கண்டுதான் ரோகந்தீர்க்குங் காவலன் தன்னை நோக்கி
விண்டுதன் குறைகள் சொல்லி மேவிய தூபங் காட்டி
கொண்டுதாம் பூலமீந்து குருவென் நினைப்போர்தானே (15)
ஒருவன் செய்யும் பாவத்தால் ஏற்பட்ட நோய்களை தீர்க்கும் சக்தியுள்ள வைத்தியரிட நோயாளி தன்னிடமுள்ள குறைகளை உரைத்து, அவருக்கு தூபங்காட்டி தாம்பூலமீந்து குருவிற்கு தரும் மரியாதையுடன் உபசரிக்க வேண்டும்.
இந்தப்பாடல் நோயாளி நோய் தீர எப்படி தனது மனோபாவத்தை வைத்திருக்க வேண்டும் என்பதை தெளிவாக கூறும் பாடல்.
இந்தப்பாடலில் கூறப்படும் விஷயங்கள்:
1. நோய் பாவத்தால் வருகிறது
2. அதைத்தீர்த்து காக்கும் ஆற்றல் உள்ளவன் மருத்துவன்
3. நோயாளி தன் மனந்திறந்து தனது குறைகளை உரைத்தல் வேண்டும்.
4. நோயாளி மருத்துவரை தனது குருவிற்கு நிகராக மதித்தல் வேண்டும்.
நோய் பாவத்தால் வருகிறது என்பது எமது மனதின் எண்ணங்களின் உடல் மீதான தாக்கத்தின் விளைவே நோய் என்பதை விளக்குகிறது.
மருத்துவன் என்பவன் மருந்துகளை மட்டும் கொடுப்பவன் அல்ல, நோயாளியின் மனதின், சித்தத்தின் வினைகளை அறிந்தவனாக இருக்க வேண்டும் என்பதையும் இந்தப்பாடல் கூறுகிறது.
நோயாளி சிகிச்சை அளிக்கும் மருத்துவனை மதிப்பளித்து தனது குறைகளை மனந்திறந்து சொல்லாத நிலையில் சிகிச்சை பலனளிக்காது.
ஆக இந்தப்பாடல் சிகிச்சை என்பது உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்று இயைந்த கலவை என்பதை நோயாளிக்கு புரியவைக்கிறது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.