இது அரசியல் பதிவு அல்ல...
சிறிது காலத்திற்கு முன்னர் ஒரு பெரு நிறுவனத்திற்கு தந்திரோபாயத்திற்கான (Strategy) துணை இயக்குனராக இருந்தவன் என்ற வகையில் எப்போதும் எனக்கு தந்திரோபாயம் மீதான அதீத கற்கை ஆவல் உள்ளது.
அந்த வகையில் இந்தியப் பிரதமரின் இன்றைய Mission Sakthi மிக ஆவலைத் தூண்டும் ஒரு நகர்வு.
ஒரு மாதத்திற்கு முன்னர் பாகிஸ்தானுடனான வான் தாக்குதல் நிகழ்வில் இம்ரான் கான் கதாநாயகனாகிப்போக மோடி மௌனம் காக்க அதை நம்பி மோடியின் சாயம் வெளுத்துவிட்டதாக எதிர்க் கட்சிகள் புலம்ப இப்படி ஒரு பிரம்மாஸ்திரம் வைத்திருப்பார் என்று எவரும் கனவிலும் கணக்கிட்டிருக்க மாட்டார்கள்.
இந்த நிகழ்வை ஒரு தேசத்தின் மிக உன்னத அடைவு என்ற வகையில் எவரும் கட்சி பேதமின்றி ஆதரிக்க வேண்டிய ஒரு நிர்பந்த நிகழ்வாக்கி,
அந்த நிகழ்வினை நிர்வாக ரீதியான தலைமைத்துவம் (PM is the head of Department of Space) தன்னுடையது என்று capitalize செய்துள்ளார்.
இந்த நிகழ்வின் தொழில்நுட்ப நிபுணத்துவத்திற்கு (subject mater specialist) விஞ்ஞானிகள் பொறுப்பு என்றாலும் தலைமைத்துவமும் நிர்வாகமும் பிரதம மந்திரிக்கு கீழே வருகிறது!
இந்தியர்கள் என்ற தேசபக்தி ஆழமாக உள்ள மக்களின் ஆழ்மனத்திற்கு தான் தான் உங்களுக்கான தலைவன் என்ற ஆழமான செய்தியை மிக நுண்மையாக பதிவித்திருக்கிறார். அதையும் தாண்டி தான் உலக வல்லரசுகளுடன் சமமாக உட்கார தகுதி உள்ள தலைவன் என்பதையும் சொல்லியிருக்கிறார்.
இந்த வெற்றியை எதிர்க் கட்சிகள் உளவியல் ரீதியாக மக்களிடம் தூற்ற முடியாது. அப்படி முயற்சி செய்யும் போது அது தேசத்துரோகமாக பார்க்கப்படும். அல்லது மக்கள் அதை பொறாமையின் வெளிப்பாடாகவே பெரும்பாலும் பார்ப்பார்கள்!
ஆக தேர்தல் காலத்தில் மக்கள் மனதில் எதைக் கூற வேண்டுமோ அதை சரியாக கூறியிருக்கிறார். இது மிகப்பெரிய அளவில் தேர்தல் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தும் என்று அனுமானிக்கலாம்.
இது வெறுமனே ஒரு தந்திரோபாய இயக்குனராக பெற்ற அனுபவத்தின் மூலமான கருத்து மட்டுமே அன்றி வேறு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளோ, முன் துணிபுகளோ இல்லை என்பதை அன்பர்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.