் ஏன் தவறாக இருக்கும்?

10. இலங்கையின் சூழல் பிரச்சனைகள்

11. இலங்கையின் சூழலியலின் கலாச்சாரப் பிண்ணனி

12. கழிவு முகாமைத்துவத்தின் சவால்கள்

13. சூழலை மாசாக்காத இயற்கை விவசாயம் 

இன்னும் பல விஷயங்கள்! 


Sunday, March 01, 2020

தலைப்பு இல்லை

I was invited by Hon. President of Theosophical Society of Sri Lanka to initiate a study circle on world famous occultism book Secret Doctrine, (Guptha vidya in Sanskrit) by Helena Blavatsky (1888), founder of Theosophical Society. 

Yesterday session covered the Introduction of the book, following months we intend to do a systemic study of the Secret Doctrine book. 

Last month this was initiated with the blessings of Ven. Ananda Olande Thero and under the patronage of President Duminda Wanigasekera. we had a guest speaker Mr. Satish Apte from Maharashtra. 

We welcome everyone interested in Theosophy to this event, will be held on the last Saturday of every month. 

Etymology and meaning of Theosophy is came from the Greek words theos ("god(s)") and sophia ("wisdom"), thus meaning "god-wisdom", "divine wisdom". this knowledge system intend to embraces what they see as the "essential truth" underlying religion, philosophy, and science.


பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...