ஜனநாயகம் என்பது majority rule; பெரும்பாலான மக்களின் தெரிவு அதிகாரத்தை ஆள்வது!
இதில் தலைமைகளைத் தூக்கி வீசுவதால் ஒரு பிரயோசனமும் நிகழப்போவதில்லை!
பெரும்பான்மை முட்டாள்களாக இருந்தால் ஒரு முட்டாளைத் தலைவராகத் தெரிவு செய்வார்கள்!
திருடர்களாக இருந்தால் திருடர்களைத் தலைவராகத் தெரிவு செய்வார்கள்!
சுய நலவாதிகள் என்றால் சுய நலவாதிகளைத் தலைவராகத் தெரிவு செய்வார்கள்!
இனவாதிகள் என்றால் இனவாதியை தலைவராகத் தெரிவு செய்வார்கள்!
ஆக, இளைஞர்கள் இப்படி பெரும்பான்மை மனதால் தெரிவுசெய்யப்படும் தலைமைகளைத் தூக்கி வீசுவதற்குப் புரட்சி செய்யாமல், இந்த தலைமைகளை உருவாக்கும் "பெரும்பான்மை மனதினைத் தூய்மை செய்வதற்கு புரட்சி செய்யவேண்டும்.
மதம், இனம், சுய நலம், அறியாமை, உழைப்பின்மை, சோம்பேறித்தனம், சரியான பொருளியல் அறிவுஇன்மை, முட்டாள்தனமான அதிகாரத்தின் மீதான பற்று இப்படியான முட்டாள்தனங்களில் இருந்து மக்கள் மனதினை மீட்பதற்கு புரட்சி செய்ய வேண்டும்!
மண்ணில் இருந்து உற்பத்தியை அபரிதமாகப் பெருக்க புரட்சி வேண்டும்!
உலகில் உள்ள தொழில்நுட்ப அறிவுகளை பிரயோகித்து உலக தரத்துடன் போட்டிபோடும் அறிவிற்கு புரட்சி செய்யவேண்டும்!
எவரிடமும் கையேந்தாமல் தற்சார்ப்பு பொருளாதாரத்தை உருவாக்க புரட்சி வேண்டும்!
இவை எல்லாம் எமது எண்ணத்தை மாற்றுவதால் உண்டாகும் புரட்சி!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.