ஓரணை யப்பத மூருவின் மேலேறிட்
டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே.
ஒரு காலின் பாதத்தை ஊரு என்ற தொடையில் மேல் ஏற்றி மறுபாதத்தை வலித்து அழகாக மற்றத் தொடையில் வைத்து, கைகளை சீராக முழங்கால்களின் மேல் வைக்க இதுவே இந்த உலகமெல்லாம் புகழும் ஆசனங்களில் மிக உயர்ந்த ஆசனமாகும்.
திருமூலர்
உறுதியுள்ள பத்மமதை சொல்லக்கேளு
உண்மையுடன் பாதம்ரெண்டும் துடைமேலேற்றி
சுருதியுடன் கைரெண்டும் முழந்தாள்வைத்து
சுத்தமுடன் தன்னகத்தை சுகமாய்ப்பார்க்க
பரிதியுள்ள பத்மாசன மிதென்று
பதிவான வேதாந்தப் பெரியோரெல்லாம்
வரிதியுடன் யெக்கியமா முனிதான்சொல்ல
மகத்தான ஆசனத்தை மகிழ்ந்தார்காணே.
அகத்தியர்
யோக சாதனைக்கு உறுதி தரும் பத்மாசனத்தைக் கூறுகிறேன் கேள்! மனதில் உண்மையுடன் (சத்தியத்துடன்) இரண்டு பாதங்களை தொடைகளின் மேல் ஏற்றி ஒத்திசைவாக கைகள் இரண்டையும் தொடைகளில் வைத்து, மனச்சலனம் இல்லாமல் அகத்தைப் பார்க்க சூரியனின் ஒளி மனக்கண்ணில் தோன்றும்! இந்த ஆசனத்தை வேதாந்தம் அறிந்த பெரியவர்களும், முனிவர்களும் மகத்தான ஆசனம் என்று கூறியுள்ளார்கள்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.