குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, July 29, 2018

ஸ்ரீ குருபாதுகா ஸ்தோத்திரம்

சாதகர்களுக்கு....
குருபாதுகை என்பது குருவின் பாதங்களை தாங்கும் மிதியடி, இது யோக தாந்திர விஞ்ஞானத்தில் குருவின் சக்தியை, குரு எந்த விதமான வழிமுறைகளில் தனது ஆன்ம முன்னேற்றத்தினை பெற்றால் என்ற தகவல் அடங்கிய ஒரு memory chip. எவராவது ஆன்ம முன்னேற்றம் பெறவிரும்பினால் அவர் தனது ஸ்வ குருவின் பாதுக்கைகளை தியானித்து படிப்படியாக ஆன்ம முன்னேற்றம் பெறலாம்.

இங்கு நாம் கடந்த குருப்பூர்ணிமாவில் சிந்தித்த தியானித்த ஐந்து சுலோகங்களின் பொருளை சுருக்கமாக விளக்கியுள்ளோம். இவை இலக்கண அறிவு கொண்டு எழுதப்பட்டதல்ல, ஆதலால் பிழைகள் இருக்கலாம்.
குருகீதையின் முதல் ஐந்து ஸ்லோகமாக சில சம்பிரதாயங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. எது எப்படியாக இருந்தாலும் உண்மை ஸாதகர்களுக்கு பெரும் அம்ருதமும் ஆனந்தமும் தரக்கூடியது.


ஸ்ரீ குருபாதுகா பஞ்சகம் – 01 
ஓம் நமோ குருப்யோ குருபாதுகாப்யோ நம: 
பரேப்யஹ: பரபாதுகாப்யஹ:
ஆசார்யசித்தேஸ்வரபாதுகாப்யோ நமோ நமஹ: 
ஸ்ரீ குருபாதுகாப்யஹ: ||1||

ஓம் குருவிற்கும் குருவின் பாதுகைகளுக்கு வணக்கம், 
பரமான உயர்ந்த தத்துவமாக இருக்கும் குருவிற்கும், அந்த உயர் பரத்தத்துவத்தை உணரச்செய்யும் குருபாதுகைகளுக்கு வணக்கம், 
சித்தர்களுக்கு ஈஸ்வர ரூபமான குருவின் பாதுகைகளுக்கு வணக்கம், வணக்கம்
ஸ்ரீ குருபாதுகைக்கு வணக்கம்!


குருபாதுகா ஸ்தோத்திரம் - 02
ஐம்கார ஹ்ரீம்கார ரஹஸ்யுக்த ஸ்ரீம்கார குதார்த மஹாவிபூத்யா
ஓம்கார மர்ம ப்ரதிபாதினிப்யாம் நமோ நமஹ; ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||2||


எவர் மந்திர ஸப்தங்களின் இரகசியங்களை கூறித்தருபவரோ, அதிலும் மஹா விபூத்யமாக (மஹா சக்திகளான) ஓம்காரம், ஹ்ரீம்காரம், ஐம்காரம், ஸ்ரீம் கரம் ஆகிய நான்கு சக்திகளினதும் இரகசிய அர்த்தத்தை விளக்கும் ஸ்ரீ குருவின் பாதுகைக்கு வணக்கம்!


குருபாதுகா ஸ்தோத்திரம் - 03
ஹோத்ராக்னி ஹௌத்ராக்னி ஹவிஸ்ய ஹோத்ர் ஹோமாதி ஸர்வாக்ர்தி பாஸமானம் யத்ப்ரம்ஹ தத்போத்ஹவிதாரினீப்யாம் நமோ நமஹ: ஸ்ரீ குருபாதுகாப்யாம்.


எவருடைய பாதுகை பிரம்ம ஞானத்தை தருவதோ, எது ஹோத்ரா, ஹௌத்ரா போன்ற ஸர்வ அக்னிகளின் ஜொலிப்பாக இருக்கிறதோ, அந்த குருபாதுகைக்களுக்கு வணக்கம்.


குருபாதுகா ஸ்தோத்திரம் - 04
காமாதிசர்பவ்ரஜகாருடாப்யாம் விவேகவைராக்யனிதிப்ரதாப்யாம்
போதாப்ரதாப்யாம் த்ருதமோக்ஷதாப்யாம் நமோ நமஹ: ஸ்ரீ குருபாதுகாப்யாம்


எனது காமாதி மனோ விகாரங்களை சர்ப்பங்களை கவ்வும் கருடனைப்போன்று அழிக்கும் வல்லமை உள்ளதும், எது விவேவகத்தையும், வைராக்கியத்தையும், ஞானத்தையும் தருவதோ, எது மோக்ஷத்தை தருவதோ அந்த ஸ்ரீ குருவின் பாதுகையை வணங்குகிறேன்.


குருபாதுகா ஸ்தோத்திரம் – 05 
அனந்தசம்ஸார ஸமுத்ரதாரனௌகாயிதாப்யாம் ஸ்திரபக்திதாப்யாம்
ஜாட்யாப் திஸம்சோசனவாதவாப்யாம் நமோ நமஹ; ஸ்ரீ குருபாதுகாப்யாம்


அனந்த ஸம்ஸார சமுத்திரத்தை கடக்க உதவும் கப்பல் போன்றதும், எனது உணர்வற்ற ஜடத்தன்மையை உள்ளுறையும் அக்னியால் எரித்து, ஸ்திர பக்தியை தரும் ஸ்ரீ குருவின் பாதுகையை வணங்குகிறேன்

Thursday, July 26, 2018

யோக சாதனைக்கு உயர் சிந்தனைத் திறன்

யோக சாதனைக்கு உயர் சிந்தனை திறனை எப்படி பயன்படுத்தலாம் என்ற மாதிரியுரு இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக் பலர் யோக சாதனை என்றவுடன் ஏதோவொரு பயிற்சியை திருப்ப திருப்ப செய்வதன் மூலம் தமக்கு ஏதோ பலன் கிடைக்கும் என்ற கீழ் சிந்தனை திறன் (lower thinking skill) அடிப்படையில் அணுகுகிறார்கள்.
யோக சாதனை உயர் சிந்தனை திறன் (Higher Order Thinking Skill) இருந்தால் மட்டுமே சாத்தியம். ஏனெனில் ஒருவன் தனது சாதனை மூலம் தனது ஸ்தூல, சூக்ஷ்ம கருவிகளை உருமாற்றம் (transformation) செய்வதே இலக்கும். ஆகவே அது நிஜமாக தனது உடலிலும், மனத்திலும் பிரயோகிக்க வேண்டிய அறிவு. எனவே உயர் சிந்தனைத்திறன் இல்லாமல் செய்யப்படும் யோக சாதனையால் எந்தவொரு சாதகனும் யோகத்திற்குரிய பலனை பெறமுடியாது.
இதுபற்றிய விரிவான ஆழமான விளக்கங்கள் எமது சித்த வித்யா குருகுலத்தில் நடைபெறும். இங்கு பொது உரையாடல்கள் மட்டும் நடைபெறும்.


உயர் சிந்தனைத் திறன் (Higher Order Thinking Skills)

உயர் சிந்தனைத் திறன் (higher order thinking skills)
ஒருவன் தான் கற்கும் விடயத்தை முதலில் ஞாபகப்படுத்தும் ஆற்றல் உள்ளவனாக இருத்தல் வேண்டும்,
பின்னர் ஞாபகத்தில் உள்ள விடயத்தை புரியும் ஆற்றல் உள்ளவனாக இருத்தல் வேண்டும்
புரிந்ததை தேவையான இடத்தில் பிரயோகிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பிரயோகிக்கும்போது அதை பிரயோகிப்பது எப்படி என்றும் அதன் விளைவுகள் என்ன என்றும் ஆராய்ந்து அறியக்கூடியவனாக இருக்க வேண்டும்.
பின்னர் தான் பிரயோகித்ததை மதிப்பிடத்தெரிந்திருக்க வேண்டும்.
மதிப்பீடின் மூலம் புதிய அறிவினை உருவாகத் தெரிய வேண்டும்.
இதுவே உயர் சிந்தனைத் திறன் (higher order thinking skills) என வரையறுக்கப்படுகிறது.



கல்வியில் பாடசாலையின் நோக்கம் Lower Order thinking அதாவது கீழ்மட்ட சிந்தனைத் திறனை வளர்த்தல்.
கீழ்மட்ட சிந்தனைத்திறன் என்பது தகவல் எந்தவொரு யதார்த்த சூழலுக்கும் (real environment) அந்த அறிவைப் பிரயோகிக்காமல், ஒரு மாதிரியுரு சூழலிற்கு (model environment) மாணவர்களால் குறித்த விஷயங்களை ஞாபகப்படுத்த முடிகிறதா என்பதையும் விளங்கி இருக்கிறாதா என்பதையும் உறுதிப்படுத்தும் கல்வி முறை.
இந்த கீழ்மட்ட சிந்தனைத்திறனை வளர்க்காமல் உயர் சிந்தனைத் திறனை பெறமுடியாது என்பது புரிந்து கொள்ள வேண்டியது.
உதாரணமாக 12ம் வகுப்பு உயிரியல் பாடம் படிக்கும் மாணவன் உடல் உறுப்ப்புகள் உடலில் எங்கே இருக்கிறது என்பதும் அதன் பயன்பாட்டினையும் தெரிந்திருத்தல் அவசியம். எக்காரணம் கொண்டும் அந்த உறுப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாது. சிகிச்சை அளிக்க அவர் உயர் சிந்தனைத்திறனுக்கூடாக உயிரியல் பயின்று மருத்துவராக இருத்தல் வேண்டும்.
ஆக பல்கலைக்கழகங்களின் பணியே உயர் சிந்தனைத்திறனை வளர்த்தல்.
இந்த அடிப்படையே தற்போது உள்ள degree system,
  • Bacheler - இள நிலை என்பது அவரது துறையில் உள்ள அனைத்து விடயதானங்களினதும் வரைவிலக்கணத்தை அறிந்தவர்
  • master - முது நிலை என்பது அறிந்த விஷயங்களை சரியான நிஜ உலக சந்தர்ப்பங்களுக்கு பிரயோகிக்க கூடியவர்
  • master of Philosophy (M.Phil) - இள முனைவர் என்றால் இருக்கும் அறிவினை தொகுத்து புரிந்து கொண்டவர். 
  • PhD - முனைவர்/கலா நிதி என்றால் தனது துறையில் புதிய அறிவின உருவாக்கியவர்

என்பது அர்த்தம். உண்மையில் M.Phi & PhD பட்டங்கள் உயர் சிந்தனைத்திறனை விருத்தி செய்யும் பயிற்சிகள். (Condition apply 😂😂)

Tuesday, July 24, 2018

மன அழுத்தம் பற்றிய உரையாடல்




மன அழுத்தம் பற்றி நண்பர் ஒருவர் கருத்துப்பகிரும் படி ஒருமுறை கேட்டிருந்தார். விளக்கமாக எழுதவேண்டும் என்பதற்காக வேலைப்பளு குறைந்த பின்னர் எழுதலாம் என்று பிற்போட்டிருந்தேன்.
மன அழுத்தம், மன நோய்களைபற்றி அறிந்து வீணாக எனக்கு மன நோய் இருக்கிறதா என்று பயந்து நோயாளியாகாமல் முதலில் மனச்சமநிலை, மன ஆரோக்கியம் என்றால் என்ன என்பது பற்றி புரிந்து கொள்ள வேண்டும். மனதின் அரோக்கியத்திற்கு நான் கு கால்கள் உண்டு

·        முதலாவது எண்ண ஓட்டம் (thought process) : இது எதை நாம் மனதில் சிந்திக்கிறோம், எப்படி சிந்திக்கிறோம் என்பதும் குறித்த விஷயத்தைப்பற்றி எப்படி நாம் கற்பனை செய்கிறோம் என்பதும். இதுவே எமது சிந்தனையின், மனதின் முதல் படி, நாம் கண், காது, செவி, வாய், தோல் என்ற ஐந்து புலன் களின் மூலம் பெற்ற அனுபவங்களூடாக உலகைப்பற்றிய சிந்தனையை எமது மனதில் ஆரம்பிக்கிறோம். உதாரணமாக சாரயம் அருந்த ஆரம்பிக்கிறோம் என்றால் அதற்கான எண்ண ஓட்டம், எமது சூழல் இருந்தோ, எமது சூழலில் பலம் பொருந்தியவர், ஆதர்சனமானவர் தலைவர் என்று நம்பப்பட்டவரிடமிருந்தோ எமது மனதிற்கு கிடைக்கிறது,  இதை மனம் பெற்றுக்கொண்டு நாமும் சாரயம் அருந்த வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தை ஆரம்பிக்கிறது. இப்படி ஆரம்பிக்கப்பட்ட எண்ண ஓட்டம் மனதின் அடுத்த பாகத்தால் மேலும் நெறிப்படுத்தப்படுகிறது.
·        விளைவுபற்றிய அறிவு (knowledge of effect) : இது நாம் சிந்திக்கத்தொடங்கிய எண்ண ஓட்டத்திற்கு எமது மனதின் ஒரு பாகமாகிய அறிவு எப்படி பதிலளிக்கிறது என்பது. இதில் இரண்டு பகுதிகள் இருக்கிறது. ஒன்று விழிப்புணர்வு, இரண்டாவது தர்க்க சிந்தனை. மேலே நாம் எடுத்துக்கொண்ட உதாரணத்தை இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு ஆரய்ந்தால், சாராயம் அருந்த வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது, ஆனால் தீர்மானிக்கவில்லை, இந்த தீர்மானத்தை பெறுவதற்கு எமது மனதிடம் இரண்டு அறிவு சார் பகுதிகள் இருக்கிறது. விழிப்புணர்வுடன் சாராயாத்தின் விளைவு என்னவென்று ஆராய்ந்தால் அது அதன் விளைவுகள் முழுமையும் அறிவிக்கும், அதுபோல் தர்க்க சிந்தனை விளைவுகளை சரியான வகையில் ஒழுங்குபடுத்தும். சாராயம் அருந்தினால் மூளையின் சம நிலை கெடும், ஈரல் கெடும், சிறு நீரகம் கெடும், மனதின் விழிப்புணர்வு நிலை கெடும், அடிமைப்ப்படுவோம் என்ற ஒழுங்கில் சிந்திக்கும் போது குடிக்க கூடாது என்ற முடிவிற்கு வருவோம். அப்படி இல்லாமல் வெளிநாட்டு சாராயத்தை அப்படியே கிளாஸில் ஊற்றி, அதற்கு கொஞ்சம் மினரல் வாட்டர் கலந்து, சர் என்று உறிஞ்சி அடித்தால் அதுதான் பேரின்பம் என்ற் தர்க்க ரீதியாக சிந்தித்தால் குடிப்போம் என்று முடிவு செய்யும். இப்படி முடிவு செய்துவிட்டால் அடுத்து வருவது மனதின் வெளிப்பாடு.
·        நடத்தை (Behavior): இது அறிவால் முடிவு செய்யப்பட்ட மனதின் வெளிப்பாடு. நாம் மேலே கூறிய உதாரணத்தின் படி குடிகாரனாகப் போகிறாரா இல்லையா என்பதன் வெளிப்பாடு. அறிவு முடிவு செய்தன் படி நடத்தை காண்பிக்கப்படும். இன்னொரு புறத்தில் மற்றவர்கள் காண்பிக்கும் நடத்தையில் இருந்து நாம் எமது அறிவை கட்டமைத்துக்கொள்கிறோம். ரஜனிகாந்த், விஜய் சிக்கரட் குடிப்பதால் தாமும் சிக்கரட் குடிக்கும் பழக்கம் வருபவர்கள் இந்த வகையினர். ஆக நடத்தை பரிமாறிக்கொள்ளப்படும். இந்த நடத்தை தினசரி பயிற்சிக்கப்படும் மன எண்ண ஓட்டங்களால் தீர்மானிக்கப்படும். தினசரி நூற்கள் படிக்கும் பழக்கம் இருந்தால் அதன் பிரகாரம் அவரது நடத்தை இருக்கும். அவரை அறிவாளி என்போம். தினசரி குடித்துப்பழகுபவர் குடிகாரர் ஆகிறார். தினசரி எழுதிப்பழகுபவர் எழுத்தாளர் ஆகிறார். ஆக நடத்தை மற்றவர்களில் இருந்து எமது அறிவு ஏற்றுக்கொள்வதனாலும், நாம் பயிற்சிப்பதாலும் உருவாகிறது. இப்படி உருவாகிய நடத்தையால் வருவதே மனதின் நிலை
·        மனதின் நிலை (mood): நடத்தை அறிவு, மனது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்போது எமது மன நிலை மகிழ்ச்சியாக, உற்சாகமாக இருக்கிறது. இல்லாத போது குழப்பமாகவும் துன்பமாகவும் இருக்கிறது. ஆக மன நிலை நடத்தையின் மதிப்பீட்டினாலேயே பெறப்படுகிறது.

இனி மன அழுத்தத்திற்கு வருவோம், மேலே கூறப்பட்ட ஒழுங்கில் மனதிற்குள் என்ன செல்கிறது என்பதை கவனிப்பது எண்ண ஓட்டத்தில் தங்கியுள்ளது. இப்படி சென்றது சரியா பிழையா என்பதை தீர்மானிப்பதற்கு மனதிற்கு போதுமான அனுபவமும், அறிவும் இருக்க வேண்டும், பின்னர் அந்த அறிவு குறித்த்த எண்ண ஓட்டத்தின் விளைவு பற்றி சரியான அனுமானத்தை மனதிற்கு விழிப்புணர்வுடன் ஆராய்ந்து சொல்ல வேண்டும். இப்படிச் அறிவு சொல்வதால் எம்மில் வரும் நடத்தையை கட்டுப்படுத்தும் ஆற்றல் எமக்கு இருக்க வேண்டும். இப்படி கட்டுப்படுத்தும் ஆற்றல் இருந்தால் எமது மன நிலை சம நிலையுடன் இருக்கும்.
ஆக மன அழுத்தம் இருக்கிறது என்றால் முதலில் செய்ய வேண்டியது எமது எண்ண ஓட்டம் எப்படி செல்கிறது என்பதை கவனித்தல், எம்மால் கவனிக்க முடியவில்லை என்றால் எம்மை புரியக்கூடிய நல்ல ஆசானின் உதவியை பெறல். எண்ண ஓட்டம் சீர் செய்வதாலேயே மன அழுத்தத்தை வேரிலிருந்து சரி செய்ய முடியும்.
இதை கணணி உதாரணம் மூல விளங்குவோம். ஒரு மென்பொருளில் வரும் கோளாறு (bug) மன அழுத்தம் என்றால் அதனுடைய algorithm மீளவும் ஒன்றின் பின் ஒன்றாக ஒழுங்கு பார்க்கப்பட்டு சரி செய்தால் மட்டுமே அந்த மென்பொருள் சரியா இயங்கும். இல்லாமல் கணணியை மூடிவைத்தால் உண்மையான பிரச்சனை தீராது. அதுபோலவே மன அழுத்தத்திற்கு மருந்து மாத்திரை பாதித்தல். இவை மனம் வேலை செய்யும் நரம்புகளை ஓய்வெடுக்க வைப்பதன் மூலம் சற்று பிரச்சனையை தள்ளி வைக்கிறது. ஆரோக்கியத்தை தருவதில்லை. மீண்டும் உடல் விழிப்படைந்தவுடன் பிரச்சனையும் விழிப்படையும்.
இது பற்றி மேலதிக விஷயங்களை ஆர்வமுடையவர்களின் உரையாடல் மூலம் தொடர்வோம்….

Thursday, July 19, 2018

குவாண்டம் கோட்பாட்டு விளக்கம் - 02

1920களின் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட (ஏற்கனவே இயற்கையில் இருந்த ஒன்று அறியப்பட்ட) நிகழ்வு உலகின் சிந்தனைப்போக்கை பெருமளவில் புரட்டிப்போட்டது.
இயற்கை உலகு எப்படி இயங்குகிறது என்பது பற்றிய புரிதல் அதுவரை ஐசாக் நியுட்டனின் பாரம்பரிய இயற்பியல் விதிகளிலேயே பெரும்பாலும் தங்கியிருந்தன.
இந்தக்கண்டுபிடிப்பு என்னவென்றால்,
உப அணுத்துணிக்கைகள் (sub atomic) தமது இயல்பை மந்தாரமான மேகமூட்டம் போலவும், நிலையற்ற ஒழுகற்ற தன்மை கொண்டவை என்பதை அறிந்துகொண்டமையே
ஆக நாம் உறுதியான, அசையாமல் இருக்கும் என்று நம்பிக்கொண்டு இருந்த பௌதீக பிரபஞ்சத்தின் ஆழத்தில் நிலையற்ற தன்மையும், தொடர்சியான அசைவும், குழப்பமும் இருக்கிறது என்பதை இயற்பியல் உலகம் புரிந்து கொண்டது.
இது பௌதீக இயற்கையை புரிந்து கொள்வதில் விஞ்ஞானிகளுக்கு பெரும் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்தியது.

மேலே, உப அணுத்துணிக்கைகள் (sub atomic) தமது இயல்பை மந்தாரமான மேகமூட்டம் போலவும், நிலையற்ற ஒழுகற்ற தன்மை கொண்டவை என்பதை அறிந்துகொண்டமையே.

இதற்கு வித்திட்ட சம்பவங்கள் என்ன என்பது பற்றிப் பார்ப்போம்.
மேற்கத்தேயத்தின் அறிவியல் ( நான் இப்படித்தான் பயன்படுத்த விரும்புகிறேன், ஏனெனில் சாதாரண இயற்பியலோ, குவாண்டம் கோட்பாட்டின் கூறுகள் மேற்கிற்குத்தான் புதிய கண்டுபிடிப்பே தவிர இந்திய தத்துவ ஞானத்திற்கோ, சீன தாவோயிசத்திற்கோ அல்ல) 1687 இல் ஐசேக் நியுட்டன் தனது Principia - Mathematical Principles of Natural Philosophy இனை வெளியிடுவதுன் ஆரம்பமாகிறது.
நியுட்டனின் இந்தப்பங்களிப்பு இயக்கவியலை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. ஸ்தூல பௌதீக பொருட்கள் எப்படி இயக்கத்தை நடாத்துகிறது என்பதையும், அவற்றின் இயக்கத்தை நாம் எப்படி உய்த்தறிந்து கொள்ளலாம் என்பதையும் அவரது இந்த நூல் தெளிவாக வெளிப்படுத்தியது.
இதன் அடிப்படையில் 18ம் நூற்றாண்டில் லாபிளாஸ் என்பார் எல்லா துணிக்கைகளும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் நியுட்டனின் விதிகளுக்குள் இயங்கி அவற்றின் இயக்கத்தை எதிர்வுகூறக்கூடிய நிலைக்குள் இயங்குவதாகவும் கணித்து உறுதியாக நம்பினார். இதன் மூலம் அனைத்து பௌதீக இயக்கங்களையும் நியுட்டனின் சமன்பாடுகள் மூலம் கணிக்கலாம் என்று நம்பினார்.
எனினும் நியுட்டனின் கணிப்புகள் இயற்பியல் தத்துவங்கள் பௌதீக உலகின் இயக்கங்கள் பலவற்றையும், எல்லா சாத்தியங்களையும் விளக்க முடியாத குறைபாடுடையதாகவே இருந்தது.
ஆக நியுட்டன் தந்த இயற்பியல் தத்துவக் கோட்பாடுகள் பௌதீக உலகை முழுமையாக விளங்கமுடியாத தன்னிறைவற்ற கோட்பாடாகவே காணப்பட்டது.
அடுத்த பதிவில் நியுட்டனின் இயற்பியல் தத்துவத்தில் முழுமையில்லாத பாகத்தைப்பற்றி சற்று உரையாடுவோம்.

Monday, July 16, 2018

குவாண்டம் இயற்பியல் அடிப்படைகள் - 01

குவாண்டம் இயற்பியல்
Image result for quantum physics
குவாண்டம் இயற்பியல் 1800ம் ஆண்டளவில் அணுக்களின் உபதுணிக்கைகள் பற்றிய கருதுகோளுடன் வளர்ச்சி பெற்றது. இதை குவாண்டம் இயக்கவியல், குவாண்டம் அலை இயக்கவியல் என்ற பெயர்களால் குறிப்பிடப்படுகிறது.
2012ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் ஹரோச்சே குவாண்டம் கோட்பாட்டினைப் பற்றி கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.
"குவாண்டம் இயக்கவியல் என்பது மிகவும் புதிரானது, துணிக்கைகளை அணுக்களுடன் பரவவும் விடலாம், அதே ஒத்த சமயத்தில் அது பலவித சக்தி நிலையிலும் இருக்கும், அத்துடன் ஒரே நேரத்தில் அது பலவித அடையாளங்களுடனும் காணப்படும்.
1800ம் ஆண்டுகளில் இயற்பியலாளர்கள் கதிர்ப்புகள் அலைவடிவானதாகவும், துணிக்கைகள் தொடர்ச்சியுடையவை எனவும் கருதினார்கள்.
எனினும் தொடர்ச்சியான கீழ்வரும் கண்டுபிடிப்புகளின் மூலம் குவாண்டம் இயற்பியல் தோற்றம் பெற்றது
1. இலத்திரனின் கண்டுபிடிப்பு
2. x கதிர்களின் கண்டுபிடிப்பு
3. ஒளி இலத்திரன் விளைவுகளின் கண்டுபிடிப்பு
4. தனித்தியங்கும் அணுத்திருசியங்களின் இயக்கம்

அத்துடன் கருந்துளைகளினுள் மின் காந்த அலைகள் செல்லும் போது இலத்திரனின் சமபங்கீட்டு கோட்பாட்டின் படி இயங்காமல் உடைவது அவதனிக்கப்பட்டமை என்பவி குவாண்டம் கோட்பாட்டினை தோற்றுவித்தன.
தொடரும்....

Wednesday, July 11, 2018

முடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making


முடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல்.
முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்:
1) இரண்டு அல்லது அதற்கு அதிகமான தெரிவுகள் காணப்படும்
2) ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவிற்கு மேலதிகமான அபிப்பிராயமாக இருக்கும்.
3) பணம், மனிதவளம், நேரம் என்பவை அர்ப்பணிக்கப்பட்டிருக்கும்.

முடிவெடுக்கும் சூழல்கள்
கட்டாயம் நாம் முடிவெடுக்கும் போது அதிக பட்ச சாதகமான சூழ் நிலை இருக்க வேண்டும். எவ்வாறாயினும் நாம் முடிவெடுக்கும் போது கீழ்வரும் மூன்று சந்தர்ப்பங்கள் காணப்படும்.
1. நிச்சயத்தன்மை: நாம் எடுக்கும் முடிவு நாம் எதிர்பார்க்கும் விளைவைத்தரும் என்ற நிலை. முடிவெடுப்பதற்கு தேவையான அனைத்து தகவல்களும் எம்மிடம் இருக்க வேண்டும். 
2.ஆபத்து: எம்மிடம் முழுமையான தகவல்கள் இல்லை, நாம் எடுக்கும் முடிவுகளின் விளைவுக எதிர்பார்க்கும் விளைவுகளில் இருந்து விலகிச் செய்யக்கூடிய நிகழ்தகவு
3. நிச்சயமற்ற சூழல்: இந்த நிலையில் முடிவிற்கான தகவல்கள் மிக மிகக்குறைவு, முடிவுகளின் விளைவுகளை எதிர்வு கூற முடியாது, எம்மிடம் உள்ள தகவல்கள் நம்பகமானவை அல்ல. எமது அக உணர்வில் எடுக்கப்படும் முடிவுகள்.
முடிவுகளின் வகைகள்
1) நிரற்படுத்தபட்ட முடிவுகள்: இவை அன்றாட நிரற்படுத்தப்பட்ட நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட பொது முடிவுகள்.
2) நிரற்படுத்தப்படாத முடிவுகள்: இத்தகைய முடிவுகள் இதற்கு முன்னர் எடுக்கப்பட்டிருக்காது, ஆகவே இருக்கும் தகவல்களை வைத்துக்கொண்டு தர்க்க ரீதியான, வினைத்திறனான முடிவுகளை தற்போது எடுக்க வேண்டும்.
3) துணைத்தெரிவுகள்: இவை உண்மையில் முடிவுகள் அல்ல, சூழ் நிலையை சமாளிப்பதற்காக எடுக்கப்படும் தெரிவுகள். பெரும்பாலும் சூழ் நிலை அராஜகமாக இருக்கும்போது அந்த சூழலில் இருந்து தப்பிப்பதற்காக எடுக்கப்படும் தெரிவுகள்.
முடிவுகளுக்கான மாதிரியுருக்கள்
பகுத்தறிவைக் கொண்ட காரணம் சார் முடிவுகள்
கோட்பாட்டு ரீதியில் எப்போதும் நாம் முடிவுகள் பகுத்தறிவை அடிப்படையாக கொண்ட காரணம் சார் முடிவுகளையே எடுக்க வேண்டும். இத்தகைய முடிவெடுத்தலுக்கு பலவித காரணிகள் கருத்தில் கொள்ளப்படவேண்டும். அதற்கான படிமுறைகள் வருமாறு;
1. பிரச்சனை அடையாளம் காணல்
2. அதற்குரிய தீர்விற்கான காரணிகளை அடையாளப்படுத்தல், அந்தக்காரணிகளின் பங்களிப்பு வீதத்தினை அடையாளம் காணல்
3. அவற்றிற்குரிய போதுமான தகவல்களை சேகரித்தல்
4. மாற்று தீர்வுகளை உண்டாக்கல்
5. மாற்றுத்தீர்வுகளை ஆராய்தல்
6. அவற்றுள் சிறந்த தீர்வினை தெரிவு செய்தல்
7. சிறந்த தீர்வினை நடைமுறைப்படுத்தல், கண்காணித்து அதன் வினைத்திறனை அறிதல்.
இந்த படிமுறைகள் கீழ்வரும் அனுமானங்களை கொண்டிருக்கும்:
1. பிரச்சனை குறிப்பிடத்தக்க தெளிவானது,
2. மாற்றுத்தெரிவுகள் உள்ளது
3. தெளிவாக காரணிகளை அடையாளம் காணலாம்
4. காரணிகள் உறுதித்தன்மை உள்ளது
5. குறைந்த நேரமும், செலவும் உடையது
6. அதிக இலாபமுடையது

எப்போதும் உற்சாகமாக இருக்க கால தத்துவம்

Image result for காலம்
1. வேலையில்லாத நேரம் வேலையுள்ள நேரத்தை வித அதிகமான நேரமாக தோற்றும்
2. ஒன்றை செய்வதற்கு எத்தனித்துக்கொண்டு இருக்கும் நேரம் அதை உண்மையில் செய்வதற்கான நேரத்தை விட அதிகமாக தோற்றும், செய்து முடித்த பின்னர் அது மற்ற இரண்டை விட அதிகமாக தோற்றும்.
3.பதட்டம் உண்மை நேரத்தை விட அதிக நேரத்தை மனதில் தோற்றும்.
4. திட்டமிடப்படாத நேரம் அதிக நேரமாக தோற்றும்
5. மனதின் விருப்பமற்ற செயலுக்காக காத்திருக்கும் நேரம் அதிகமாக தோற்றும்
6. மனதிற்கு விளக்கம் தராமல் ஒரு காரியத்தை செய்யும் நேரம் அதிகமாக தோற்றும்.
7. மிக அரிய செயலிற்காக மனதை எதிர்பார்த்திருக்கும் மனம் அதிக நேரம் தயாராக காத்திருக்கும்.
8. குழுவாக இயயைந்து செயற்படும் போது எதிர்பார்த்த நேரத்தை விட குறைவாக நேரம் மனதிற்கு தோற்றும்.

இந்த எட்டுத்தத்துவங்களும் எமக்கு நேரம் எப்படி எம்மில் செயற்பட்டுகிறது என்பதை புரியவைத்து வாழ்வை உற்சாகமாக வைத்திருக்க உதவும்.

ஒவ்வொரு நாளும் உற்சாகமாக இருக்க
1. ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுங்கள்
2. அதை எதிர்பார்ப்புடன் செய்யுங்கள்
3. உற் சாகத்துடன் செய்யுங்கள்
4. பதட்டத்தை ஒழியுங்கள்
5. திட்டமிட்டு செய்யுங்கள்
6. மனதில் சிந்தித்து தெளிந்து செய்யுங்கள்
7. குழுவாக இயையந்து செய்யுங்கள்

ஒவ்வொரு நாளும் உற்சாகமா இருக்கும். 

Sunday, July 08, 2018

என் மாணவன்: சாதனா உரையாடல் - 17

ஏன் சாதகன் எதைச் செய்தாலும் அதை ஏன் செய்கிறோமென்று யோசித்து செய்பவனாக இருக்க வேண்டும்?

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசம் நுண்ணறிவு (intelligence). விலங்குகள் அந்த சூழலிற்குரிய துலங்ககளை மாத்திரம் கொடுக்கும். பசிக்கும் போது உண்ணும். ஆனால் மனிதன் எதிர்காலத்தையும் சிந்திக்கும் ஆற்றல் உள்ளவன். ஆகவே மனிதன் ஒரு செயலை செய்யும் போது அதை ஏன் செய்கிறோம்? அதன் விளைவுகள் என்ன? அந்த விளைவுகள் தன்னால் ஏற்றுக்கொள்ளக்கூடியதா? என்பதை நன்கு சிந்தித்தபின்னரே செயற்படத்தொடங்க வேண்டும். 

ஒருவனின் நிகழ்காலம் என்பது கடந்த காலத்தில் நாம் செய்த, சிந்தித்ததன் விளைவு, ஒருவனின் எதிர்காலம் என்பது நிகழ்காலத்தில் செய்யும், சிந்திக்கும் எண்ணங்களின் விளைவு. ஆகவே எதிர்காலத்தை இன்பமாகவும், நன்மையுடையதாகவும் கட்டமைக்க விரும்பும் சாதகன் தனது நிகழ்கால செயல்களில் கவனம் தேவை. தான் இப்போது செய்யும் செயல்கள் யாவுமே எதிர்காலத்தில் தனது வாழ்க்கை ஆகப்போகிறது என்ற நுண்ணறிவு சாதகனிடம் தெளிவாக இருக்க வேண்டும். 

ஒருவன் தனது வாழ்க்கையின் அமிசங்கள் ஒவ்வொன்றையும் செம்மைப்படுத்த விரும்பினால் தனது நிகழ்காலத்தை செம்மைப்படுத்த வேண்டும். இப்படி நிகழ்காலத்தில் செயல்களை சரியாக செய்தால் எதிர்காலத்தில் அந்த செயல்களின் விளைவுகளை அனுபவிப்பான். 

இப்படி ஒருவன் தனது எதிர்காலத்தை கட்டமைக்க விரும்பினால் தனது நிகழ்காலச் செயல்கள் யாவற்றிலும் விழிப்புணர்வுடன் கூடிய கவனம் அவசியம். இதற்கு ஒருவன் தனது ஒவ்வொரு செயல்களிலும் கீழ்வரும் மூன்று கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்:
  1. நான் ஏன் இந்த செயலை செய்கிறேன்?
  2. இதன் விளைவுகள் எவை?
  3. இந்த விளைவுகளால் நன்மையா தீமையா?
இந்த மூன்று கேள்விகளுக்கும் திருப்தியான பதில் வந்தால் மட்டும் அந்தச் செயலை செய் என்கிறார். 





என் மாணவன்: சாதனா உரையாடல்கள் - 16

யோகமாணவன் ஏன் தனக்கு இன்பம் தரும் கரியங்களில் மட்டும் ஈடுபடாமல் தனக்கு நன்மை தரும் காரியங்களில் ஈடுபடுபவனாக இருக்க வேண்டும்?


இன்பம் தரும் செயல்கள் என்பவை ஒருவன் தனது புலன்களை திருப்திப்படுத்துவதற்கும், அகங்காரத்தை திருப்திப்படுத்துவதற்கும் செய்யும் செயல்கள். உதாரணமாக தனது இன்பத்திற்காக டிவி பார்க்க வேண்டும் என்று எண்ணும்போது பிள்ளையின் படிப்பு கெட்டுப்போகலாம். 

மேலும் புலன்களை அதிகம் பயன்படுத்தும் போது அதற்கான பிராணனின் செலவும் அதிகரிக்கும். இதனால் உடல் நலம் கெடும். 

இங்கு குரு நாதர் இன்பம் தரும் செயல்களில் ஈடுபடுவதே கூடாது என்று கூறவில்லை. இன்பம் தரும் செயல்களில் மட்டும் ஈடுபடாமல் நன்மை தரும் காரியங்களில் ஈடுபடுபவனாக இருக்க வேண்டும் என்றே கூறுகிறார். 

ஆகவே நன்மை என்பது பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டும். எமக்கும், குடும்பத்திற்கும், நாம் வாழும் சூழலிற்கும், சமூகத்தினதும் சமநிலையைக் குழப்பாததும், உயர்வினை தருவதுமான செயல்கள் நன்மை எனப்படும். 

ஆகவே சாதகன் ஒவ்வொரு செயலையும் தான் இதை தனது இன்பத்திற்காக செய்கிறேனா? இதன் நன்மை தீமை என்ன? அதனால் வரும் விளைவுகள் எவை என்பது பற்றி கட்டாயம் ஆராயவேண்டும். இப்படி ஆராய்வதன் மூலம் அவன் தன்னுள் இருத்தி தியானிக்கும் அந்த புத்தியை தூண்டும் ஒளியை தனது புத்தியில், மனதில் இருந்து செயற்படுவதை அனுபவத்தில் அறிவான். இதனால் தனக்கு நன்மை தரும் செயல்களை மட்டும் செய்வதன் மூலம் இன்பமான எதிர்காலத்தை கட்டமைக்கிறான்.

மேலும் நாம் இன்பம் என்று நினைக்கும் எதுவும் உண்மையான இன்பமாக இருப்பதில்லை. அது இறுதியில் ஏதோ ஒருவகை துன்பத்தையே தரும். ஆனால் செய்யப்படும் செயல்கள் யாவும் இறுதியில் விளைவுகளை தரும். ஆகவே புத்தி விழிப்படையாத நிலையில் இன்பம் என்று செய்யப்பட்ட செயல்கள் இன்பத்தை தருவதற்கு பதிலாக  துன்பத்தை தந்துவிடும். 

உதாரணமாக உணவின் மூலம் நாவிற்கு இன்பத்தை பெறுகிறோம் என்ற நினைப்பில் நாம் உண்ணும் உணவு எமக்கு கேடாகிறது. ஆனால் சாதகன் தனது நாவிற்கு இன்பத்தை விட உடலிற்கு நன்மை தரும் உணவை தேடவேண்டும்.

இதுபோன்று ஒவ்வொரு செயலிலும் தனது இன்பத்திற்கு செயல்களை செய்கிறோமா? நன்மைக்காக செயல்களை செய்கிறோமா? என்பதை சிந்தித்து செய்பவனே சாதகன் - யோக மாணவன். 




Wednesday, July 04, 2018

என் மாணவன்: சாதனா உரையாடல் - 15


ஏன் கோப தாபம் உடையவன் போல் கருதப்பட்டும் அவைகளை அடக்கியவனாக சாதக மாணவன் இருக்க வேண்டும்?

மனிதன் என்பவன் மனம் உடையவன். மனமுடைய மனிதனிற்கு மனதின் வெளிப்பாடுகள் எல்லாம் நடைபெறும்.

சாதகனுடைய நோக்கம் பலவற்றில் அலைபாயும் மனத்தை ஒழுங்கிற்குள் கொண்டு வந்து தனது ஆன்ம முன்னேற்றத்தை கவனிப்பது.

கோபம் என்பது எமது எண்ணத்திற்கு மாறாக ஒரு செயலை மற்றவர்கள் செய்யும் போது ஏற்படும் உணர்ச்சிக்கொந்தளிப்பு.  நாம் ஒரு செயலை நிர்வகிக்கும் போது நோக்கத்திற்கு அமைவாக அனைவரையும் செயற்படச்செய்ய கட்டுப்பாடு அவசியம். இப்படி கட்டுப்பாடு விதிக்கும் போது சிலர் அவற்றை தமது சொந்த விருப்பு வெறுப்புகளுடன் தொடர்பு படுத்தி எதிர்ப்பினை காட்டுவார்கள். இந்த எதிர்ப்புகளை பொறுத்துக்கொண்டு அதற்கான சரியான விளக்கத்தை மற்றவர்களுக்கு எடுத்து உரைத்து புரியவைக்கவேண்டும். இல்லாமல் பதிலுக்கு நாமும் கோபப்பட்டால் எமது நோக்கம் நிறைவேறாது அல்லவா. ஆகவே தனக்கு ஒவ்வாத சூழலில் உணர்ச்சிக்கு உட்படாமல் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும்,

இதுபோல் எமது மனம் கோபத்தின் போது அதிகளவு உடலின் சக்தியை உறிஞ்சும். இப்படி அதிக சக்தி தேவையற்ற செயல்களின்  வீணாக்கினால் உடலின் பலம் கெடும். ஆகவே மனதில் கோபம் எழுவதை தடுக்க வேண்டும்.

இதேவேளை எமக்கு உயிர் ஆபத்து வருகிறது என்றால் சினம்கொள்ளாமல் அந்த ஆபத்தை எதிர்க்க முடியாது. இப்படியான கோபம் உண்மையைல் எம்மை பாதுகாத்துக்கொள்ளவே பயன்படுகிறது. சாதகன் முற்றிலும் எதற்கும் கோபம் கொள்ளாதவனாக இருந்தால் தீமைகளிற்கு ஆட்பட்டு தன்னிலை இழக்கும் நிலைமையும் வரலாம்.

ஆகவே கோபத்தை தன்னை பாதுகாக்கும் ஒரு ஆயுதமாக கவனமாக அடக்கி வைத்திருக்க வேண்டும். கோபத்தால் ஏற்படும் சக்தி இழப்பை விட அதனால் ஏற்படும் நன்மை அதிகம் என்று புத்தியில் தெளிந்து தேவைப்படும்போது உபயோகப்படுத்த வேண்டும்.

சிலைத்திருட்டும் கடவுள் கூறும் ஞானமும்

அண்மையில் ஒரு நண்பர் தமிழ் நாட்டில் கோயிலில் உள்ள சிலைகள் எல்லாம் திருடப்பட்டு போலிச் சிலைகளை வைத்திருக்கிறார்கள், இவர்களை எல்லாம் கடவுள் தண்டிக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டார். 

மேலும் கடவுள் இப்படியானவர்களை எல்லாம் ஏன் வைத்திருக்கிறார் என என்னிடம் கேள்வியும் தொடுத்தார். 

அதற்கு நானும் வெகு சிரத்தையுடன் "இந்த திருட்டையெல்லால் செய்விப்பதே, கடவுள்தான் பின்னர் எப்படி அவர்களையெல்லாம் தண்டிப்பார்"? என்றேன். 

உடனே அந்த நபரிற்கு தூக்கி வாரிப்போட்டதுபோல் முகபாவனையுடன் "ஆன்மீகவாதியான நீங்கள் இப்படிச் சொல்லலாமா? என்றார். 

நானும் பிரம்ம சூத்திரம் என்ன சொல்லுகிறது என்றேன், அவருக்கு பிரம்ம சூத்திரம் என்னவென்பது தெரியவில்லை.  அதற்கு சரி " சர்வம் கலு இதம் பிரம்மம் - இங்கே எல்லாமே பிரம்மம்" , பிரம்மம் என்றால் உங்கள் புரிதலுக்கு கடவுள் என்று வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, பார்த்தீர்களா இங்கே எல்லாம் பிரம்மம் என்றால் திருட்டை செய்பவனும் பிரம்மத்தின் கூறுதானே என்றேன். 

அதற்கு நீங்கள் வெறும் தத்துவம் பேசுகிறீர்கள் என்றார், 

நானும் விடவில்லை தத்துவம் என்பது உண்மையைக்கூறுவது, தத்துவம் சொல்லுவது பொய்யாகாது, ஆகவே திருட்டை செய்வது கடவுள் என மேலும் குழப்பினேன். 

அவருக்கோ குழப்பம் மேலிட அப்படியானால் திருட்டை செய்வது சரியா என்றார்? 

அதற்கு நான் இல்லை, பிழை கட்டாயம் தண்டனை கிடைக்கும் என்றேன். 

இதற்கு அவர் மேலும் குழம்பி நீங்கள் என்னை குழப்புகிறீர்கள் என்றார். 

நானும் குழப்பம்தான் தெளிவுக்கு வழி, ஆகவே குழம்பித்தான் தெளியவேண்டும் என்றேன். 

அதற்கு அவர் இந்தக்குழப்பத்தை என்னால் தாங்கமுடியாது, நீங்கள் கூறவருவதை தெளிவாக கூறிவிடுங்கள் என்றார். 

அதற்கு நான் திருமூலர் இறைவன் எங்கு இருக்கிறார், கோவில் எங்கு இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்? 

அவர்,
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே‘

என்று கூறியுள்ளார் என்றார், 

சரி, இப்போது நாம் என்ன செய்கிறோம்? கோயிலிற்கு போவது எதற்காக? கோயில் கட்டுவது எதற்காக? 

கோயில் போவது எமது குறைகளை சொல்லி அழ,
செய்த பாவங்களில் இருந்து தப்ப,
தனது செல்வச் செருக்கை காட்ட, 
ஒருவித மனப்பயத்தில்,

கோயில் கட்டுவது ஏன்? 
தனது பெயரை சரித்திரத்தில் புகழ் நிலை நாட்ட,
தானக்கும் சந்ததிக்கும் புண்ணியம் கிடைக்க, 
கோயில் கட்டினால் உபரி வருமானத்தை கணக்கு காட்டலாம், 

இப்படிச் சொல்ல அப்படியானால் எமது முன்னோர்கள் எல்லாம் முட்டாள்களா ஆகமங்கள், சாஸ்திரங்கள் இயற்றி கோயில் கட்டிவைத்துள்ளார்கள், இவை எல்லாம் பொய்யா? 

அதற்கு நாம், உண்மை எமக்குள் இருக்கின்றது அதை அறிய கஷ்டமானவர்களுக்கு ஒரு மாதிரியுரு (model) தேவையல்லாவா, அதற்காக கட்டப்பட்டதுதான் கோவில், அதாவது இயல்பின் மனிதன் ஐந்து புலன் கள் வழி செல்பவன். அவனை அவன் செல்லும் வழியில் உண்மையை அறியவைத்து, பின்னர் உள்ளே உண்மையை அறியும் உத்திக்காக செய்யப்பட்டவையே கோயில்கள் என்றோம். 

அப்படியானால் நாம் கோயிலிற்கு செல்வதால் ஒருபலனும் இல்லையா என்றார்? ஏன் இல்லை நிச்சயமாக உண்டு ஆகமவிதிப்படி கட்டப்பட்ட கோயிலை சென்று தரிசித்து அந்தக்கோயிலின் அமைப்பை ஆழ்மனதில் பதிப்பித்து வாருங்கள், அவை ஆழ்மனத்தில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் ஆற்றலுள்ள குறியீட்டு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. அல்லாமல் கோவிலில் சென்று வீணா உங்கள் புலம்பல்களை கொட்டாதீர்கள். 

மேலும் கோவில்களின் அமைப்பு மனப்பிராண சக்திகளை அதிகரிக்கும் வல்லமை உள்ளன. அங்கு சென்று உங்கள் குறைகளை கொட்டினால் அவை உங்களுக்கும் அதிகரித்து, சமூகத்திலும் அதிகரிக்கும். அதுவே இப்போது நடைபெறுகிறது. திருடுவதற்கும், ஏமாற்றுவதற்கும், கடவுளிடம் சென்று வேண்டி கோயிலில் உள்ள ஆற்றலிடம் சேர்த்து இன்று திருட்டும் கொள்ளையையும் அதிகரித்துள்ளோம். இறை என்பது ஒரு சக்தி, அதற்கு நல்லதும் கெட்டதும் ஒன்றுதான். இதனால்தால் புராணங்களில் கடவுளே அசுரனுக்கும் வரத்தை தருகீறார், தேவரையும் காப்பாற்றுகிறார். 

ஆகவே எமது எண்ணங்களும், மனமும்தான் கோயிலின் சக்தியால் அதிகரிக்கப்படுகிறது. 

அவரும் ஆமோதித்து தலை ஆட்டிவிட்டு நீங்கள் முதலில் கூறிய "இந்த திருட்டையெல்லால் செய்விப்பதே, கடவுள்தான் பின்னர் எப்படி அவர்களையெல்லாம் தண்டிப்பார்" என்பதற்கு விளக்கம் சொல்லவில்லையே என்றார் விடாக்கண்டனாக!

 நானும் சிரித்துக்கொண்டு "ஒவ்வொரு காலத்திலும் சமூகம் உண்மையை மறந்து அறியாமையில் மூழ்கி துன்பம் உறும்போது இறைசக்தி உண்மையை அறியும் தூண்டலை ஏற்படுத்தும், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் எமது முன்னோர்கள் சமூகத்திற்கு ஞானத்தை வழங்க, சமூக செழிக்க ஏற்படுத்தப்பட்ட கோயில்கள் முற்காலத்தில் அரசரின் அதிகாரப்பசிக்கும், புகழ்வேட்கைக்கும் சிக்கி நாசமாகி, இன்றும் அதே நிலைதான். ஆக மக்கள் தமக்குள் இறைவனைக் கண்டு நல்ல பண்புகளை ஏற்படுத்தி, நல்லதொரு சமூகத்தை உருவாக்க தான் கோயிலில் இல்லை, உனக்குள் இருக்கிறேன் எனக் காட்ட இந்த திருட்டுகளை நடாத்துகிறார்" என்றேன். 

அதற்கு அவர் மேலும் ஆதங்கத்தோடு "இதைச் செய்பவர்களுக்கு தண்டனை கட்டாயம் இருக்கும்தானே? என்றார், 

அதற்கு நானும் சிரித்துக்கொண்டு "ஒவ்வொரு செயலுக்கும் கட்டாயம் விளைவு உண்டு, அந்த விளைவை தடுக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை, ஆக இந்த செயலை செய்பவர்கள் அதற்குரிய விளைவை கட்டாயம் பெறுவார்கள்" 

நான் கூறவந்த கருத்தின் விளக்கம், உண்மையில் மனிதர்களின் சமூகத்தின் மனத்தில் அறம் குன்றி, எதற்காக நாம் கோயிலிற்கு செல்கிறோம், பூஜை செய்கிறோம், திருவிழா எடுக்கிறோம் என்ற உண்மையெல்லாம் அறியாமையின் விளைவாக மறந்து, தன் புகழிற்கும், பணத்திற்கும், அதிகாரத்திற்கும் என மாறியபொழுது கோயில் திருட்டுக்கூடமாகி விட்டது, ஆகவே கடவுள் எம் உள்ளே இருக்கிறார், அந்தக்கடவுளை எம்முள் உணர எமது குணம் தெய்வ குணமாக இருக்க வேண்டும், தெய்வ குணம் எம்முள் வளர்ந்தால் கோயிலில் தெய்வ சக்தி வளரும் என்று மேலும் விளக்கி விட்டு உரையாடலை முடித்துக்கொண்டோம். 

Tuesday, July 03, 2018

என்மாணவன்: சாதனா உரையாடல் - 14

நேற்றைய உரையாடல்

ஆசாபாசங்களைக் கொண்டவன் போலிருந்தும் உள்ளத்தில் அதைக் கொள்ளாதவன்

ஆசையுடன் பாசமும் சேர்ந்தே உலக வாழ்க்கையினை உருவாக்குகிறது. ஆசை இன்றி உலகில் நாம் எதையும் சரியாக செய்ய முடியாது. பாசம் இன்றி நாம் எதனுடனும் ஒன்றி இயங்க முடியாது. ஆகவே ஆசையும் பாசமும் உலக வாழ்க்கைக்கு அவசியம்.

பாசம் மேலும் எட்டு விதமாக பிரியும். இதை அஷ்ட பாசங்கள் என்று கூறுவார்கள். அவையாவன

1. க்ரோதம் – வெறுப்பு
2. சந்தேகம்
3. பயம்
4. வெட்கம்
5. வெறுப்பு
6. குலம் – ஜாதி
7. நிறம் – உடல் அழகு
8. ஒழுக்கம்

இந்த எட்டும் சேர்ந்தே ஒருவனின் ஆங்காரம் உருவாகும். அல்லது ஒருவனின் ஆங்காரத்தின் உப பிரிவுகள் எனலாம்.

ஆங்காரம் என்பது மனிதனின் மனம் இயங்குவதற்குரிய மையம் எனக்கண்டோம். ஆங்காரம் உருவாவது பாசத்தால் என்றால் மனம் செயல் கொள்வது இச்சை என்ற ஆசையால்.

எனவே ஒரு மனிதனின் இயக்கத்தில் இவையிரண்டும் அவசியம். எனினும் இவை மனிதனின் உண்மை ஆன்ம சொருபத்தினை சார்ந்தவை அல்ல. ஆன்மா தனது உண்மை நிலையை அடைய தடுக்கும் திரைகள்.

சாதகன் உண்மையில் இதுதலைக்கொள்ளி எறும்பு போல் உலக வாழ்க்கையினை வாழ ஆசையும் பாசமும் வேண்டும். அதேவேளை ஆன்ம முன்னேற்றத்திற்கு இவை தடையாகவும் அமையும். எனவே அவற்றை தள்ளியும் வைக்க வேண்டும்.

எனவே அவனுக்கு இருக்கும் ஒரே தெரிவு நடிப்பதுதான். ஆகவே உலக வாழ்க்கையில் இருக்கும் போது தனது நடிப்பு சிறக்க ஆசையும் பாசமும் உள்ளவனாக இருக்க வேண்டும். ஆனால் தனது உண்மை இலக்கான ஆன்ம முன்னேற்றத்திற்கு பாதிப்பு வரும் வகையில் அவற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது. எப்படி என்றால் ஒரு நடிகை தனது அழகை கூட்டிக்காட்ட மேக்கப் போட்டுக்கொள்வாள், ஆனால் அதனால் அவளது உண்மை அழகு கெட்டுவிடக்கூடாது.

இதுவே ஆசாபாசங்களைக் கொண்டவன் போலிருந்தும் உள்ளத்தில் அதைக் கொள்ளாதவன்


என்பதன் பொருள்.

சீவன் சிவமாகும் இரகசியம் மாணிக்கவாசகரது சிவபுராணம்

சீவன் சிவமாகும் இரகசியம் மாணிக்கவாசகரது சிவபுராணம்
இன்று குருவருளால் சிவபுராணத்தின் முதல் 23 வரிகளுக்கு 1800 சொற்களில் முழுமூச்சில் யோக ஞான உரை எழுதப்பட்டுள்ளது. வெகுவிரைவில் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் போன்றதொரு நூலாக வரும் என எண்ணுகிறேன்.
ஒவ்வொரு வரியும் உயர்ந்த தியான சாதனைக்குரிய குறிப்பாகவே விரவிக்கிடக்கிறது.
இதுவரை முடிந்த பகுதி...
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க!
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,
சிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை,
முந்தை வினை முழுதும் ஓய, உரைப்பன் யான்:
கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி,
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி;
விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய்!
எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும் சீர்,
பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்;

Monday, July 02, 2018

ஆணவத்தை ஆக்கும் அஷ்ட பாசங்கள்


எமது குரு நாதர் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அம்ருதானந்த நாதர் கூறிய அருளுபதேசத்தில் இருந்து, 

நாம் அஷ்ட பாசங்களால் கட்டுண்டுள்ளோம். அவையாவன 

1. க்ரோதம் – வெறுப்பு 

2. சந்தேகம் 

3. பயம் 

4. வெட்கம் 

5. வெறுப்பு 

6. குலம் – ஜாதி 

7. நிறம் – உடல் அழகு 

8. ஒழுக்கம் 

இந்த எட்டுமே எமது ஆணவத்தின், ஆங்காரத்தில் பூச்சுகள். இவற்றிலிருந்தே ஆங்காரம் தோற்றம் பெறுகிறது. இவற்றை தேவியிடம் சமர்ப்பித்து எமது ஆங்காகர்த்திலிருந்து வெளிவருவதே எமது ஆன்மீக முயற்சியின் பெருந்தடைகளாகும். வாழ்க்கையை ஒரு விளையாட்டாக (லலிதமாக) பார்த்துக்கொண்டு, பொறுமையுடன் கருணையுடன் வாழ்வதன் மூலம் எமது துன்பங்கள் அனைத்திலிருந்தும் வெளிவரலாம்.

சிவபுராணமும் ஸ்ரீ வித்தையின் குருபாதுகா தியானமும்

மாணிக்கவாசகர் அருளியவை திருவாசகம் எனத்தொகுக்கப்பட்டுள்ளது. இந்தத்திருவாசகத்தில் மணிமகுடம் சிவபுராணம். பொதுவாக புராணம் என்றால் பழமையான என்று பொருள். பதினெண் புராணங்கள் என்பது வழமையாக கொள்ளும் வழக்கு. இதில் சிவமகா புராணம் என்பதும் உண்டு. இந்தப்புராணங்களின் இயல்பு
  1. பிரபஞ்சத்தின் தோற்றம்
  2. உயிரின் தோற்றம்
  3. தெய்வ சக்திகளின் இயக்கம்
  4. பிரபஞ்சத்தின் காலக்கண்க்கில் ஏற்பட்ட வரலாற்றுச் சம்பவங்கள்
  5. அக்காலத்தைய மனித இனத்தின் கதைகள் 
என்பவற்றை குறியீட்டு மொழிகளால் கூறிக்கப்பட்டிருக்கும். 

அப்படியானால் சிவபுராணம் என்று தனது பாடலை மாணிக்க வாசகர் குறிப்பிட்டிருப்பதன் நோக்கம் என்ன? இது சிவனது புகழைப்பாடும் பாடல் என சமயவாதிகள் கூறுவார்கள். அது ஒருபுறமிருக்க மாணிக்க வாசகரது சிவபுராணம் உயிர் சிவத்துடன் கலந்து சிவமாகும் இரகசியத்தை கூறும் யோக ஞானப்பாடலாகும். 

இதை முதல் பதினைந்து வரிகள்கொண்டு விளங்குவோம். 

ஸ்ரீ வித்தையில் ஆதிகுரு ஸ்ரீ காமேஸ்வர காமேஸ்வரி என்ற சிவ சக்தி ஐக்கிய ரூபத்தை சொல்லும். இந்த வித்தையில் குருபாதுகா தியானம் என்பதே மிக உயர்ந்த சாதனை. அந்த சாதனையை குறிக்கும் வரிகளே சிவபுராணத்தின் ஆரம்ப வரிகள்:

நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க! 
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க!
 
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
 
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி! 
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

இந்த வரிகள் குருபாதத்தை தியானிப்பது எப்படி என்ற விளக்கத்தை தெளிவாக கூறுகிறது. இவற்றின் விளக்கம் இன்னொரு தடவை பார்ப்போம். 

என் மாணவன்: சாதனா உரையாடல் - 13

பௌத்தத்தில் தியான சாதகன் தனது மனதை பண்படுத்துவதில் மூன்று வித தவறுகளை விடுவதை குடத்தின் உவமை கொண்டு விளக்கப்பட்டுள்ளது. இது எமது தற்போதைய உரையாடல் சார்ந்ததாக இருப்பதால் இந்தப்பகிர்வு:

முதலாவது நாம் தலைக்கீழ் குடம் போன்று இருப்பதை தவித்துக்கொள்ள வேண்டும். இப்படி உள்ள குடத்தினுள் எதுவும் செல்லாது. உதாரணமாக குரு எதைச் சொன்னாலும் தமக்கு அது தெரியும் என்று மனதை எதிர்ப்பு உணர்ச்சியில் வைத்திருக்கும் மாணாக்கர்கள் தலைகீழ் குடம் போன்றவர்கள். இவர்கள் மனதிற்குள் குரு சொல்லும் எதுவும் செல்வதில்லை.

அடுத்தது ஓட்டைக்குடம், இதுபற்றி ஏற்கனவே நிறைய உரையாடியுள்ளோம்.

மூன்றாவது, ஊத்தைக்குடம், இது அழுக்கு நிறைந்திருக்கும். இதற்குள் தூய நீரை விட்டாலும் அழுக்காக்கி விடும். சில மாணக்கார்கள் தாம் ஏற்கனவே சேர்த்துவைத்த அழுக்கு வியக்கியானங்களை குரு சொல்லும் ஞானத்திற்கு வியாக்கியானமாக சொல்லி அழுக்காக்கி விடுவார்கள்.

ஆகவே ஒரு சாதகன் தனது குருவின் உபதேசத்தில் இந்த மூன்று நிலைகளிலும் தவறு விட்டுவிடாமல் சுத்தமான, நீரை ஏற்கும் குடமாக தனது மனதை பண்படுத்தி நிறைகுடமாக்குவதே சாதனையின் நோக்கம்.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...