உயிர்ப்பூ மற்றும் ஈகல்வி குழுவினர் மலையகத்தில் உணவுற்பத்தியினை
ஊக்குவிக்கும் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இடர்கால எளிய உணவு
மரவள்ளி
இதன் நாற்றுத்தடி
பராமரிப்பு பற்றிய சிறிய குறிப்பு
மரவள்ளி நாற்றுதடி
*****************
பீடைகள், காலநிலைக்
காரணிகள் வெட்டப்படும் மரவள்ளித்தடியினை நீர்ப்பதம் அற்றுப் போகச் செய்து
முளைத்திறனை அற்றுப்போகச் செய்ய முடியும்.
இதை முறையாக சேமிப்பதன்
மூலம் நல்ல தரமான நடவுத்தடியினைப் பெறலாம்.
நடவுத்தடி புதிதாக
வெட்டப்பட்டதாகும், நன்கு மொத்தமானதாகவும், காயமற்றதாகவும், ஒரு தடியில்
ஆகக்குறைந்தது 06 - 08 கணு உள்ளதாக, 20 - 30 cm இல் இருக்க வேண்டும்.
ஆபிரிக்காவில் மரவள்ளி
நாற்றுத்தடிகளுக்கு என தனியான கொட்டகை இருக்கும்.
- ஓலையால் வேயப்பட்ட
- மணல் நிரப்பப்பட்ட -
சேமிக்கும் போது வேர்பிடித்தால் கழற்ற இலகுவாக இருக்கும்.
- 50 தடிகளைக் கட்டி
நிமிர்த்தி வைக்கக்கூடிய
கொட்டகைகள் இருக்கும்.
உடனடியாக பெறப்படும்
மரவள்ளித்தடிகளை நடமுடியாவிட்டால் என்ன செய்வது?
*************************************
மரவள்ளிக்கிழங்கு
நடவுத்தடி பராமரிப்பு பின்வரும் படிகளை உள்ளடக்கியது:
தேர்ந்தெடுக்கப்பட்ட
மரவள்ளித் தண்டுகளை 1-மீ நீளத்தில் வெட்டி 50-தண்டு மூட்டைகளாகக் கட்டவும்.
• மரவள்ளித்தடி
மூட்டைகளை வேப்ப மரப்பட்டை, இலைகளை எரித்த சாம்பல் கரைசலில் நனைத்து காற்றில் உலர
வைக்கவும். ஊறவைத்துவிடக்கூடாது. ஒரு தடவை முக்கி எடுத்து வெளியே எடுக்க வேண்டும்.
• உலர் பகுதிகளில்
பாதுகாப்பதற்காக துளையிடப்பட்ட பொலித்தீன் பைகளில் தண்டுகளை பேக்கேஜ் செய்யவும்.
• தண்டுகளின்
முளைக்கும் பக்க முனைகளை தண்டின் நுண்துளை மண்ணைத் தொடுவதை உறுதிசெய்து மூட்டைகளை
நிமிர்த்தி வைக்கவும். வாரத்திற்கு இருமுறை மண்ணை ஈரப்படுத்தவும். முளைக்க
ஆரம்பிக்கும் போது வாரத்திற்கு ஒரு முறை குறைக்கவும்.
• நடப்போகிறோம் என்றால்
தேவையான தடிகளை எடுத்து முளைகளை அகற்றவும். தண்டுகளை நனைப்பதற்கு வேப்ப சாம்பலை
படிப்படியாக தண்ணீரில் கலக்கவும்.
• நடவு செய்வதற்கு ஏற்ற
சூழ்நிலையில் தண்டுகளை எடுத்து சிறுதுண்டுகளாக்கிப் பயன்படுத்தவும்.
கொண்டுவரும் போதும்,
வைத்திருக்கும் போதும் தண்டுகள் காயப்படக்கூடாது.
citation: FAO. 2018.
Seeds toolkit - Module 6: Seed storage. Rome, 112 pp. Licence: CC BY-NC-SA 3.0
IGO
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.