மலைப்பாங்கான நிலத்தில் மரவள்ளிச் செய்கை
1) மரவள்ளி நீர் தேங்கினால் (24 மணித்தியாலம்) பயிர் அழுகிவிடும். ஆகவே மலைப்பாங்கான நிலத்தில் பயிரிடும்போது சமவுயரக்கோட்டிற்கு செங்குத்தாக அதனுடைய வரிகளை அமைப்பது அவசியம். பொதுவாக மலைநாட்டில் நெற்பயிர்ச் செய்கை சமவுயுரக்கோட்டுடன் நீரைத்தேக்கி பயிர் செய்யும் முறையாகும். பலர் இதைப்போல் நீர் தேங்கும் சமவுயரக்கோட்டின் அடிப்படையில் பாத்தி கட்டி மரவள்ளி பயிரிட்டால் பயிர் வீணாகிவிடும். சுருங்கச்சொன்னால் மலைப்பாங்கான நிலத்தில் மரவள்ளியை நட்டால் மழைபெய்தால் நீர் எங்கும் தேங்கி நிற்கக்கூடாது; அதற்கு எப்படி நடவேண்டும் என்று சிந்தித்தால் இது எப்படி என்பது புரியும்.
2) சமவுயரக்கோட்டிற்கு செங்குத்தாக பயிரிடும்போது மண்ணரிப்பு அதிகமாகி மண்வளம் குன்றும். ஆகவே நிலத்தின் நீர் தேங்காதவாறு அந்த சாய்வு முடியும் அடிப்பகுதியில் hedge row - படிக்கட்டு அமைப்பது அவசியமாகும். இதில் வெட்டிவேர், அவரை இனத்தாவரங்கள் வைத்தால் மண்வளம் பாதுகாக்கப்படும்.
3) அடுத்து இயலுமான அளவு மூடாக்கு போட்டு நிலத்தினை மறைத்தல். இதனால் நீர் புகுந்து ஓடும் அதேவேளை மண்ணரிப்பு தடைப்படும். மண்வளமும் கூடும். இதனால் களைகளும் அதிகம் வளராது. ஏற்கனவே வெட்டிய மரவள்ளியின் இலைகள், பாவிக்கமுடியாத துண்டங்களை மூடாக்காக போட்டு மண்ணைப் பாதுக்காக்க வேண்டும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.