முன் கதைச் சுருக்கம்: கிளிநொச்சி உணவகத்தினால் ஆளுனரின் குழுவிற்கு வழங்கப்பட்ட சாப்பாட்டில் புழு இருந்தது என்பதற்கான ஆளுனரின் நடவடிக்கை தொடர்பான கருத்து.
கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்
இது வள்ளுவர் வாக்கு, ஒரு அரசன் தனது குடிகள் செய்யும் தவறினை, அவர்கள் திருந்தி சரியாக வழியில் வருவதற்கு மாத்திரமே தனது அதிகாரத்தை பிரயோகிக்க வேண்டும், அப்படியில்லாமல் அதீத உணர்ச்சிவசப்பட்டு கடுமொழியாலும், தனது தண்டத்தாலும் - தற்காலத்தில் நீதிமன்றத்தின் அதிகாரம் என்று கொள்ளலாம், தண்டிக்க முயன்றால் அது அவன் தனது அதிகாரத்தை தேய்க்கும் அரமாகிவிடும். அரம் என்பது இரும்பை தேய்க்க பயன்படும் கருவி.
இதைத் தான் இன்று கிளிநொச்சி உணவகப் பிரச்சனையில் வடமாகண ஆளுனர் செய்துகொண்டிருக்கிறார்.
ஆளுனரின் கோபம் நியானமானது, உணவை சுகாதாரமாக கொடுப்பது வியாபார நிலையத்தின் கடமை! அதனை நெறிப்படுத்த தனது அதிகாரத்தின் எந்த அஸ்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற நிலையில் பிழை விட்டுள்ளார்.
அதிகார நெறிமுறையில் (protocol) ஒரு சுகாதார பரிசோதகரின் அதிகாரத்திற்கு ஒரு ஆளுனர் இறங்கி வந்து குடிமகனுடன் பிரச்சனைப்படுவதும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது சொந்த முயற்சியால் முன்னேறிய ஒருவர் தனது தவறை ஒத்துக் கொண்டு திருத்திக் கொள்வதாக கூற தனது அதிகாரத்தை வரம்பிற்கு மீறி பிரயோகித்தல் அவரது மக்கள் செல்வாக்கினை குறைக்கும்.
இப்படி ஒரு பிரச்சனை இனிமேல் நடக்கக் கூடாது என்றால் அது தொடர்பான சுகாதார பரிசோதகருக்கும் குறித்த திணைக்களத்திற்குமே தனது அதிகாரத்தைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி குடிமக்களிடம் நேரடியாக இல்லை!
குடியினருக்கும் அன்பானவனாகவும், நெறிமுறையை பேணுபவரிற்கு (சுகாதார பரிசோதகருக்கு) கடுமையானவராக இருக்கும் ஆட்சியாளரே சரியான ஆளுனராக இருப்பார்!
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு! அதிகாரமும் தான்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.