நமக்கு ஆயுதம் அறிவும் அதைத்தரும் மனமும்தானே!
தடைகளை வெல்லும் மனமும் அந்த மனதிற்கு பலமும் இருந்தால் துக்கம் அண்டாது! இது துர்க்கையின் அருள்!
எந்தச் சூழ்நிலையிலும் சமநிலை தப்பாமல், அருளையும், ஆற்றலையும் வளப்படுத்தி செல்வத்தைப் பெற்றால் அது மகாலக்ஷ்மியின் அருள்!
தடையில்லாமல் எண்ணமும், வாக்கும் அறிவும், எழுத்தும் பிரவாகித்தால் அது சரஸ்வதியின் அருள்!
எமக்குள் இருக்கும் தாழ் மனதின் அதியாசையும், துர்குணங்களும் இந்த மூன்று ஆற்றல்களாலும் வதைக்கப்பட்டு அன்பு, கருணை, பொறுமை போன்ற தெய்வ மனத்தைப் பெற்றால் அது வெற்றி என்ற விஜயம்!
இதைக் கொண்டாடுதல் விஜயதசமி!
மகளின் ஆயுத பூசை!
நான் விரும்பிக் கற்கும் எனது குருநாதரின் மனம், யோகம், தேவிபகவதம், தேவி மாஹாத்மியம், ஸ்ரீ சக்கரபூஜை, காளி உபாசனை, ஸாவித்ரி காவியம், Envirionmental Sciece, இயற்கை வழி வேளாண்மை நூற்களும்!
குருவின் அருளால் நான்(ம்) எழுதிய நூல்களும் சரஸ்வதியின் அருள் வேண்டி படைக்கப்பட்டது!
அனைத்திலும் விழிப்புணர்வாகவும், எல்லாவற்றிற்கும் மூலமாகவும், அறிவின் மூலமாகவும் இருக்கும் அந்த ஆதிஸக்தியை புத்தியில் இருத்தி, அனைவருக்கும் அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா! ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா!
என்ற பிரார்த்தனையுடன் விஜயதசமி வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.