குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, July 27, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 29: நாமங்கள் 71 - 75

ஜ்வாலாமாலினிகாக்ஷிப்த-வஹ்நிப்ராகார-மத்யகாயை (71)
ஜ்வாலாமாலினி சக்தியால் அமைக்கப்பட்ட அக்னிக்கோட்டை நடுவிலிருப்பவள்

ஜ்வாலாமாலினி என்பவள் தேவியின் திதி நித்யாக்களில் ஓருவள், அவள் தேவியிற்கு அக்னியாலான பாதுகாப்பு அரண் அமைப்பவள். லலிதை அந்த அக்னி கோட்டைக்கு நடுவில் வசிக்கின்றாள். திதி நித்யா தேவி என்பவர்கள் சந்திர மாதத்தின் ஒவ்வொரு திதிக்கும் உரியவர்கள். பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் இடையில் பதினைந்து நாட்கள் உள்ளன, பதினாறாவது நாள் பௌர்ணமி அல்லது அமாவாசையாக வரும். இந்த ஒவ்வொரு நாளும் திதி எனப்படும். இந்த ஒவ்வொரு திதிகளுக்கும் ஒவ்வொரு தேவியர் இருக்கின்றனர். ஜ்வாலாமாலினி பதினான் காவது நாளாகிய சதுர்தசிக்குரிய திதி நித்யா ஆவாள். லலிதாம்பிகை மஹா நித்யா என அழைக்கப்படுகிறாள். மஹா நித்யா பௌர்ணமி மற்றும் அமாவாசையினை குறிப்பவள். இந்த பதினைந்து தேவியரும் ஸ்ரீ சக்கரத்தின் ஒன்பதாவது ஆவரணமாகிய முக்கோணத்தில் வணங்கப்படுபவர்கள். ஒவ்வொரு பக்கத்திற்கும் ஐந்து தேவியர் வீதம் பதினைந்து நித்யாக்களும் நடுவில் பிந்து ஸ்தானத்தில் மஹா நித்யாதேவியும் ஸ்ரீ சக்கரத்தில் வீற்றிருக்கின்றனர்.
பண்டாஸுரனுடனான போரின் போது லலிதை ஜ்வாலாமாலினியிடம் தனது படைக்களுக்கு பாதுகாப்பு அரணாக நெருப்பாலான கோட்டையினை உருவாக்கும்படி உத்தரவிடுகிறாள். ஜ்வாலா மாலினி என்பது ஸ்ரீ சக்கரத்தில் உள்ள ஐந்து சக்தி சக்கரங்களையும் குறிக்கும். “அக்ஷிப்த” என்றால் கலந்த என்று பொருள், வாஹினி (நெருப்பு என்றும் பொருள் படும்) ப்ராஹார என்றால் ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் இருக்கும் நான் கு மேல் நோக்கிய சிவ சக்கரங்களைக்குறிக்கும். லலிதை ஸ்ரீ சக்கரத்தில் ஐந்து சக்தி சக்கரங்களுக்கும் நான் கு சிவச்சக்கரங்களுக்கும் நடுவில் பிந்து ஸ்தானத்தின் உறைகிறாள்.

ஞானி என்பவன் அறிவின் மூலம் பிரம்மத்தை அறிந்து உணர்ந்தவன். அதனாலேயே க்ருஷ்ணன் கீதையில் கூறுகிறான் “நான் ஞானியை விரும்புகிறேன்” என்று. அத்தகைய ஞானிகள் கூட தாம் பிரம்மத்துடன் இரண்டற கலக்கும் முன்பு பிறப்பு இறப்பாகிய சக்கரத்தினூடே செல்கின்றனர். ஆனால் அத்தகைய ஒவ்வொரு பிறப்பிலும் அவர்கள் பிரம்மத்தினை அறிவதற்கான முயற்சிகளை தொடர்கின்றனர். ஞானி என்பன் அரிவாகிய தீயினை உடையவன். அந்த தீ அறியாமையினை எரிக்கின்றது. ஜ்வாலா மாலா என்றால் தீயால் ஆன மாலை எனவும் பொருள்படும். ஞானியானவன் பிரம்மத்தினை அறிய அறிவாகிய தீயினை மாலையாக அணிந்திருக்கிறான். இந்த அறிவுத்தீ அறியாமையினை அழிக்கிறது. ஞானி பிரம்மத்தினை உணரும் போது இந்தபிரபஞ்சத்தினை படைப்பவனை அறிகிறான். அந்த பிரம்மமே படைப்பவனாக இருக்கிறது. வாஹினிப்ப்ரகாரா என்றால் நெருப்பால் சூழப்பட்டது என்று பொருள். இங்கு இரண்டு பொருள் கொள்ளப்படுகிறது. ஒன்று ஞானி மற்றது நெருப்பு. சாதாரண நெருப்பில் இருந்து வரும் பொறி ஒளியையும் வெப்பத்தினையும் உருவாக்கு பின்னர் சாம்பல் ஆகிறது. அறிவாகிய தீ உருவாகி, வாழ்க்கையில் தொடர்ந்து பிறப்பிற்கு சாட்சியாக அமைகிறது. அந்த நெருப்பே காத்து அழிக்கின்றது. நெருப்புச் சுடரே அதிலிருந்து உருவாகும் பொறிகளுக்கு சாட்சியாக இருக்கிறது. இந்த நெருப்பு பிரம்மத்தினை குறிப்பதாகவும் அதுவே அனைத்திற்கும் செயலாகவும், எதனுடனும் ஒட்டாமலும், எல்லாமாகவும், சாட்சியாகவும் இருக்கிறது. இந்த விடயம் விரிவாக ஸ்பந்த காரிகா (சிவ சூத்திரத்திரத்தின் உரையாக கொள்ளப்படுவது)  எனப்படும் நூலில் விளக்க்பட்டுள்ளது. இது இரண்டு படிமுறைகளில் விளக்குகிறது. முதலாவது ஒரே பொருளே பார்ப்பவனாகவும் பார்க்கப்படுவதாகவும் இருக்கிறது. இந்த இரண்டிலும் பார்க்கப்படுவது (தீப்பொறி உவமானமாக கூறப்படுகிறது) அழிவுறுவது, பார்ப்பவன் (தீச்சுடர்) அழிவுறுவதில்ல்லை. சிவசூத்திரம் மேலும் அத்தகைய ஞானிகளின் படி நிலைகள் பற்றி விபரிக்கின்றது. இத்தகைய ஞானிகள் சிவனிற்கு ஒப்பானவர்கள். அழியக்கூடிய உடலில் இருந்துகொண்டு அழியாத உணர்வினை சிவத்துடன் கலந்தவர்கள். அவர்களுடைய அழியக்கூடிய உடல் மட்டுமே சிவனை விட வேறான ஒன்று. அத்தகைய தூய உணர்வுடைய ஞானிகள் தமது நிலைப்பிற்காக எதிலும் தங்கியிருப்பதில்லை. அதாவது அந்த ஞானி சிவத்துடன் தனது உணர்வினை இணைத்திருக்கும் வரை தனது உடல் நிலைத்திருப்பதற்காக எதனையும் செய்வதில்லை. இந்த உணர்வில் நிலைத்திருப்பதே பெரும் உணவாக இருக்கும்.

இந்த நாமத்தின் ஆழமான அர்த்தம் லலிதை படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செய்கைகளையும் செய்கிறாள் என்பதனை விளக்குகிறது. அவளே முத்தொழில்களுக்கும் காரணமாக இருப்பினும் அவற்றில் தனிப்பட ஈடுபடாமல் சாட்சிபாவமாக அனைத்திற்கும் காரணமாக இருக்கிறாள், இதுவே பிரம்மத்தினுடைய தன்மைகள், தேவி பிரம்மத்தின் வடிவாக இருக்கிறாள். மிகமுக்கியமாக வெளிக்காரணங்களைப்பற்றி கவலைப்படுவதோ அவற்றில் தங்கியிருப்பதே கிடையாது. வெளியுலகில் தொடர்புற்றிருந்தாலும் அவனது உணர்வு பிரம்மத்திலேயே இலயித்திருக்கும்.

{ஞானி பற்றிய மேலதிக குறிப்புகள்: ஞானி என்பவர் தனது இறைசாதனைக்காக ஞானப்பாதையினை தேர்ந்தெடுத்தவராவர். ஞானம் என்பது அறிவினைக் குறிக்கும், அதாவது தூய தன்னுணர்வினை குறிக்கும். நானே பிரம்மன் (அஹம் பிரம்மாஸ்மி) என்று உணரும் ஞானத்திற்கு இரண்டு வழிமுறைகள் உண்டு. ஒன்று “ நானே அவன்” மற்றது “நான் அவனுடையவன்” என்று உணர்தல். இரண்டும் பிரம்மத்தினை அறிவதற்கு இட்டுச்செல்லும். ஆனால் வெவ்வேறு நிலைகளில்!, “நானே அவன்” என்று அறியும் வழியில் தன்னுடைய ஆன்மாவினை பிரம்மத்துடன் அடையாளம் கண்டு நிர்குணப்பிரம்மத்தினை (குணங்கள் அற்ற) அறிந்து உணர்வதன் மூலம் சாத்தியமாகிறது. இந்தப்பாதை மிகவும் சவால்கள் நிறைந்ததுடன் கடைப்பிடிப்பதற்கு கடினமானது. இந்தப்பாதையில் பயணிப்பதற்கு மிகுந்த உறுதியும் அர்ப்பணிப்பும் தேவை. எமது புத்தியுடன் சேர்ந்த அர்ப்பணிப்பே அத்தியாவசியமான ஒரு தன்மையாகும். இரண்டாவது பாதையான “நான் அவனுடையவன்” ஒப்பீட்டளவில் இலகுவான பாதையாகும். ஆனால் தாழ்ந்த பாதையல்ல. இந்த நிலையில் ஒருவன் தன்னுடைய இஷ்ட தெய்வத்துடன் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறான். இங்கு பிரம்மன் இஷ்ட தெய்வத்தின் மூலம் அடையப்படுகிறது. சகுணப்பிரம்மத்தினை உணர்ந்தறிவதால் பிரம்மம் அறியப்படுகிறது. இந்தப் பாதை சற்று சுற்றுப்பாதையாக இருந்தாலும் இறுதி இலக்கு ஒன்றுதான். இது பக்தி மார்க்கம் எனவும் கூறப்படுகிறது,

இவற்றைப்பற்றி இரண்டாவது பாதை சற்று சுற்றுப்பாதையே என்றாலும் சிறந்தது என்ற மிக உறுதியான கருத்து உள்ளது. இந்தப்பாதையின் ஊடாக செல்லும் போது அவன் எல்லாவிதமான அனுபவங்களினூடாகவும் செல்லும் வாய்ப்பு அவனுக்கு கிட்டுகிறது, ஆரம்பத்தில் பூஜை, புனஸ்காரங்களுடன் தொடங்கி ஜெபம், தியானம் ஊடாக இறுதியாக பிரம்மத்தினை அடையும் பாதையினை அறியும் வழிமுறையினை தேர்ந்தெடுக்க தொடங்குகின்றான், இந்த பரிணாம உயர்வு பல பிறவிகளினூடாக உண்டாகின்றது. நேரடி வழிமுறை மிக கடினமானது. அதனூடாக பயணிப்பதற்கு அளவு கடந்த ஞானமும், இச்சா சக்தியும், மனக்கட்டுப்பாடும் அவசியமாகும், உண்மையான ஞானி எனப்படும் போது தனது மனதை ஞானத்துடனும் ஆன்மாவின் ஆனந்தத்துடனும் கலந்து தனது மனதை பலபடிமுறைகளினூடாக உயர்த்தியவராக இருத்தல் வேண்டும் என்று கூறப்படுகிறது. இறையை அறியும் பண்பு அத்தகைய மனதிற்கே வாய்க்கும்}

பண்டஸைன்ய-வதோத்யுக்த-சக்திவிக்ரம-ஹர்ஷிதாயை (72)
பண்டாஸுரனது சேனைகளை அழிப்பதில் பராக்கிரமம் காட்டிய சக்திகளிடன் சந்தோஷித்தவள்
பண்டாசூரனது சேனையினை தேவியின் படை அழித்தவுடன் தேவி பெரும் திருப்தி அடைந்தாள்.

பண்டா என்றால் இருமை என்ற அறியாமையில் மூழ்கியிருக்கும் ஆன்மா, சைன்ய என்றாலும் இருமையினையே ( ஆன்மாவும் பிரம்மமும் வேறு  என்ற மயக்கம்) குறிக்கும்.  வத என்றால் அழித்தல் என்று பொருள். ல‌லிதை ஆன்மாவும் பிர‌ம்ம‌மும் வேறு என்ற‌ மய‌க்க‌த்தினை அழித்த‌லில் திருப்திய‌டைகிறாள் என்ப‌த‌னையே இந்த‌ நாமா வெளிப்ப‌டுத்துகிற‌து. இந்த‌ இருமை அழிந்தான் ஆன்மாவினை சூழ‌ இருக்கும் மாயைத்திரை அக‌ல்கிற‌து. இந்த‌ இருமையினை அழிப்ப‌த‌ற்கு ம‌ன‌தின் துணைகொண்டு அக‌வ‌ய‌ ஆர‌ய்ச்சி மூல‌ம் மட்டுமே சாதிக்க‌ முடியும்.


நித்யா-பராக்ரமாடோப-நிரீக்ஷண-ஸமுத்ஸுகாயை (73)
நித்யா தேவதைகளின் பராக்கிரமத்தை பார்ப்பதில் உற்சாகம் உள்ளவள்

நித்யா என்றால் திதி நித்யா தேவி (பார்க்க‌ நாம‌ம் 71)ல‌லிதை போரில் ப‌தினைந்து திதி நித்யா தேவிக‌ள‌தும் ப‌ராக்கிர‌ம‌ம் க‌ண்டு மிக்க‌ ம‌கிழ்ச்சியுற்றாள்.
ஆன்மாவேறு பிர‌ம்ம‌ம் வேறு என்ற‌ இருமை அக‌ன்று மாயை திரை அக‌லும் போது ஒருவ‌னில் பிர‌ம்ம‌த்தினைப்ப‌ற்றிய‌ அறிவு மெது மெதுவாக‌ வ‌ள‌ர‌த்தொட‌ங்கும். அவ்வாறு அடைய‌ப்ப‌ட்ட‌ அறிவினால் சாத‌க‌ன் மேலும் த‌ன‌து சாத‌னையில் முன்னேற‌த்தொட‌ங்குகிறான், இப்ப‌டி அடைய‌ப்பட்ட‌ முன்னேற்ற‌ம் அவ‌னை விட்டு அக‌ல்வ‌தில்லை. (வெகு அரிதாக‌வே கீழ் ப‌ரிணாம‌த்தினுள் செல்லும் நில‌மை சாத‌க‌னுக்கு அமையும்). இதுவே இந்த‌ நாம‌த்தின் இர‌க‌சிய‌ர்த்த‌ம் ஆகும்.


பண்ட புத்ர-வதோத்யுக்த-பாலா-விக்ரம-நந்திதாயை (74)
பாலாதேவி பண்ட புத்திரரகளை அழிப்பதில் காட்டிய பராக்கிரமத்தைக் கண்டு மகிழ்ந்தவள்
பாலா ல‌லிதையின் ஒன்ப‌து வ‌ய‌தான‌ ம‌க‌ள். ப‌ண்டாசூர‌னுக்கு முப்ப‌து புத்திர‌ர்க‌ள் இருந்தார்க‌ள். ல‌லிதை த‌ன‌து சிறிய‌ மக‌ளை போர்க‌ள‌த்திற்கு செல்ல‌வேண்டாம் என்று த‌டுக்கிறாள். பாலா தனது தாயின் பேச்சினை ம‌றுத்து போர்க்க‌ள‌ம் புகுந்து ப‌ண்டாசூர‌ன‌து முப்ப‌து ம‌க‌ன்க‌ளையும் எதிர்த்து அழிக்கிறாள்.
ஸ்ரீ வித்தை பார‌ம்ப‌ரிய‌த்தில் எப்போதும் முத‌லாவ‌து தீட்சை பாலா ம‌ந்திர‌மாகும். ஒருவ‌ன் பாலா ம‌ந்திர‌த்தில் சித்திய‌டைந்தால் அவ‌ன் அரிய‌ சித்திக‌ளை அடைவ‌துட‌ன் மூலிகை சித்தியும் அடைவான். சில‌ அரிய‌ மூலிகைக‌ள் த‌குந்த‌ முறையில் உப‌யோகிக்க‌ப்ப‌டும் போது அரிய‌ ப‌ல‌ சித்திக‌ளை அளிக்க‌ வ‌ல்ல‌து. இந்த‌ ஞான‌ம் பாலா ம‌ந்திர‌ சித்திய‌டைந்த‌வ‌னுக்கே வாய்க்கும்.
 ல‌லிதை, ம‌ந்திரிணி, வாராகி ஆகிய‌ மூவ‌ருக்கும் அங்க, உபாங்க பிரத்யங்க‌ தேவ‌தைக‌ள் உள்ளார்க‌ள். பாலா லலிதையின் அங்க‌தேவ‌தை என‌ப்ப‌டுவாள். ல‌லிதையின் உபாங்க‌ தேவ‌தை அன்ன‌ப்பூர்ணா, பிர‌த்ய‌ங்க‌ தேவ‌தை அஸ்வாரூடா ஆவார்க‌ள். அங்க‌, உபாங்க‌, பிர‌த்ய‌ங்க‌ ஆகிய‌ மூன்று வ‌டிவ‌ங்க‌ளும் தேவியின் ஸ்தூல‌, சூஷ்ம‌, அதிசூஷ்ம‌ வ‌டிவ‌ங்க‌ளை குறிக்கும்.
ப‌ண்டாசூர‌னின் புத்திர‌ர்க‌ள் முப்ப‌து த‌த்துவ‌ங்க‌ளைக்குறிக்கும். இந்த‌ முப்ப‌து த‌த்துவ‌ங்க‌ளையும் அறிந்து அவ‌ற்றைக்க‌ட‌க்காம‌ல் த‌ன்னை அறித‌ல் சாத்திய‌ப்ப‌டாது. இந்த தத்துவங்களின் தீய பிரபாவங்களுக்கு எதிரான சிறிய‌ முய‌ற்சி (பாலாவின் வ‌டிவ‌ம்) அவ‌ற்றை அழிக்கும்.

மந்த்ரிணியம்பா-விரசித-விஷங்கவத-தோஷிதாயை (75)
மந்திரிணி தேவி முடித்த விஷ்ங்கவதத்தால் ஸந்தோஷமடைந்தவள்
விஸ‌ங்க‌வாதா என்ற‌ அசுர‌ன் ம‌ந்திரிணி தேவியால் அழிக்க‌ப்ப‌ட்ட‌தையொட்டி ல‌லிதை மிக்க‌ ம‌கிழ்ச்சிய‌டைந்தால். விச‌ங்க‌னும் விசுக்ர‌னும் ப‌ண்டாசூர‌ன‌து இர‌ண்டு ச‌கோத‌ர‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் ப‌ண்டாசூர‌ன‌து இர‌ண்டு தோள்ப்ப‌ட்டைக‌ளிலிருந்து அவ‌னால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள்.

இந்த‌ நாம‌த்தில் "வி" என்ற‌ பீஜ‌ம் உள்ள‌து. இந்த‌ பீஜ‌த்தின் மூல‌ எழுத்து "வ‌"() ஆகும். வ‌ இர‌ண்டு விட‌ய‌ங்க‌ளைக்குறிக்கும். முத‌லாவ‌து இவை அதீத‌ ஆற்ற‌ல்க‌ளை அடைய‌ உத‌வும், இர‌ண்டாவ‌து தீய‌ பிர‌பாவ‌ங்க‌ளை அழிக்கும். ம‌ந்திர‌ங்க‌ளின் ஆற்ற‌லை கட்டுப்ப‌டுத்துப‌வ‌ள் ம‌ந்திரிணி தேவி ஆவாள். விஸ‌ங்க‌ என்ப‌து ஆசையினை க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாம‌ல் புல‌ன்க‌ள் செய்யும் தீய செய்கைக‌ளைக்குறிக்கும். ம‌ந்திரிணி தேவி ல‌லிதையின் ப‌க்த‌ர்க‌ளில் எழும் அத்த‌கைய‌ ஆசைக‌ளை அழிப்ப‌வ‌ள்.



*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" } -  சுமனன் 
******************************************************************************************************************************************

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...