குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Friday, March 09, 2018

பிரணவ வித்யா பரிமளம் {ஓங்கார மந்திர இரகசியம்} - 04

அபரவித்தைகளை ப்ரோக்ஷ ஞானமெனவும் பரவித்தையை அப்ரோக்ஷ ஞானம் எனவும் வராஹோப நிஷத் முதலிவை குறிப்பிடுகிறது. இந்த இரண்டு ஞானத்திலும் 

  • அபரவித்தையின் தெளிவு ஞானத்திற் சரியை அதாவது கேட்டல் 
  • ஞானத்திற் கிரியை சிந்தித்தல்
பரவித்தையானது 


  • ஞானத்தில் யோகம் தெளிதல் 
  • ஞானத்தில் ஞானம் அதாவது நிஷ்டை எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது. 
அபரவித்தை இறுதி இலக்கில் பரவித்தையிலிருந்து வேறுபட்டிருந்தாலும் அபரவித்தை இறைவனின் படைப்புகளை பற்றி ஞானமாக துவி ஞானமாகவும், பரவித்தை அத்வைத ஞான அனுபவத்தையும் ஒருவனுக்கு தரும். 


இதை க்ருஷ்ணயஜுர் வேத அம்ருத பிந்துப நிஷத்தில் "சப்தப்ரஹ்மணி நிஷ்ணாத பரம்ப்ரஹ்மாதிகச்சதி" என்று சப்த ப்ரஹ்மமெனும் ஞானவிசாரத்தில் தேர்ச்சியடைந்தவன் பரப்பிரம்மத்தை அடைகிறான்" என்று உறுதி கூறுகிறது. 

ஒருவன் நிஷ்காமிய கர்மத்தால் சித்தத்தூய்மை பெற்று மலங்கள் அறுந்து பக்குவம் பெற்றாலும் தெய்வத்தின் அருள் இன்றி பர ஞானம் கிட்டாது. இதனை பெறும் வாய்ப்பினை அதிகரிக்க உள்ள மார்க்கம் "உபாசனை". உபாசனையை உருவம், அருவுருவம், அருவம், அதீதம் என நான் கு வகையாக செய்யலாம். இதை குருமுகமாய் உபதேசம் பெற்று தினசரி விடாமல் அப்பியாசித்து வர பர ஞானம் மேலிட்டு பிரம்ம ஸ்வரூபம் வெளிப்படும். இதையே வேதங்கள் உறுதி கூறுகின்றன. 

க்ருஷ்ண யஜுர் வேத கடோபனிஷத்தில் நாயாத்மா ப்ரவசதே நலப்யோமேதயா பஹுச்ஸ்ருதேன யமேவை ஷவ்ருணுதே தே நலப்யஸ்தஸ்யைஷ ஆத்மா வ்ருணுதே தனூம்ஸ்வாம் என்றவாறு இந்த பரமாத்மாவானவர் வேத அத்யாயனத்தாலோ, புத்தியினாலோ, அதேக சிரவணத்தாலோ அடையப்பெறுபவரல்லர், எவனை அவர் விரும்புகிறாரோ அவன் மட்டுமே அடைகிறான். அவனுக்கு பரமாதமாவானவர் தனது சொரூபத்தை காட்டி மகிழ்விக்கின்றார்" என்று கூறுகிறது. இதே மந்திரம் அதர்வண வேத முண்டகோப நிஷத்தில் உள்ளது. இதையே மாணிக்க வாசக பெருமான் "அவனருளாளேயவன்றாள் வணங்கி" என்றும் கூறியுள்ளார். 

தொடரும்... No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

சாதனையைத் தவறவிட்டல் மனம் மிகவும் துன்பமடைகிறதே?

என்னால் ஒரு நாள் கூட சாதனை செய்யாமல் இருக்க முடியவில்லை, அப்படி இருந்தால் வெறுமையாகவும் துன்பமாகவும் உணர்கிறேன்? இப்படி பலசாதகர்க...