குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Sunday, October 31, 2021
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
வேதாந்தம் சித்தாந்த இரண்டுமென்ன மேன்மையுள்ள பெரியார்க்கு இரண்டுமொன்றே என்பது அகத்தியர் ஞானத்தில் உள்ள வாக்கு!
தத்துவங்கள் என்பது வாழ்க்கை எனும் ஆற்றைக் கடக்கப் பயன்படும் ஓடம் போன்றவை! ஓடத்தில் நாம் ஏறி கவனமாகப் பயணித்து கரையை அடைவது மாத்திரமே குறிக்கோளாக இருக்க வேண்டும்!
ஓடத்தில் நாம் ஏறிப்பயணிக்க வேண்டுமே அன்றி ஓடத்தை நாம் தலையில் ஏற்றிப் பயணிக்கக் கூடாது! இன்று சித்தாந்தம் வேதாந்தம் கதைக்கும் பலரும் ஓடத்தை தலையில் ஏற்றியவர்களாகத்தான் இருக்கிறார்கள்!
எனது குருநாதர் அடிக்கடி கூறும் விஷயம் ஆலயம், பக்தி இவை எல்லாம் மனதினை தூய்மைப்படுத்தி, அகங்காரம், ஆணவத்தை நீக்கி தன்னைப்போல மற்றெல்லா உயிர்களையும் காணும் பண்பைப் பெறுவதுதான் வழிபாட்டின் குறிக்கோள் என்று! ஆனால் அகங்காரம் தூய்மையுறாமல், சித்தத்தின் ஆழத்தில் அசூயை, பொறாமை போன்ற துர்குணங்களை வைத்துக்கொண்டு வெளிவேடத்தில் பகட்டு ஆன்மீகம் பேசுவோர் கோயில் வழிபாட்டிற்குள் புகுந்தால் தமது மன விகாரங்களை வெளிப்படுத்தும் தளங்களாக, அரசியலாக ஆன்மீகம் மாறிவிடுவது தவிர்க்க முடியாதது.
புல்லாகி பூடாகி புழுவாகி பல்மிருகமாகி, பறவையாய் பாம்பாகி எல்லாப்பிறப்பும் எடுக்கும் ஆன்மா ஒவ்வொரு நிலையில் தன்னை முன்னேற்றிக்கொள்ள ஒவ்வொரு வழியை இறை சக்தி ஏற்படுத்தியுள்ளது என்பதைப் புரிந்துகொண்டு நாம் குருமுகமாகப் பெற்றதை அப்பியாசித்து அக முன்னேற்றம் காண வேண்டும் என்பதே சரியான வழி!
நாம் முழுமையாக படிக்காத ஒன்றை, அரைகுறைப் புரிதலுடன் அருவெருப்பாக விமர்சிப்பது முட்டாள்களின் குணம்! நாம் ஒரு நூலை, தத்துவத்தை விமர்சிக்க அந்த நூலை பயின்றிருக்க வேண்டும். அப்படி முறையாகப் பயிலத்தொடங்கி அறிவு விழிப்படைந்தவர்கள் தேவையற்ற குதர்க்கம் புரியமாட்டார்கள்!
குதர்க்கம் புரிபவர்கள் உண்மையில் அரசியல் அதிகார நோக்கம் கொண்டவர்கள். அவர்கள் எண்ணம் தாம் எண்ணுவதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தமே அன்றி புரிந்துகொள்வது என்பது அல்ல!
Friday, October 29, 2021
தலைப்பு இல்லை
சேதனப் பசளை இறக்குமதி விவகாரம்... சீனா சன் சூ art of war இல் சொல்லித் தந்த Supreme excellence consists of breaking the resistance without fighting விதியை மக்கள் வங்கியை கறுப்பட்டியலில் சேர்த்து விளையாடுகிறது.
Deal with Dragon.. let's see how the government is going to play!
#stategy
தலைப்பு இல்லை
சேதனப்பசளை இறக்குமதி விவகாரம்... சீனா சன் சூ art of war இல் சொல்லித்தந்த Supreme excellence consists of breaking the resistance without fighting விதியை மக்கள் வங்கியை கறுப்பட்டியலில் சேர்த்து விளையாடுகிறது.
Deal with Dragon.. let's see how the government is going to play!
#stategy
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
தற்பொழுது யாழ்ப்பாணம் வெண்பா புத்தக நிலையத்தில்,
"யோகமும் இயற்கையும்"
"சிவயோக ஞானத்திறவுகோல்"
ஆகிய இரண்டு நூற்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
Thursday, October 28, 2021
தலைப்பு இல்லை
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவரும், தமிழ் உலகிற்கு அறிமுகம் தேவையற்ற அருவி போன்று தேன் தமிழ் பேசி அவையோரைக் கட்டும் வல்லமையும் ஆளுமையும் உள்ள பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன் அவர்களிடம் யோகமும் இயற்கையும் நூல் கையளிக்கப்பட்டது.
படித்த பின்னர் மதிப்புரை தருவதாகக் கூறியிருக்கிறார். ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மதிப்புரை!
கொண்டு சேர்த்த ஆதித்தனுக்கும் நன்றிகள்!
தலைப்பு இல்லை
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரும், தமிழ் உலகிற்கு அறிமுகம் தேவையற்ற அருவி போன்று தேன் தமிழ் பேசி அவையோரைக் கட்டும் வல்லமையும் ஆளுமையும் உள்ள பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன் அவர்களிடம் யோகமும் இயற்கையும் நூல் கையளிக்கப்பட்டது.
படித்த பின்னர் மதிப்புரை தருவதாகக் கூறியிருக்கிறார். ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மதிப்புரை!
கொண்டு சேர்த்த ஆதித்தனுக்கும் நன்றிகள்!
Wednesday, October 27, 2021
தலைப்பு இல்லை
தற்போது கொழும்பில் பூபாலசிங்கம் புத்தக சாலையிலும் "யோகமும் இயற்கையும்" நூல் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழி பதிப்பகம் Poobalasingham Book Depot.Poobalasingham SritharasinghPoobalasingham Book DepotIndushan Rajan Poobalasingham
தலைப்பு இல்லை
தற்போது கொழும்பில் பூபாலசிங்கம் புத்தக சாலையிலும் "யோகமும் இயற்கையும்" நூல் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழி பதிப்பகம் Poobalasingham Book Depot.Poobalasingham SritharasinghPoobalasingham Book DepotIndushan Rajan Poobalasingham
அசுரன் - வேதாளம் - ராக்ஷதர்
புராணங்களின் மறையியல் உண்மைகளைப் புரிதல்!
அ-சுர (ன்) என்றால் தனது தபஸினால் சுர என்ற அம்ருதத்தை அகாரம் தோன்றும் மூலாதாரத்திற்கு கொண்டு சென்றவர்கள் என்று அர்த்தம், மூலாதாரம் ஆங்கார ஸ்தானம். தூய பற்றற்ற ஆங்காரமே வைராக்கியம். அசுர குணமில்லாமல் தீவிர சாதனை இல்லை! இந்த ஆங்காரம் "இச்சை, பற்றுக்களுடன் கலந்து விகாரப்பட்ட வைராக்கியங்களையே புராணங்கள் அசுரர்கள் என்கிறது. இராவணன் வைராக்கிய சீலன், அந்த வைராக்கியத்தின் விகாரம் அவனை வீழ்த்தியது. அது போல் வேதாளம் transformation force.
சித்த ஆயுர்வேத ரச சாஸ்திரத்தில் வேதாளம் என்பது உப ரசத்தினைக் குறிக்கும். இந்த வேதாள உபரசங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை; இவை இயல்பில் நச்சுத் தன்மை வாய்ந்தவை, ஆனால் மகா ரசமான பாதரசத்தினை சுத்தி செய்யக் கூடியவை. பாதரசத்தினை உயிர்காக்கும் மருந்தாக மாற்றக் கூடிய ஆற்றல் உள்ளவை இந்த வேதாளங்கள் என்று கூறக் கூடிய உப ரசங்கள்!
அன்னை காளியின் அஷ்ட வேதாளங்களும் இந்த ரச சித்தியை அறிவைத் தருபவை! எப்படி பாதரசத்தை நேரடியாக மருந்தாகப் பயன்படுத்த முடியாமல் உபரசங்களான வேதாளங்களைப் பயன்படுத்தி பயன் பெறுகிறோமோ அப்படி அன்னையை நாம் நேரடியாக அழைக்கும் தகுதியை வேதாளங்களினூடாகப் பெறலாம்.
மகா காளி உபாசகனாகிய விக்கிரமாதித்திய மகாராஜாவும் வேதாளத்தின் கேள்வி பதிலும் இதற்கு உதாரணங்கள்!
ராக்ஷஷர்கள் அசுரர்களில் ஒருவகையினர்; மனிதனுக்கு ஏற்படும் அதியாத்மிக, அதிதைவீக, அதிபௌதீக துன்பங்களில் அதிபௌதீக துன்பங்களை ஏற்படுத்தும் ஆற்றல்கள்.
ராக்ஷஷர்கள் பிரம்மாவின் கோப அலைகளிலிருந்து உதித்தவர்கள்; பிரம்மா கிருத யுகத்தில் வேதங்களைப் பராயணம் செய்து கொண்டிருக்கும் போது (தனது தபஸினால் யோக ஆற்றலை பெற்றுக் கொண்டிருக்கும் போது மிகுந்த பசி உண்டாகியது. இந்தப் பசியின் துன்பம் உருவாக்கிய கோப அலைகளிலிருந்து உருவாகிய கணங்கள் ராக்ஷச கணங்கள். பிரம்மாவிடமிருந்து உருவாகியதால் பிரம்ம ராக்ஷசர்கள்!
இதைப் போல் மிக உயர்ந்த சாதகர்கள், யோகிகள் படைப்பு ஆற்றல் மிக்க குருவிடமிருந்து, ரிஷிகளிடமிருந்து கோப அலைகளைப் பெற்று பிரம்ம ராக்ஷசர்கள் ஆவதும் உண்டு! அவர்களின் கோபத்தால் ராக்ஷச நிலைப் பெற்று பூமியிலிருந்து அதிபௌதீக துன்பங்களை மனிதரிற்கு கொடுத்து அவர்களை பக்குவப்படுத்தும் பணியைச் செய்து வருவார்கள்! பூஜை, யோக சாதனைகளின் போது தகுந்த காலம் முடியும் போது தம்மிடமிருந்த உயர்ந்த வித்தையை, ஆற்றலை தகுந்தவருக்குக் கொடுத்துப் பெறும் புண்ணிய பலனினால் அந்த நிலையிலிருந்து வெளியேறுவார்கள்.
சித்த ஆயுர்வேத ரச சாஸ்த்திரத்தில் நெருப்பில் சுடப்பட்ட - புடமிடப்பட்ட மருந்துகள் ராக்ஷசரசம் எனப்படும். மிகுந்த நச்சுத் தன்மை வாய்ந்தவை என்றாலும் சரியாக பிரயோகிக்கப்பட்டால் நோய் தீர்க்கும்.
அசுரன் - வேதாளம் - ராக்ஷதர்
புராணங்களின் மறையியல் உண்மைகளைப் புரிதல்!
அ-சுர (ன்) என்றால் தனது தபஸினால் சுர என்ற அம்ருதத்தை அகாரம் தோன்றும் மூலாதாரத்திற்கு கொண்டு சென்றவர்கள் என்று அர்த்தம், மூலாதாரம் ஆங்கார ஸ்தானம். தூய பற்றற்ற ஆங்காரமே வைராக்கியம். அசுர குணமில்லாமல் தீவிர சாதனை இல்லை! இந்த ஆங்காரம் "இச்சை, பற்றுக்களுடன் கலந்து விகாரப்பட்ட வைராக்கியங்களையே புராணங்கள் அசுரர்கள் என்கிறது. இராவணன் வைராக்கிய சீலன், அந்த வைராக்கியத்தின் விகாரம் அவனை வீழ்த்தியது. அதுபோல் வேதாளம் transformation force.
சித்த ஆயுர்வேத ரச சாஸ்த்திரத்தில் வேதாளம் என்பது உப ரசத்தினைக் குறிக்கும். இந்த வேதாள உபரசங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை; இவை இயல்பில் நச்சுத்தன்மை வாய்ந்தவை, ஆனால் மகா ரசமான பாதரசத்தினை சுத்தி செய்யக்கூடியவை. பாதரசத்தினை உயிர்காக்கும் மருந்தாக மாற்றக்கூடிய ஆற்றல் உள்ளவை இந்த வேதாளங்கள் என்று கூறக்கூடிய உப ரசங்கள்!
அன்னை காளியின் அஷ்ட வேதாளங்களும் இந்த ரச சித்தியை அறிவைத் தருபவை! எப்படி பாதரசத்தை நேரடியாக மருந்தாகப் பயன்படுத்த முடியாமல் உபரசங்களான வேதாளங்களைப் பயன்படுத்தி பயன் பெறுகிறோமோ, அப்படி அன்னையை நாம் நேரடியாக அழைக்கும் தகுதியை வேதாளங்களினூடாகப் பெறலாம்.
மகா காளி உபாசகனாகிய விக்கிரமாதித்திய மகாராஜாவும் வேதாளத்தின் கேள்வி பதிலும் இதற்கு உதாரணங்கள்!
ராக்ஷஷர்கள் அசுரர்களில் ஒருவகையினர்; மனிதனுக்கு ஏற்படும் அதியாத்மிக, அதிதைவீக, அதிபௌதீக துன்பங்களில் அதிபௌதீக துன்பங்களை ஏற்படுத்தும் ஆற்றல்கள்.
ராக்ஷஷர்கள் பிரம்மாவின் கோப அலைகளிலிருந்து உதித்தவர்கள்; பிரம்மா கிருத யுகத்தில் வேதங்களைப் பராயணம் செய்து கொண்டிருக்கும்போது (தனது தபஸினால் யோக ஆற்றலை பெற்றுக்கொண்டிருக்கும்போது) மிகுந்த பசி உண்டாகியது. இந்தப் பசியின் துன்பம் உருவாக்கிய கோப அலைகளிலிருந்து உருவாகிய கணங்கள் ராக்ஷச கணங்கள். பிரம்மாவிடமிருந்து உருவாகியதால் பிரம்ம ராக்ஷசர்கள்!
இதைபோல் மிக உயர்ந்த சாதகர்கள், யோகிகள் படைப்பு ஆற்றல் மிக்க குருவிடமிருந்து, ரிஷிகளிடமிருந்து கோப அலைகளைப் பெற்று பிரம்ம ராக்ஷசர்கள் ஆவதும் உண்டு! அவர்களின் கோபத்தால் ராக்ஷச நிலைபெற்று பூமியிலிருந்து அதிபௌதீக துன்பங்களை மனிதரிற்கு கொடுத்து அவர்களை பக்குவப்படுத்தும் பணியைச் செய்து வருவார்கள்! பூஜை, யோக சாதனைகளின் போது தகுந்த காலம் முடியும் போது தம்மிடமிருந்த உயர்ந்த வித்தையை, ஆற்றலை தகுந்தவருக்குக் கொடுத்துப் பெறும் புண்ணிய பலனினால் அந்த நிலையிலிருந்து வெளியேறுவார்கள்.
சித்த ஆயுர்வேத ரச சாஸ்த்திரத்தில் நெருப்பில் சுடப்பட்ட - புடமிடப்பட்ட மருந்துகள் ராக்ஷசரசம் எனப்படும். மிகுந்த நச்சுத்தன்மை வாய்ந்தவை என்றாலும் சரியாக பிரயோகிக்கப்பட்டால் நோய் தீர்க்கும்.
Tuesday, October 26, 2021
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
இன்று சாமியின் பிறந்த நாள்!
"என்னைக் கைவிட்டாலும் என்னை நாடி வருபவர்களை எக்காரணம் கொண்டும் கைவிட்டு விடாதே அம்மா" என்று அன்னையை அனுதினமும் பிரார்த்திப்பார்.
அவருடன் வாழ்ந்த கால அனுபவம் பெரும் ஞானம்! பாமரன் முதல் பிரதம மந்திரி வரை சமூகத்தின் அனைத்து மட்டத்தினரின் மனதினையும் படிக்கச் சொல்லித்தந்த காலம்!
பெரிய பெரிய கட்டிடங்களை உருவாக்கி விட்டேன் அப்பா! ஆனால் சாதகர்களை உருவாக்க முடியவில்லை அப்பா! என்று அடிக்கடி வேதனைப்படுவார்!
அவர் விட்ட பணி தொடர்கிறது....
Wednesday, October 20, 2021
தலைப்பு இல்லை
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே
தில்லைச்சிற்றம்பலம் நடராஜர் தாண்டவம் ஆடும் தலம். இந்த ஆட்டம் சித் என்ற அறிவினை பிரபஞ்சத்தில் இயக்க அம்பலத்தில் ஆடும் ஆட்டம். இதுவே சிற்றம்பலம். பூவுகில் இந்த ஆட்டத்தின் பொருளை விளங்க தில்லையில் நடராஜராக தரிசிக்கலாம்.
சிவயோகத்தில் பிண்டத்திற்குள் தாண்டவம் காண தலையுச்சிக்கும் மேல் அம்பலம் என்ற ஆயிரம் இதழ்கமலத்தில் சித் என்ற அறிவாக இறைவன் ஆடிக்கொண்டிருக்க அந்த ஆட்டம் ஏற்படுத்தும் பிராண சலனம் இந்த அன்னமய உடலை உருவாக்குகிறது. ஆக தலையுச்சியில் உள்ள தில்லைச்சிற்றம்பலம் அன்னமய உடலை போசித்துக் காத்துக்கொண்டிருக்கிறது என்கிறார் அப்பர் பெருமான். அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற்றம்பலம்.
தலையுச்சியில் ஆயிரம் இதழ் கமலத்தில் ஆடும் இந்த தாண்டவத்தை அறிந்த சிவயோகிக்கு காரண உடல் பொன்னுடலாக வாய்க்கும். இதுவே பொன்னம் பாலிக்கு... இதனாலேயே தில்லைச் சிற்றம்பலம் பொற்சபை எனப்படுகிறது.
மேலும் இந்த பூமியில் இன்னும் வாழ்ந்து இந்த பொன்னுடல் பெற்று இன்புற இந்த உடலைத் தந்து என்னைக் காத்து வரும் புலியூர் எம்பிரானே என்று வணங்குகிறார்!
இந்தத் தேவாரம் நாம் எமது அன்ன உடலிற்கு உணவு அளிக்கும்போது இந்த அன்ன உடல் ஆயிரம் இதழ் கமலத்தில் சிவ பரம்பொருளின் தாண்டவத்தால் எமக்குக் கிடைத்த உடல் என்பதும், அதைப் போசிப்பது சிற்றம்பலம் என்ற பொற்சபையில் பொன்னுடல் பெறவே என்பதையும் ஞாபகத்தில் இருத்தி உணவை உண்ண வேண்டும் என்று இந்தத் தேவாரத்தை உணவருந்தும் போது படிக்கிறோம்.
Saturday, October 16, 2021
தலைப்பு இல்லை
தமிழகத்தின் தமிழருவி மணியன் ஐயாவிடம் யோகமும் இயற்கையும் நூல் கையளிக்கப்பட்டது.
ஐயா தன்னுடைய நூல் ஒன்றில் (தலைப்பு ஞாபகத்தில் இல்லை) அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் நூலை யோகம் பயில விரும்புபவர்களுக்காகப் பரிந்துரை செய்திருக்கிறார்.
வேலைப்பளுவிற்கு மத்தியில் விரைவில் மதிப்புரை தருவதாகச் சொல்லியிருக்கிறார்!
Friday, October 15, 2021
ஆயுத பூசை
நமக்கு ஆயுதம் அறிவும் அதைத்தரும் மனமும்தானே!
தடைகளை வெல்லும் மனமும் அந்த மனதிற்கு பலமும் இருந்தால் துக்கம் அண்டாது! இது துர்க்கையின் அருள்!
எந்தச் சூழ்நிலையிலும் சமநிலை தப்பாமல், அருளையும், ஆற்றலையும் வளப்படுத்தி செல்வத்தைப் பெற்றால் அது மகாலக்ஷ்மியின் அருள்!
தடையில்லாமல் எண்ணமும், வாக்கும் அறிவும், எழுத்தும் பிரவாகித்தால் அது சரஸ்வதியின் அருள்!
எமக்குள் இருக்கும் தாழ் மனதின் அதியாசையும், துர்குணங்களும் இந்த மூன்று ஆற்றல்களாலும் வதைக்கப்பட்டு அன்பு, கருணை, பொறுமை போன்ற தெய்வ மனத்தைப் பெற்றால் அது வெற்றி என்ற விஜயம்!
இதைக் கொண்டாடுதல் விஜயதசமி!
மகளின் ஆயுத பூசை!
நான் விரும்பிக் கற்கும் எனது குருநாதரின் மனம், யோகம், தேவிபகவதம், தேவி மாஹாத்மியம், ஸ்ரீ சக்கரபூஜை, காளி உபாசனை, ஸாவித்ரி காவியம், Envirionmental Sciece, இயற்கை வழி வேளாண்மை நூற்களும்!
குருவின் அருளால் நான்(ம்) எழுதிய நூல்களும் சரஸ்வதியின் அருள் வேண்டி படைக்கப்பட்டது!
அனைத்திலும் விழிப்புணர்வாகவும், எல்லாவற்றிற்கும் மூலமாகவும், அறிவின் மூலமாகவும் இருக்கும் அந்த ஆதிஸக்தியை புத்தியில் இருத்தி, அனைவருக்கும் அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா! ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா!
என்ற பிரார்த்தனையுடன் விஜயதசமி வாழ்த்துக்கள்!
தலைப்பு இல்லை
அன்பர்களே!
யோகமும் இயற்கையும் நூல்!
இலங்கை, இந்தியாவிற்குள் வாழும் அன்பர்கள் அச்சிடப்பட்ட பிரதிகளை வாங்கிக்கொள்ளலாம். தேவையானவர்கள்;
இலங்கையில் ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு இன்று நூல் கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. பதிவு செய்யாதவர்கள் இந்த இணைப்பில் பதிவு செய்யவும்: https://forms.gle/CpjKebT4gcsa237o8
இந்தியாவிற்குள் வாங்க விரும்புபவர்கள் இந்த இணைப்பினைப் பயன்படுத்தவும்: https://www.tamizhipadhippagam.com/product/407516/-01-64ccf
இன்று முதல் யோகமும் இயற்கையும் நூல் உலகெங்கும் கிடைக்கக்கூடிய வகையில் kindle பதிப்பாக வெளிவருகிறது. நீங்களும் இந்த நூலை வாங்கி பதிப்பகத்தை ஊக்கப்படுத்தும் அதேவேளை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரைப்பீர்கள் என எண்ணுகிறேன். குறிப்பாக இந்த நூலைப் படித்த பின்னர் உங்கள் மேலான கருத்தையும், விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன்!
அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்! https://www.amazon.com/dp/B09JGRP5ZN
Thursday, October 14, 2021
தலைப்பு இல்லை
நாளை விஜயதசமி முதல் உலகெங்கும் வாழும் வாசகர்களுக்காக அமேசன் kindle இல் "யோகமும் இயற்கையும்" நூல் கிடைக்க தமிழி பதிப்பகம் ஏற்பாடுகளை பூர்த்தி செய்திருக்கிறது.
https://www.amazon.in/.../ref=cm_sw_r_apan_glt...
தலைப்பு இல்லை
நவராத்திரியை முன்னிட்டு Dyena Sathasakthynathan Isuru Manoj அவர்களுடனான குரு அகத்திய காயத்ரி சாதனை பற்றிய என்னுடைய நேர்காணல் இன்று வெளியாகிறது.
மூன்று பாகங்களாக சந்தேகம் தெளிதல் அடிப்படையில் வெளிவருகிறது:
பகுதி - 01 இனை இந்த இணைப்பில் காணலாம்:
https://youtu.be/PBJB2JL-ByQ
கீழ்வரும் கேள்விகள் பதிலளிக்கப்பட்டுள்ளது:
1) சாதனை என்றால் என்ன? இது ஆண், பெண் சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் உரிய ஒன்றா?
2) சாதனை செய்ய ஒருவர் தீர்மானித்த பின்னர் அவர் மேற்கொள்ள வேண்டிய ஆயத்தங்கள் என்ன?
A. அதற்கென தனி அறை இருக்கவேண்டுமா?
B. காயத்ரிதேவியின் படம் வைக்கவேண்டுமா? என்னளவில் எவ்வாறு அதை வைக்கவேண்டும்.?
C. விளக்கு, ஊதுபத்தி ஏற்றவேண்டுமா?
D. எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?
E. ஜெப மாலை ஏதேனும் பயன்படுத்த வேண்டுமா?
F. எத்தனை முறை செய்யவேண்டும்?
G. இந்த ஆசனத்தில் தான் அமர வேண்டுமென்றோ அல்லது இந்த நிற ஆடைதான் அணியவேண்டுமென்றோ ஏதேனும் விதிமுறைகள் உள்ளனவா?
H. எவ்வளவு நாட்கள் செய்யவேண்டும்?
3) சாதனை செய்ய ஆரம்பிப்பவர் சைவ உணவு உண்பவராக மட்டுமே இருக்கவேண்டுமா? இல்லாவிட்டால் ஏதேனும் உணவுக்கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமா?
Monday, October 11, 2021
நல்ல காரியங்கள் கெடுவது எதனால்?
அண்மையில் எனது நண்பன் ஒருவன் தாம் குழுவாக இணைந்து முன்னெடுத்த ஒரு சமூகப்பணி தகுந்த முன்னேற்றம் இல்லாமல் தடைபட்டுவிட்டதாக வருந்தினான். அதற்கு காரணம் அந்தப்பணியினை செய்ய வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் தகுந்த ஒத்துழைப்பினைத் தரவில்லை என்று கூறினான்.
குழுவாக செயல்களை முன்னெடுக்கும் போது அந்தக்குழுக்களுக்குள் இருப்பவர்களின் அகங்காரத்தை வீணாக நோண்டாமல் இருப்பது அவசியம்!
நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை தெளிவாக வரையறுத்துக்கொண்டு நம்முடன் இணைந்து பணியாற்றுபவர்களுக்கு நாம் உதவுகிறோம் என்ற மனப்பாங்கினையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்புவது அவசியமாகிறது.
நான் பார்த்த அளவில் எமது சமூகத்தில் விரைவாக நம்பிக்கையின்மையை ஏற்படுத்த மாத்திரமே எமது கூர்ந்த அறிவினைப் பயன்படுத்துகிறோமே அன்றி, நாம் இணைந்து பணியாற்றுபவர்களைச் சங்கடப்படுத்தாமல், சகோதரத்துவத்துடன், அகங்காரம் அற்று செயற்படுவது குறைவாகத்தான் இருக்கிறது.
பொதுவாக ஒரு சமூகப்பணியில் பணியின் நோக்கம் நிறைவேறுகிறதோ இல்லையோ எம்மை முன்னிலைப்படுத்துகிறார்களா இல்லையா என்று மனம் எண்ணுவது மனித இயல்பு! இவற்றை மதித்து எல்லோரையும் உள்வாங்கி நாம் செயல்புரியாவிட்டல் அனேக நல்ல பணிகள் வீண் அகங்காரங்களால் தடைபட்டுப்போகும்.
Friday, October 08, 2021
திருமூலரும் அகத்தியரும் கூறும் பத்மாசனம்
ஓரணை யப்பத மூருவின் மேலேறிட்
டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே.
ஒரு காலின் பாதத்தை ஊரு என்ற தொடையில் மேல் ஏற்றி மறுபாதத்தை வலித்து அழகாக மற்றத் தொடையில் வைத்து, கைகளை சீராக முழங்கால்களின் மேல் வைக்க இதுவே இந்த உலகமெல்லாம் புகழும் ஆசனங்களில் மிக உயர்ந்த ஆசனமாகும்.
திருமூலர்
உறுதியுள்ள பத்மமதை சொல்லக்கேளு
உண்மையுடன் பாதம்ரெண்டும் துடைமேலேற்றி
சுருதியுடன் கைரெண்டும் முழந்தாள்வைத்து
சுத்தமுடன் தன்னகத்தை சுகமாய்ப்பார்க்க
பரிதியுள்ள பத்மாசன மிதென்று
பதிவான வேதாந்தப் பெரியோரெல்லாம்
வரிதியுடன் யெக்கியமா முனிதான்சொல்ல
மகத்தான ஆசனத்தை மகிழ்ந்தார்காணே.
அகத்தியர்
யோக சாதனைக்கு உறுதி தரும் பத்மாசனத்தைக் கூறுகிறேன் கேள்! மனதில் உண்மையுடன் (சத்தியத்துடன்) இரண்டு பாதங்களை தொடைகளின் மேல் ஏற்றி ஒத்திசைவாக கைகள் இரண்டையும் தொடைகளில் வைத்து, மனச்சலனம் இல்லாமல் அகத்தைப் பார்க்க சூரியனின் ஒளி மனக்கண்ணில் தோன்றும்! இந்த ஆசனத்தை வேதாந்தம் அறிந்த பெரியவர்களும், முனிவர்களும் மகத்தான ஆசனம் என்று கூறியுள்ளார்கள்.
Thursday, October 07, 2021
தலைப்பு இல்லை
துர்க்கை அன்னையே!
எம் யோக சக்தியை விரிவடையச் செய்.
நாங்கள் உன் மைந்தர்கள்.
நாங்கள் இழந்திருக்கும் கல்வியையும் பக்தியையும் சிரத்தையையும் புத்திகூர்மையையும் உயர் இயல்பையும் பிரம்மச்சரியத்தையும் தவ வலிமையையும் உண்மை அறிவையும் எங்களுள் மீண்டும் மலரச்செய்.
இவை அனைத்தையும் உலகுக்கு அளி.
ஓ உலக அன்னையே, மானுடர்களுக்கு உதவத் தோற்றமளி எல்லாக் கேடுகளையும் நீக்கு.
துர்க்கை அன்னையே! அகத்தே உள்ள பகைவர்களை மாய்த்துவிடு, பின் புறத்தே உள்ள தடைகளை வேரோடு அழித்துவிடு.
துர்க்கை அன்னையே!
உன் யோக வலிமையுடன் எங்கள் உடலுள் வந்தருள். நாங்கள் உன்னுடைய கருவிகளாக ஆவோம்.
தீமை யாவையும் அழித்துவிடும் உன் வாளாக ஆவோம்.
அறியாமை அனைத்தையும் அகற்றிவிடும் உன் விளக்காக ஆவோம்.
உன் இளஞ் செல்வங்களின் இவ்வேட்கையை நிறைவுபெறச் செய்.
அன்னையே, எங்கள் தலைவியாக இருந்து எங்களை இயக்கு. உன் வாளைச் சுழற்றித் தீமையை அழி, உன் விளக்கை உயர்த்தி அறிவொளி பரப்பு. உன்னை வெளிப்படுத்து!
வீர வழி காண்பிப்பவளே, நாங்கள் இனி உன்னைப் பிரிய மாட்டோம்.
தாயே, நாங்கள் எங்கள் வாழ்க்கை முழுவதும் உன்னை இடைவிடாமல் வழிபடவேண்டும்.
எங்கள் செயல்கள் அனைத்தும் அன்பும் சக்தியும் நிறைந்து தொடர்ந்து உன் பணியில் இருக்க வேண்டும். இதுவே எங்கள் வேண்டுகோள்.
ஸ்ரீ அரவிந்தர் - துர்க்கா துதி
Tuesday, October 05, 2021
வாழ்க்கை எனும் விளையாட்டில் சக்தி தத்துவம்
பலருக்கு வாழ்க்கை என்பது துன்பமும், சங்கடமும் நிறைந்த ஒன்றாக இருப்பதற்கு காரணம் வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு என்பதை புரியாமல் இருப்பது!
விளையாட்டு என்றால் கட்டாயம் விதிகள் இருக்கும்! விதிகளைப் புரியாமல் விளையாட முடியாது. விதிகளைப் புரிதல் விளையாட்டின் முதல் படி! விதிகள் புரிந்தாலும் விளையாடுவதற்கு உடலிலும் மனதிலும் சக்தி வேண்டும்.
ஆக வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக்கொண்டு அந்த விளையாட்டின் விதிகளைப் புரிந்து கொண்டு, அந்த விதிகளை பிரயோகித்து வாழ்க்கை வெற்றிபெற சக்தி வேண்டும்.
இதற்கு என்ன வழி? சக்தி உபாசனை - சக்திக்கு அருகில் அமர்ந்து சக்தியை கிரகிக்க வேண்டும். உபாசனை என்றால் அருகில் அமர்தல் என்று பொருள்.
இதனை தினசரி செய்ய முடியாதவர்கள் குறைந்தது நவராத்ரியிலாவது செய்ய வேண்டும்.
ஒருவன் வாழ்க்கை எனும் விளையாட்டைப் புரிந்துகொள்ள தேவையான அறிவு என்ன?
ஆன்மாவை பற்றிய அறிவு: இதனால் ஒருவனுடைய அடிப்படை மரண பயம் அற்று மனம் சம பாவத்தை அடைகிறது. இறப்பு, பிறப்பு இவற்றுக்கிடையிலான வாழ்க்கையை எப்படிச் செம்மையாக வாழ்வது என்ற புரிதலைத் தருகிறது.
ஆற்றல் வளர்ச்சி: தனிமனிதனின் ஆற்றல்கள் உடல் நலம், கல்வி, செல்வம், சக மனிதர்களுடன் கூட்டுறவாக இயங்குதல் இந்த நான்கும். இவை நான்கும் ஒன்றிணைந்து இருப்பவனே ஆற்றலுள்ளவனாக இருப்பான்.
இலட்சியத்தின் மூலம் தனிச்சிறப்புடையவனாக இருத்தல்: இலட்சியம் என்பது இன்று தனிமனித அடைவுகளாக மாத்திரமே இருக்கிறது. நான் கல்வியில் உயர்வு பெறவேண்டும், நல்ல தொழில் பெறவேண்டும் என்பது மாத்திரமே அனேகரது மனநிலை. இத்தகையவர்கள் உயர்ந்த கல்வியைப் பெற்று ஒரு தொழில் கிடைத்தவுடன் அதற்குப்பிறகு தாம் செய்யவேண்டியது, அடையவேண்டியது எதுவும் இல்லை என்று சிறப்பற்றவர்களாக மாறி விடுகிறார்கள். இத்தகையவர்கள் சமூகத்திற்காக, மற்றவர்களுக்காக தமது அறிவினை ஆற்றலினைப் பயன்படுத்தும் இலட்சியத்தினைப் பெறும்போது அவர்கள் தனிச்சிறப்புடையவர்களாகி விடுகிறார்கள்.
தூய்மை: உடல், மனம், வாக்கு, வசிக்கும் இடம் ஆகியவற்றில் தூய்மை ஒருவருக்கு ஆற்றலினைத் தரும்.
தெய்வீக மனம்: உலகில் உள்ள அனைத்தும் அந்த சக்தியின் வெளிப்பாடுதான் என்ற புரிதலுடன் உயர்வு, தாழ்வு என்ற இருமைகளை மனதில் உருவாக்காமல் உலகில் உள்ள அனைத்தையும் வெறுக்காமல் வாழ்க்கையை உன்னத நோக்கத்திற்கானது என்ற புரிதலுடைய தெய்வீக மனம் ஒருவனிற்கு சக்தியைத் தரும்.
நேர்மை: நற்பண்புகள், பழக்கவழக்கம், நடத்தை, இனிய பேச்சு, அடக்கம், பணிவு, தாராள மனப்பான்மை, தொண்டுள்ளம், கடமையுணர்வு, காலந்தவறாமை, கிடைத்ததில் திருப்தியடைதல், விழிப்புணர்வு, தைரியம், வீரம் ஆகியவை நேர்மையில் இருந்து உதிப்பவை. எவருக்காவது இந்தப்பண்புகள் நிறைந்திருந்தால் அவர் நேர்மை என்ற சக்தியைக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
விவேகம்: எது உண்மை? எது பொய் என்பதைப் பகுத்தறியும் தன்மைக்கு விவேகம் என்று பெயர். விவேகம் என்பது கேட்பவற்றை அப்படியே நம்புவது அல்ல! இடம், காலம், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஆகியவற்றை சீர்தூக்கி சிந்தித்து ஏற்றுக்கொள்பவனே விவேகம் என்ற ஆற்றல் உடையவன்.
தன்னடக்கம்: தன்னுடைய எண்ணம், செயல், பாலுணர்ச்சி ஆகிய மூன்றையும் தவறான பாதையில் செல்லவிடாமல் ஆளக்கூடிய பண்பே தன்னடக்கம். இவற்றிற்கு பயந்து ஓடுவது தன்னடக்கம் இல்லை. இவற்றை சரியாகப் பயன்படுத்தி ஆற்றலை விழிப்பிக்கக்கூடிய நிலையை அடைவதே தன்னடக்கம்.
தொண்டுள்ளம்: மற்றவர்களுக்கு தனது ஆற்றலுக்கு உட்பட்ட நிலைக்குள் உதவி செய்தல், வழிகாட்டுதல். பிறருக்கு உதவி செய்கிறோம் என்று சோம்பேறிகளாக்குவது மக்கள் தொண்டு அல்ல! மற்றவர்கள் மனதை மேம்படுத்தி ஆற்றல் உள்ளவர்களாக பிரச்சனைகளிலிருந்து மீண்டு வரக்கூடியவர்களாக செய்யப்படும் உதவியே உண்மையான தொண்டு.
இந்த வாழ்க்கை எனும் விளையாட்டின் விதிகளைப் புரிந்துகொள்ளும் அறிவையும், விளையாட்டினை சரியாக விளையாடக்கூடிய ஆற்றலையும், வளத்தினையும் தருபவள் சக்தி!
அவளை உபாசிப்பவர்கள் இந்த ஆற்றல்களை படிப்படியாக அடைகிறார்கள்!
சக்தி உபாசனைக்கு மிக உகந்த காலம் நவராத்ரி!
Sunday, October 03, 2021
தலைப்பு இல்லை
As a Visiting Lecturer, Yesterday I started my formal teaching "Career Guidance" course for third-year students at the Faculty of Applied Science, University of Vavuniya.
Thank you very much to Dean, HoD's, Faculty members, common course coordinator, and council for this opportunity.
Being I am passionate to teach and build up the younger minds this opportunity is soul-satisfying!
I am planning to develop a detailed course to guide the younger people to "think" and select their career, life, how to develop their mind, work-life balance, emotional management, etc.
Saturday, October 02, 2021
தலைப்பு இல்லை
Urban environmental Management - Bird eye view
#climathontalks03
Thanking to our Resource Person,
Dr. T. Sumanenthiran, (Environmentalist)
Director, Sri Shakti Sumanan Institute
Series for the Year 2021 - 03
via ZOOM - 2021.09.29
Climathon Talk Recoarding :
https://fb.watch/8km6BRKa5w/
பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்
பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள் எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால் சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் தனது ஸௌபாக்யா மந்திர சாதனா ஒலி நாடாவில் மூன்று ஆசீர்வாத மந்திரங்களை கூறியுள்ளார். இந்த மூன்று மந்திரங்க...