தாவோ தி ஜிங் - தாவோயிஸ மூல நூல்
தாவோ - (சம நிலையான)
பாதை
தி - அகவலிமை
நூல் - நூல்
அகவலிமையைப்
பெறுவதற்கான பாதையைக் காட்டும் நூல் தாவோ தி ஜிங்
தாவோ தி ஜிங் என்ற நூல் லாவோட்ஸு
வினால் எழுதப்பட்ட தாவோயிஸ நூலாகும். இதற்கு தமிழில் சி. மணி மொழிபெயர்ப்பு
செய்திருக்கிறார். எனினும் அது தாவோயிஸ அனுபவத்தைத் தருவதாக இல்லை!
நாம் முதலாவது பாடல் (ஆங்கில
மொழிபெயர்ப்பிலிருந்து) தமிழிற்கு மொழிபெயர்த்திருக்கிறோம். வார்த்தைகளின்
அர்த்தத்தை அப்படியே மொழிபெயர்க்காமல் அந்தச் சூத்திரம் என்ன அர்த்தத்தை பரிமாற
விரும்புகிறது என்று தியானித்து எழுதியுள்ளோம்!
உங்கள் கருத்தினைக்
கூறுங்கள்
சூத்திரம் - 01: தாவோ
ஒரு வழிகாட்டி
தாவோ என்பது ஒரு
வழிகாட்டி, நிரந்தரமான வரையறுத்த பாதையல்ல
பெயரிடலாம் ஆனால்
முத்திரை குத்தக்கூடாது
இருப்பின்மையே
ஆகாயத்தினதும் பிருதிவியினதும் தோற்றுவாய்
இருப்பு அனைத்திற்கும்
தாய்!
எப்போதும்
விருப்பின்மையுடன் இரு!
இதனால் சூக்ஷ்மத்தைக்
கவனிக்கும் ஆற்றல் பெறுவாய்!
எப்போதும் அறியும்
நோக்கத்துடன் இரு
இதனால் தெளிவினைப்
பெறுவாய்!
சூக்ஷ்மமும் தெளிவும்
ஒரே மூலத்தின் இருவேறு நாமங்கள்!
இவை இரண்டும்
இரகசியங்கள் எனப்படுகிறது!
இரகசியத்தின் இரகசியம்
இதையறிந்தால்
அற்புதத்தின் பாதை திறக்கும்!
இந்த சூத்திரத்தின்
மீதான ஸ்ரீ ஸக்தி சுமனனின் குறிப்பு
***********************************************************
அகவலிமைக்கான பாதையைத்
தேர்ந்தெடுப்பவன் இதுமட்டுதான் உண்மை என்ற இறுக்கமான மனதைக் கொண்டிருக்கக்கூடாது!
எதையும் முத்திரைக் குத்தி நின்றுவிட்டால் அவனது விழிப்புணர்வு நின்றுவிடும்!
புரிதல் எல்லைப்பட்டுவிடும்!
மனதில் விருப்பு -
இச்சைப்பட்டுக்கொண்டிருப்பவன், விருப்பு வெறுப்பு இருப்பவன், தான் விரும்புபவற்றை
மாத்திரம் பார்க்கும்படி தனது மனதைப் பழக்கிக்கொள்வான்! இப்படி இச்சையால்
சிறைப்பிடிக்கப்பட்ட மனதிற்கு, சூக்ஷ்ம பிரபஞ்ச இயக்கம் புரியாது. விருப்பின்மையே
சூக்ஷ்மத்தைப் புரிந்துகொள்வதற்கான சாவி!
அகவலிமையைப் பெறும் பாதையைத் தேர்ந்தெடுத்தவன்
எப்போதும் அறியவேண்டும் என்ற உத்வேகம் அகத்தில் இருக்க வேண்டும். இப்படிப்பட்டவனுக்குத்தான்
தெளிவு கிடைக்கும்!
சூக்ஷ்ம அறிவு, தெளிவு என்ற இரண்டுமே ஒரே விஷயத்தின் இரண்டு பெயர்கள்! ஒருவனிற்கு சூக்ஷ்ம புத்தி இருந்தால் அவன் வார்த்தைகளைத் தாண்டி மனதின் இயக்கத்தை அறிவான்! மேலே கொந்தளிக்கும் கடலின் அலைகளின் மூலம் ஆழத்தில் ஓடும் நீரோட்டம் என்பதை அறிவான்!
சூக்ஷ்ம அறிவு, தெளிந்த அறிவு இவையிரண்டுமே அற்புதங்களை அறிவதற்கான இரகசிய சாவிகள்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.