துர்க்கை அன்னையே!
எம் யோக சக்தியை விரிவடையச் செய்.
நாங்கள் உன் மைந்தர்கள்.
நாங்கள் இழந்திருக்கும் கல்வியையும் பக்தியையும் சிரத்தையையும் புத்திகூர்மையையும் உயர் இயல்பையும் பிரம்மச்சரியத்தையும் தவ வலிமையையும் உண்மை அறிவையும் எங்களுள் மீண்டும் மலரச்செய்.
இவை அனைத்தையும் உலகுக்கு அளி.
ஓ உலக அன்னையே, மானுடர்களுக்கு உதவத் தோற்றமளி எல்லாக் கேடுகளையும் நீக்கு.
துர்க்கை அன்னையே! அகத்தே உள்ள பகைவர்களை மாய்த்துவிடு, பின் புறத்தே உள்ள தடைகளை வேரோடு அழித்துவிடு.
துர்க்கை அன்னையே!
உன் யோக வலிமையுடன் எங்கள் உடலுள் வந்தருள். நாங்கள் உன்னுடைய கருவிகளாக ஆவோம்.
தீமை யாவையும் அழித்துவிடும் உன் வாளாக ஆவோம்.
அறியாமை அனைத்தையும் அகற்றிவிடும் உன் விளக்காக ஆவோம்.
உன் இளஞ் செல்வங்களின் இவ்வேட்கையை நிறைவுபெறச் செய்.
அன்னையே, எங்கள் தலைவியாக இருந்து எங்களை இயக்கு. உன் வாளைச் சுழற்றித் தீமையை அழி, உன் விளக்கை உயர்த்தி அறிவொளி பரப்பு. உன்னை வெளிப்படுத்து!
வீர வழி காண்பிப்பவளே, நாங்கள் இனி உன்னைப் பிரிய மாட்டோம்.
தாயே, நாங்கள் எங்கள் வாழ்க்கை முழுவதும் உன்னை இடைவிடாமல் வழிபடவேண்டும்.
எங்கள் செயல்கள் அனைத்தும் அன்பும் சக்தியும் நிறைந்து தொடர்ந்து உன் பணியில் இருக்க வேண்டும். இதுவே எங்கள் வேண்டுகோள்.
ஸ்ரீ அரவிந்தர் - துர்க்கா துதி
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.