குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, March 08, 2018

பிரணவ வித்யா பரிமளம் {ஓங்கார மந்திர இரகசியம்} - 01


Image result for ஓம்

ஒருவன் சத் எனும் உண்மையை அறியும் ஆவலுள்ள மானுட ஜென்மமாக பிறப்பதற்கு முன் ஜென்மத்தில் நற்கர்மங்களை செய்து அதன் புண்ணிய கர்மத்தால் மானிட சரீரம் பெறுகிறான் என்பது ரிஷிகளின் வாக்கியம். இதை

துர்லபம் ப்ராப்யா மாநுஷ்யம் தத்ராபி நரவிக்ரஹம்

மானுட தேகம் அருமையானது அதனிலும் புருஷதேகம் அருமையானது என்று க்ருஷ்ண யஜூர்  வேதத்தின் பாகமாகிய்  வராஹபோனிஷத்  கூறும்.

இப்படி அரிய மானிட சரீரத்தை பெற்ற ஒருவன் இது பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்டது, ஒரு கால எல்லைக்கு அப்பால் இந்த சரீரம் அற்றுப்போகும், அப்படியாயின் அதற்கு ஆதாரமான உயிரிற்கு எப்படி வலுச்சேர்ப்பது என்ற உண்மை அறிவு விழிப்படைய அதற்கான வழியை தேடுவதற்கு முற்படும் படிமுறையை தாயுமானார் கீழ்வருமாறு கூறுகிறார்.

 மூர்த்தி தலம் தீர்த்த முறையாற் தொடங்கினர்கோர்
வார்த்தைசொல்ல  சற்குருவும் வாய்க்கும் பராபரமே (தாயுமானார்)

ஒருவன் தனது உயிரை மேம்படுத்தும் செயலை செய்வதற்கு முறையாக மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று தன்னை ஈடுபடுத்துக்கொள்ள அந்த சத் சங்கத்தால் உண்மையை காட்டக்கூடிய சத்குரு கிடைப்பார் என்பதை கூறுகிறார்.

இப்படியான உண்மையை அறிவதற்குரிய ஆசிரியர் யார் என்பதை சாஸ்திரம் கீழ்வருமாறு கூறும்;

ஆசி நோ நஹி சாஸ்த்ரார்த்தம் ஆசாரேஸ்தாபயத்பி
ஸ்வயமாசரதேயச்ச தமாசார்யம் விதுர்புதா

எவன் சாஸ்த்திரங்களைக் கற்பாந், எவன் அவற்றை அனுஷ்டிப்பான், எவன் அவற்றை கற்பான் அவனே ஆசிரியன்.

இத்தகைய ஆசிரியனை அடைந்து ஆசிரியனிடம் வித்தை கேட்கும் முறையில் சிறிதும் பிறழாமல், அவர் பாதத்தை கனிவான இனிய மனத்துடன் பணிந்து சாஷ்டங்கமாக வணங்கி ஞானத்திற்கு ஏதுவான கேட்டல், கேட்டவற்றை சிந்தித்தல், சிந்தித்தவற்றை தெளிதல், தெளிந்ததை நிஷ்டையில் நிறுத்தல் ஆகிய நான் கு பண்புகளையும் தன்னில் உண்டாக்கி கொண்டு சரணடைய வேண்டும்.

இப்படி தகுதியுடன் சரணடைந்த மாணவன் தான் அறியவேண்டிய வித்தை முத்தி ஞானத்திற்கு ஆதாரமானது, சகல வேதங்களின் பரமரகசியமானதும்,  அனுபவத்தால் மட்டும் அறியக்கூடியதும், அனேக கோடி ஜென்மங்களிலே செய்த புண்ணிய பரிபாக முதிர்ச்சியால் மட்டுமே கிடைக்ககூடிய, சத்குரு நாதரின் கிருபையால் மட்டுமே அறியக்கூடியதாயுள்ள உபதேசத்தை தனக்கு உபதேசிக்க விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இப்படிக்கேட்டாலும் ஆசிரியன் மாணவனின் தகுதியை எப்படி நிர்ணயிப்பார் என்பதை க்ருஷ்ண யஜூர்வேத சுவேதாஸ்வர உபனிஷதம் கீழ்வருமாறு கூறுகிறது; “வேதாந்தத்தில் பரம ரகசியமாக உள்ளது, முன்னைய கற்பங்களில் வெளியிடப்பட்ட இந்த ஞானத்தை புத்திரனல்லாதவனுக்கும், சீடனாக தன்னை அர்ப்பணிக்க முடியதவனுக்கும், மன சாந்தி இல்லாதவனுக்கும் கொடுக்க கூடாது. எவனுக்கு இறைவனிடத்தில் சிறந்த பக்தி உண்டோ, அதே பக்தி குருவிடத்தில் உண்டோ, அந்த மகாத்மாவிற்கே இந்த ஞானம் கூறினால் சொன்ன பொருள் விளங்கும்” என்று கூறுகிறது.  இதில் புத்திரன் இல்லாதவனுக்கு கொடுக்க கூடாது என்று சொன்னதன் பொருள் இந்த ஞானம் வாழையடி வாழையாக மனித சமூகத்திற்கு கிடைப்பதற்குரிய வழியை செய்து வைத்துள்ளவனாக சீடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே.

இப்படியான சீடனும், மேலே கூறிய தகுதியுள்ள ஆசிரியனும் உண்மையை அறிய கூறும் உபதேசம் வருமாறு.

க்ருஷ்ண யஜூர் வேதத்தில் தைத்திரியோபனிஷத்  “ஆச்சார்யதேவோபவ” என்று கூறுகிறது. 

ஞானத்தை பெறும் விருப்புள்ள மாணவன் தனது ஆசிரியனை தேவனாக – இறைவனாக்கவே தனது மனதில் பாவிக்க வேண்டும். இதன் அர்த்தம் மிக நுண்மையானது. இன்று பலரும் தமது குருவே இறைவன் என்று பிரச்சாரம் செய்து மூடமதத்தினை உருவாக்கி வருகிறார்கள். ஒருவரை குருவாக, இறைவனாக ஊடகங்களால் பிரச்சாரப்படுத்துவதால் எவரும் குருவாக முடியாது, எந்த மாணவனும் ஞானம் பெற முடியாது.  ஞானத்தினை பெறுவதற்கு மனம் குறித்த பண்பில், அலைவரிசையில் இயங்கவேண்டும். இப்படி இயங்குவதற்கு தான் கற்கும் ஆசிரியனை இறைவனாக பாவிக்க வேண்டியது அவசியம். இப்படி பாவித்தால் மூலபரம்பொருள் அந்த ஆச்சாரியன் வடிவத்தில் அந்த சாதகனிற்கு தேவையான ஞானத்தை பிரவாகிக்கும். இதுவல்லாமல் தனது ஆச்சாரியனை வீணாக இறைவனாக எல்லோருக்கும் நிறுவப் போனால் 

“குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார், குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர், குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக் குருடும் குருடும் குழி விழுமாறே" என்று திருமூல நாயனார் கூறியபடி இருவரும் உண்மையை அறியாமல் போய் விடுவார்கள். 

இதனாலேயே உபனிஷதம் ஆச்சாரியனே தேவன் என்று சொல்லிவிட்டு ஆச்சாரியன் சாஸ்திரம் ஆகிய இரண்டும் வழிகாட்டும் இந்த ஞானமார்க்கத்தில் பிரவேசித்து அதில் உறுதியாக இரு, சிவனே குரு, சிவனே தேவன், சிவனே வேதம், சிவனே பிரபு” என்றும் எல்லா தத்துவங்களையும் நடத்தும் அவனது பார்வையில் பட்டவர்கள் அனைவரும் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள் என்று கூறுகிறது. இந்த வாக்கியங்கள் அறியாமையில் தமது குருவே உலகை படைத்த இறைவன் என்ற மயக்கத்தில் பிதற்றும் குருடர்கள் தெளிவதற்காக கூறப்பட்ட வாக்கியம். 

மீண்டும் குருவில்லாமல் இந்தப்பாதையில் வெற்றிபெறமுடியாது என்பதை உறுதியாக சாதகன் அறிய வேண்டும் என்பதற்காக சுக்ல யஜூர்வேத அத்வயதாரகோபனிஷத் “குருரவே ப்ரம்ப்ரஹ்ம – குருவே பரப்பிரம்மம் என்றும், மெய்கண்ட சாத்திரங்களி திருவருட்பயன் “ ஞானமிவனேழிய நண்ணியிடும் நற்கலனற் பானுவொழியப்படின்” என்ற வரிகளால் நல்ல சூரியகாந்திக்கல் சூரியன்ன் இல்லாமல் அக்கினியை தோற்றுவிக்காதோ அதுபோல் குருவில்லாமல் ஞானம் தோன்றாது” என்று குருவில்லாமல் ஞானம் தோன்றாது என்பதை உறுதிப்படுத்துகிறது. 

ஆகவே மாணவன் குருவின் தேவையும் அதை அறியாமையால் பரிணாமத்தை குறைத்துக்கொள்ளாமலும் இருக்கும் வண்ணம் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டிய அறிவுரை மேலே தரப்பட்டது. 

இனி ஆதியில் முதற்குருவான தக்ஷிணாமூர்த்தி சனாகாதி முனிவர்களுக்கு உபதேசித்த சர்வ மந்திர சார மூல மந்திரம் எதுவென்பதே முதல் உபதேசம். இதையே அகத்திய மகரிஷியும் தனது ஞானத்தில் “கார்த்தக்காலோரெழுத்து வழியுஞ்சொல்வார்” என்று கூறியுள்ளார். 

இந்த இரகசியம் “ஓம் என்ற பிரணவ ஏகாக்ஷர மந்திரம். 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...