புராணங்களின் மறையியல் உண்மைகளைப் புரிதல்!
அ-சுர (ன்) என்றால் தனது தபஸினால் சுர என்ற அம்ருதத்தை அகாரம் தோன்றும் மூலாதாரத்திற்கு கொண்டு சென்றவர்கள் என்று அர்த்தம், மூலாதாரம் ஆங்கார ஸ்தானம். தூய பற்றற்ற ஆங்காரமே வைராக்கியம். அசுர குணமில்லாமல் தீவிர சாதனை இல்லை! இந்த ஆங்காரம் "இச்சை, பற்றுக்களுடன் கலந்து விகாரப்பட்ட வைராக்கியங்களையே புராணங்கள் அசுரர்கள் என்கிறது. இராவணன் வைராக்கிய சீலன், அந்த வைராக்கியத்தின் விகாரம் அவனை வீழ்த்தியது. அது போல் வேதாளம் transformation force.
சித்த ஆயுர்வேத ரச சாஸ்திரத்தில் வேதாளம் என்பது உப ரசத்தினைக் குறிக்கும். இந்த வேதாள உபரசங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை; இவை இயல்பில் நச்சுத் தன்மை வாய்ந்தவை, ஆனால் மகா ரசமான பாதரசத்தினை சுத்தி செய்யக் கூடியவை. பாதரசத்தினை உயிர்காக்கும் மருந்தாக மாற்றக் கூடிய ஆற்றல் உள்ளவை இந்த வேதாளங்கள் என்று கூறக் கூடிய உப ரசங்கள்!
அன்னை காளியின் அஷ்ட வேதாளங்களும் இந்த ரச சித்தியை அறிவைத் தருபவை! எப்படி பாதரசத்தை நேரடியாக மருந்தாகப் பயன்படுத்த முடியாமல் உபரசங்களான வேதாளங்களைப் பயன்படுத்தி பயன் பெறுகிறோமோ அப்படி அன்னையை நாம் நேரடியாக அழைக்கும் தகுதியை வேதாளங்களினூடாகப் பெறலாம்.
மகா காளி உபாசகனாகிய விக்கிரமாதித்திய மகாராஜாவும் வேதாளத்தின் கேள்வி பதிலும் இதற்கு உதாரணங்கள்!
ராக்ஷஷர்கள் அசுரர்களில் ஒருவகையினர்; மனிதனுக்கு ஏற்படும் அதியாத்மிக, அதிதைவீக, அதிபௌதீக துன்பங்களில் அதிபௌதீக துன்பங்களை ஏற்படுத்தும் ஆற்றல்கள்.
ராக்ஷஷர்கள் பிரம்மாவின் கோப அலைகளிலிருந்து உதித்தவர்கள்; பிரம்மா கிருத யுகத்தில் வேதங்களைப் பராயணம் செய்து கொண்டிருக்கும் போது (தனது தபஸினால் யோக ஆற்றலை பெற்றுக் கொண்டிருக்கும் போது மிகுந்த பசி உண்டாகியது. இந்தப் பசியின் துன்பம் உருவாக்கிய கோப அலைகளிலிருந்து உருவாகிய கணங்கள் ராக்ஷச கணங்கள். பிரம்மாவிடமிருந்து உருவாகியதால் பிரம்ம ராக்ஷசர்கள்!
இதைப் போல் மிக உயர்ந்த சாதகர்கள், யோகிகள் படைப்பு ஆற்றல் மிக்க குருவிடமிருந்து, ரிஷிகளிடமிருந்து கோப அலைகளைப் பெற்று பிரம்ம ராக்ஷசர்கள் ஆவதும் உண்டு! அவர்களின் கோபத்தால் ராக்ஷச நிலைப் பெற்று பூமியிலிருந்து அதிபௌதீக துன்பங்களை மனிதரிற்கு கொடுத்து அவர்களை பக்குவப்படுத்தும் பணியைச் செய்து வருவார்கள்! பூஜை, யோக சாதனைகளின் போது தகுந்த காலம் முடியும் போது தம்மிடமிருந்த உயர்ந்த வித்தையை, ஆற்றலை தகுந்தவருக்குக் கொடுத்துப் பெறும் புண்ணிய பலனினால் அந்த நிலையிலிருந்து வெளியேறுவார்கள்.
சித்த ஆயுர்வேத ரச சாஸ்த்திரத்தில் நெருப்பில் சுடப்பட்ட - புடமிடப்பட்ட மருந்துகள் ராக்ஷசரசம் எனப்படும். மிகுந்த நச்சுத் தன்மை வாய்ந்தவை என்றாலும் சரியாக பிரயோகிக்கப்பட்டால் நோய் தீர்க்கும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.