குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Monday, July 29, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 30: நாமங்கள் 76 - 80

விசுக்ர-ப்ராணஹரண்-வாராஹி-வீர்ய-நந்திதாயை (76)
விசுக்ரனை கொன்ற வாராஹியின் வீர்யத்தை மெச்சுபவள்
விசுக்ர‌ன் ப‌ண்டாசூர‌ன‌து ம‌ற்றைய‌ ச‌கோத‌ர‌ன் (மேலே நாமாவில் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து. வாராகி விசுக்ர‌னை வ‌த‌ம் செய்தாள். இத‌னால் ல‌லிதை மிக்க‌ ம‌கிழ்வுற்றாள்.
74,75, 76 ம் நாமாக்க‌ள் பாலா, ம‌ந்திரிணி, வாராகி ஆகிய‌ மூவ‌ரைப்ப‌ற்றியும் பேசுகிற‌து. க‌றை அல்ல‌து அழுக்கினை ச‌ம‌ஸ்க்ருத‌த்தில் ம‌ல‌ என‌ப்ப‌டும். இந்த‌ மூன்று தேவிய‌ரும் புல‌ன் இச்சையால் ல‌லிதையின் ப‌க்த‌னின் ம‌ன‌தில் எழும் அழுக்கினை அக‌ற்றுகின்ற‌ன‌ர். இந்த‌ ம‌ன‌ அழுக்குக‌ளில் மிக‌வும் மோச‌மான‌து ஆண‌வ‌ம், பாலாவினைப்ப‌ற்றிக் கூறும் போது பாலா என்றால் ப‌ல‌ம் என‌ப்ப‌டுகிறது. ஒருவ‌ன் தெய்வ‌ ச‌க்தியை த‌ன்னில் ஏற்றுக்கொள்ள த‌குந்த‌ வ‌கையில் உட‌லைப் பல‌மாக‌ வைத்திருக்க‌ வேண்டும். பொதுவாக‌ தீட்சையின் போதும் தியானத்தின போதும் ச‌க‌ஸ்ரார‌ ச‌க்க‌ர‌த்தினூடாக‌வும், பிட‌ரிச்ச‌க்க‌ர‌த்தினூடாக‌வும் தெய்வ சக்திகள் செலுத்தப்படுகின்றன. மந்திரிணி தேவி பஞ்சதசி, சோடஷி போன்ற மந்திரங்களின் வீரியமாக குறிக்கப்படுகிறாள். புராதன மந்திரசாஸ்திர விதிப்பிரகாரம் ஒவ்வொரு மந்திரமும் குறித்த நியமங்களுடன் குறித்தளவு தடவைகள் ஜெபிக்கப்படவேண்டும். இதனை புரஸ்சரணம் என்பார்கள். மூன்று தேவிய‌ர்க‌ளிலும் வாராகி மிக‌வும் உக்கிர‌மான‌வ‌ள், அவ‌ளால் எந்த‌வித‌ ஒழுக்க‌ஹீன‌ங்க‌ளையும் பொறுத்துக்கொள்ள‌மாட்டாள். வாராகி தேவி உபாச‌னையில் சாத‌க‌ன் க‌டைப்பிடிக்க‌ வேண்டிய‌ க‌ட்டுப்பாடுக‌ள் ஒழுக்க‌ங்க‌ளை குறிக்கும், அதாவ‌து வாராகியினை உபாசிப்ப‌த‌ன் மூல‌மே உபாச‌க‌ன் தேவியினை உபாசிக்கும் ப‌ண்பினைப் பெறுகின்றான். இந்த‌ மூன்று தெய்வ‌ச‌க்திக‌ளும் லலிதையாகிய‌ உய‌ர் தெய்வ‌ ச‌க்தியினை அடைய‌ உபாச‌க‌ன் கொண்டிருக்க‌வேண்டிய‌ ப‌ண்புக‌ளின் வ‌டிவ‌ம் அல்ல‌து ப‌ண்புக‌ளை வ‌ழ‌ங்குப‌வ‌ர்க‌ள். அந்த‌ மூன்று ப‌ண்புக‌ளும் உட‌ல் வ‌லிமை, ம‌ன‌தினை க‌ட்டுப்ப‌டுத்தும் ஆற்றல் (இது மந்திர ஜெபத்தால் வாய்க்கும், ஒழுக்க‌மும் புலன்களின் க‌ட்டுப்பாடும் ஆகும், இவ‌ற்றை அடைந்த‌வ‌ர்க‌ள் த‌ன்னில் இறைவ‌னை உண‌ர‌லாம். இந்த‌ நிலையினை அடைந்த‌ சாத‌க‌ன் த‌ன்னில் த‌ன‌து உட‌லினை முக்தி அடைவ‌த‌ற்குரிய‌ சாத‌னமாக‌ உண‌ர்ந்து தேவியுட‌ன் இர‌ண்ட‌ற‌க்க‌ல‌ப்பான்.

காமேச்வர-முகாலோக-கல்பித-ஸ்ரீகணேஸ்வராயை (77)
காமேஸ்வரது முக தரிசனத்தால் கணேசனைப் பெற்றவள்
க‌ணேச‌ர் ல‌லிதை காமேச்வரரை பார்க்கும் பார்வையில் தோன்றிய‌வ‌ர். க‌ணேச‌ர் சிவ‌ன‌தும் பார்வ‌தியின‌தும் மூத்த‌ புத‌ல்வ‌ர். ப‌ண்டாசூர‌னுட‌னான‌ போரில் ப‌ண்டாசூர‌ன் த‌ன‌து ப‌டைக‌ள் அழிக்க‌ப்ப‌ட்டு வ‌ருவ‌தைக் காண்கிறான். அத‌னைத்த‌டுக்கும் முக‌மாக‌ ஜ‌ய‌ விக்கின‌ம் என்ற‌ ய‌ந்திர‌த்தினை ல‌லிதையின் சேனையின் ந‌டுவில் வைக்கிறான். ய‌ந்திர‌ங்க‌ள் ம‌ந்திர‌ப் பிர‌யோக‌ங்க‌ளுட‌ன் ப‌ய‌ன்ப‌டுத்தும் போது மிக‌ச் ச‌க்தி வாய்ந்த‌வை. இந்த‌ ய‌ந்திர‌ம் ல‌லிதையின் சேனையினுள் வைக்க‌ப்ப‌ட்ட‌வுடன் லலிதையின் படையினர் தன்னம்பிக்கை இழந்து சோர்வுறத்தொடங்குகின்றனர். மந்திரங்களின் அதிபதியான மந்திரிணி இதனை உணர்ந்து லலிதையிடம் முறையிடுகின்றாள். இந்த விக்கின யந்திரம் எவர் ஒருவர் கீழ்வரும் எட்டு புர்யஷ்டகங்களையும் வெற்றி கொண்டவரோ அவரால் மட்டுமே நீக்கப்படக்கூடியதாக இருக்கிறது. அந்த எட்டுப் புர்யஷ்டகங்களும் 1)ஐந்து கர்மேந்திரியங்கள் 2)ஐந்து ஞானேந்திரியங்கள் 3)அந்தக்கரணங்க ( நான்கு மனம், புத்தி, சித்தம், அகங்காரம்) 4) ஐந்து பிராணன்கள் 5) பஞ்ச பூதங்கள் 6)ஆசை 7) அறியாமை 8)கர்மா இந்த புர்யஷ்டகத்தின் எட்டுத்தொகுதிகளும் இருபத்தியேழாக விரிகின்றது, இத்துடன் சிவன் சேர்க்கப்படும் போது மொத்தம் இருபத்தியெட்டு ஆகின்றது. இதுவே மகாகணபதி மூல மந்திரங்களின் அட்சர‌மாகின்றது. மகா கணபதி மந்திரத்தின் இந்த 28 அட்சரங்களும் 27 புர்யஷ்டங்களை கட்டுப்படுத்தி சாதகனில் குணங்கள் உடைய சிவத்தன்மையினை உருவாக்கிறது. குணங்கள் உடைய சிவத்தன்மை (சகுணப்பிரம்மம்) உண்டாகி படிப்படியாக குணங்கள் அற்ற் தூய சிவமாகிய நிர்குணப்பிரம்மத்தினை அடைவிக்கிறது. இறுதியாக சாதகன் முக்தி அடைவதன் மூலம் எல்லையற்ற பேரானந்தத்தினை அடைகிறான்.

சிவ சூத்திரம் (3.42) கூறூகிறது; "பூத கஞ்சுகி தத விமுக்தோ புஹ பதிசமக பரஹ", இதன் பொருள் " அவனிற்கு (யோகியிற்கு), பஞ்ச பூதங்கள் வெறும் கவசம் மட்டுமே, முக்தியடைந்த அந்தக்கணத்தில் அதியுயர்ந்த சிவத்தன்மையினை அடைகிறான்".
இந்த நாமம் ஒருவன் முக்தியடையும் பாதையில் முன்னேறும் படிமுறைகளைக்குறிப்பிடுகிறது.

மஹாகணேச-நிர்பின்ன-விக்னயந்த்ர-ப்ரஹர்ஷிதாயை (78)
விக்ன யந்திரத்தை பொடியாக்கிய கணேசரைக்கண்டு மகிழ்ந்தவள்’
இது முதல் நாமத்தின் தொடர்ச்சி, மஹா கணேசர் பண்டாசூரனால் லலிதையின் சேனைக்குள் வைக்கப்பட்ட ஜய விக்ன யந்திரத்தினை அகற்றுவதற்காக உருவாக்கப்பட்டவர். அதன்படி கணேசர் அந்த யந்திரத்தினை அகற்றி லலிதையின் படையினை தன்னபிக்கை பெற உதவினார். அந்த யந்திரத்தினை அகற்றியதை அறிந்து லலிதை மிக்க மகிழ்வுற்றாள்.  இந்த இரண்டு நாமங்களினதும் அழகினை நாம் அறிய வேண்டும். எல்லாவித தீயகாரியங்களும் ஜய விக்ன யந்திரத்தினால் குறிக்கப்படுகிறது. எல்லாவித தீய காரியங்களுக்கும் காரணம் மாயை, மாயையினை உண்டாக்கியவள் லலிதை அவள் மட்டுமே அந்த மாயையின் திரையினை அகற்ற முடியும்.  அவள் அந்த மாயை திரையினை அகற்றிய அக்கணம் சிவனை உணரமுடியும். ஆனால் லலிதை தானாக ஒருபோது அந்த மாயைத்திரையினை அகற்ற மாட்டாள். ஒருவனுடைய முயற்சி கண்டு மட்டுமே அவள் மாயையினை அகற்றுவாள். அதனாலேயே அவள் குரு என அழைக்கப்படுகிறாள். இது பற்றிய விபரம் 713 வது நாமத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.

பண்டாஸுரேந்திர-நிர்முக்த-சஸ்த்ர-ப்ரத்யஸ்-த்ரவர்ஷிதாயை (79)
பண்டாஸுரன் விட்ட பாணங்களுக்கு பிரதி பாணங்களை விட்டவள்

பண்டாசூரனால செலுத்தப்பட்ட அஸ்திரங்களை தன்னுடைய ஆயுதங்களால் திருப்புகிறாள். இங்கு இரண்டு வகையான ஆயுதங்கள் கூறப்படுகின்றன. ஒன்று அஸ்திரம், இது எதிரிகள் மீது வீசப்படுவது, தற்கால வெடிகுண்டுகளை ஒத்தது. இரண்டாவது சஸ்த்ர, இது எப்போதும் கையில் இருப்பது, தற்கால துப்பாக்கிகளை ஒத்தது. லலிதையின் கைகளில் இருக்கு ஆயுதங்கள் எமது முயற்சியின் மூலம் அவித்தையினை அழித்து ஆனந்தத்தினை அடைய உதவுகின்றன. அவளது கைகளில் உள்ள ஆயுதங்கள் இருமை என்ற மயக்கத்தினை அழிக்கின்றது. 77,78, 79 ஆகிய இந்த மூன்று நாமங்களும் தன்னையறியும் பாதையினை ஆரம்பித்த சாதகன் பயணிக்க வேண்டிய படிகளையும், அதற்கு தேவி எப்படி உதவி உயர்ந்த இலட்சியத்தை அடைவிக்கிறாள் என்பதையும் விபரிக்கின்றது.

கராங்குலி-நகோத்பன்ன-நாராயண-தசாக்ருத்யை (80)
கைவிரல் நுனிகளால் நாராயணனது தசாவதாரங்களை தோற்றிவித்தவள்
தனது நகங்களில் இருந்து நாராயணனின் பத்து அவதாரங்களை தோற்றுவித்தவள். பண்டாசூரன் தனது சர்வாஸுரஅஸ்திரத்திலிருந்து இராவணன் முதலான பத்து அசுரர்களையும் தோற்றுவித்தான். அந்தப்பத்து அசுரர்களும் நாரயாணன் மூலம் பத்து அவதாரங்களில் கொல்லப்பட்டார்கள். ஜீவனும் ஈஸ்வரனும் சேர்ந்த வடிவம் நாராயணன், தசக்ருத என்பது மனிதனது ஐந்து நிலைகளான விழிப்பு, உறக்கம், கனவு, துரியம் (முதல் மூன்று நிலைகளிலும் உணர்வுடன் இருத்தல்) தூரியாதிதம் (துரியத்திற்கு மேற்பட்ட நிலை, இந்த நிலையில் இருமை அற்று உணர்வு பிரம்மத்துடன் கலக்கத் தொடங்கும்)பிரம்மத்தின் ஐந்து தொழிகளான்  ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல்,மறைத்தல் ஆகியன சேர்ந்து தஸக்ருத எனும் பத்தும் உருவாகின்றன. இங்கு நாராயண என்பது மஹா விஷ்ணுவைக்குறிக்கவில்லை என்றே கருத வேண்டும். விஷ்ணு லலிதையின் சகோதரர், ஆகவே வாக்தேவிகள் இங்கு குறிப்பிடப்படும் நாராயணன் வேறு விடயத்தினை குறிப்பதாக அமையவேண்டும். ஆகவே இதன் சரியான பொருள் மனிதனது ஐந்து உணர்வு நிலைகளும், பிரம்மத்தின் ஐந்து தொழில்களுமாக தனது பத்து நகங்களில் இருந்து உருவாக்கினாள் என்பதாகும்.
ஏற்கனவே தேவியின் பிரகாச விமர்ச ரூபங்கள் விபரிக்கப்பட்டுள்ளது. இந்த சகஸ்ர நாமத்தில் உள்ள ஒவ்வொரு நாமமும் இந்த இரண்டு ரூபத்தில் ஏதாவது ஒன்றைப்பற்றியே விபரிக்கும்.{துரியம், தூரியாதீதம் பற்றிய மேலதிக குறிப்புகள்: துரியம் உணர்வின் நான்காவது நிலை, இது மற்றைய விழிப்பு, உறக்கம், கனவு ஆகிய மூன்று நிலைகளையும் ஒன்றாகச் சேர்த்த நிலை, இந்த துரிய நிலை ஆன்மீக உணர்வு நிலை, இது உளவியல் குறிப்பிடும் உணர்வு நிலையிலும் மாறுபட்டது. இது தெய்வத்தினை சாட்சிபாவமாக உணர்ந்த நிலை.
துரியாதீத என்பது மனது துரியத்தினை கடந்த நிலை, இந்த நிலையில் மனதின் பாகுபடுத்தும் தன்மை இழந்து பிரம்மத்துடன் ஒன்றும் நிலை ஆரம்பிக்கும். இந்த நிலையினை அடைந்தவருக்கும் முழுப்பிரபஞ்சமும் ஒன்றான பொருளாகா அதீத ஆனந்தத்தில் நித்தமும் திளைத்திருப்பர். 


*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" } -  சுமனன் 
******************************************************************************************************************************************

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

முடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making

முடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...