அறுவைச் சிகிச்சையின்
தந்தை எனப்படும் சுசுருதர் (ஆயுர்வேதத்தின் மூல நூலான சுசுருத சம்ஹிதையை
தொகுத்தவர்) ஒரு அறிவினை சிறந்தது என்று நிரூபிக்க தர்க்க புத்தியுடன் அதுசார்ந்த
மற்றைய அறிவியலையும் கற்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
இன்று விவசாயத்துறையின்
பிரச்சினைகளை ஆராய்பவர்கள் இந்தக்கூற்றை ஆழமாக உள்வாங்க வேண்டும்.
இரசாயன உள்ளீட்டு
விவசாயத்தைப் புரிந்துகொள்ள சூழலியல் விஞ்ஞானம், அதுசார்ந்த பொருளியலின் இயக்கம்,
அதற்குப் பின்னால் இருக்கும் அரசியல், இதற்காக வேலை செய்யும் அறிவியலாளர்களது
நோக்கம் இவற்றைப் புரிந்துகொள்வது அவசியம்.
உதாரணமாக விதை
விடயத்தில் அரச திணைக்களங்கள், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், விதைப்பண்ணைகளை
உருவாக்கும்போது அங்கு இரசாயன உள்ளீட்டிற்கு அதிக விளைச்சலைத் தரும் தாவரத்தின்
விதைகளை தேர்வு செய்து அதுதான் சிறந்த விதை என்று சான்றுப் பத்திரம் தருகிறது.
அதே திணைக்களம் சேதன
உள்ளீட்டிற்கு வினைத்திறனான விளைச்சல் தரும் தாவரத்திலிருந்து விதைகளைப் பெற்று
இது சேதன விவசாயத்திற்குரிய விதைகள் என்று ஏன் உறுதிப்படுத்தி தருவதில்லை? இந்த
ஆராய்ச்சியினை ஏன் செய்ய விரும்புவதில்லை, அப்படிச் செய்தாலும் மக்களை
ஊக்குவிப்பதில்லை.
இதை ஆராய்ந்தால்
செயற்கை உரங்களிற்கு விளைச்சல் தரும் விதைக்காக பலகோடிகள் முதலிட்ட ஒருவர்
பாதிக்கக் கூடாது என்ற நல்லெண்ணமும், விவசாயிக்கு இலாபம் தருமா, இல்லையா என்பதைப்
பற்றிச் சிந்தனையில்லாத அசண்டையீனமும் இருக்கும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.