முதலாவது
மன ஒருமைப்பாட்டிற்கும் ஆன்மாவினை அறியும் தன்னறிவுச் சாதனை
இந்த சாதனைக்கு முன்னர் குளித்து தோய்த்துலர்ந்த ஆடை அணிந்து தம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். தீர்த்தப்பாத்திரத்தில் நீர் வைத்துக்கொள்ள வேண்டும், உங்கள் ஜெபமாலையினை எடுத்துக்கொண்டு ஆசமனம், நியாசம், ஆவாஹனம், ஸ்தாபனம் செய்து தியான சுலோகத்தினை கூறிய பின்னர் தேவியை கீழ் வருமாறு தியானிக்கவும். நடுத்தர வயதுள்ள அழகிய பெண், புன்சிரிப்புடன், வெள்ளை ஆடையுடுத்தி எருதின் மீது அமர்ந்தவளாகவும், நான் கு கரங்களும் அவற்றில் ஜெபமாலை, கமண்டலம், புத்தகம், தாமரை இலை ஏந்தியவளாக தியானிக்கவும். இந்த தியான பாவத்தில் இருந்த வண்ணம் உங்கள் வழமையான ஜெப எண்ணிக்கையினை பூர்த்தி செய்யவும். ஜெபம் மனதிற்குள்ளேயோ, அல்லது உதடு மட்டும் அசைவதாகவே செய்யலாம்.
இந்த தியானம் மனதினை கட்டுப்படுத்தி சத்வ குணத்தினை அதிகரிக்கும். பொதுவாக இந்த தியானம் தமது வாழ்க்கையில் கடமைகளை முடித்தவர்கள், விதவைகள், கணவனை இழந்த பெண்கள் தம்மை ஆன்மீக வாழ்வில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள விரும்பும் பெண்கள் மட்டுமே செய்ய வேண்டியது. இந்த சாதனையால் சாதகி சுயகட்டுப்பாடு, ஞானம், அமைதி, மனவலிமை ஆகியன வளரத்தொடங்கி சாதகி ஒரு முழுமையான யோகினி நிலைக்கு உயர்வார். அவருடைய உணர்வுகள், செயல்கள், வாழ்க்கை முறை தூய சத்வ குணத்திற்கு வந்து ஒரு தபஸ்வினியாக வாழத்தொடங்குவார்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.