மனித குலத்தின்
பிரச்சனைகளை ஸ்தூலமாக பொருள் முதன்மை வாதத்துடன் ஆராய்ந்த கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம்
என்ற ஆய்வின் மூலம் சூழல்தொகுதியின் வளங்கள் உற்பத்தியாக்கப்பட்டு நுகர்வுப்
பொருளாக்கப்படுகிறது; இந்த நுகர்வுப்பொருள்களை சந்தையாக்கி அந்தச் சந்தை மூலம் பொருளாதாரம்
உருவாக்கப்படுகிறது; இந்த உற்பத்தியை களத்தில் செய்வது உழைக்கும் வர்க்கம் என்றும்
இவற்றை பொருளாதாரம் ஆக்குவது ஆளும் வர்க்கம் என்றும் இவற்றிற்கிடையிலான
வேறுபாட்டினால் உழைக்கும் வர்க்கம் சுரண்டப்படுகிறது; அதே உழைக்கும் வர்க்கம்
பெரும்பான்மையாக இருப்பதால் ஒருகட்டத்தில் இந்த நுகர்வு பூர்த்தியாகி உபரி உருவாகி
இறுதியில் இந்த முதலாளித்துவம் சிதைந்து பொதுவுடமை வரும் என்று மார்க்ஸ் கட்டியம்
கூற அப்படி நடக்கவில்லை!
இது பலரும் பலவாறாக கூறினாலும் இதற்கான காரணம் என்னவென்பது பற்றி எனது கருத்து மார்க்ஸ் உலகை பொருள்முதன்மை வாதத்துடன் மாத்திரம் நிறுத்திக்கொண்டதுதான் என்று நினைக்கிறேன்.
புலன் தாண்டிய மனம் என்ற கருவியே நுகருகிறது; அதைக் கட்டுப்படுத்துவதால்தான் நுகர்வு தடைப்படும் என்ற உண்மையை ஆசிய மைய சிந்தனையை உள்வாங்காததால் இருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.
நான் மார்க்ஸியத்தை முழுமையாகப் படித்தவன் அல்ல; உலகப்பிரச்சனைகளுக்கு பொருள்முதன்மையைத் தாண்டிய சூக்ஷ்ம காரணியான மனம் என்ற ஒன்று இருக்கிறது; அதன் இயக்கம், இயற்கையான வழு என்பவை உலகை, மனிதனை அவனது இயக்கத்தை நிர்ணயிக்கும் என்ற கோட்பாட்டின் ஆசான்களான அகத்தியர், பதஞ்சலி, புத்தர், விவேகானந்தர், அரவிந்தர் ஆகியவர்களின் "மனமுதன்மைவாத" சிந்தனை மரபைச் சார்ந்தவன்! மனமுடையவன் மனிதன், who have a mind is called as man, எனினும் தனிமனிதனதும், சமூகத்தினதும் பிரச்சனைகளுக்கான காரணம் என்று ஆராயும் ஒரு அறிவு வேட்கை கொண்டவன் என்ற அடிப்படையில் இவற்றை படித்துக்கொண்டிருக்கிறேன்.
மார்க்ஸைப் பற்றிய ஒளி விவரணப்பட அறிமுகம்: https://www.youtube.com/watch?v=gYmsbsNCySM&t=46s
இந்த விவரணப்படத்தைப் பார்த்ததால் நேற்றைய புத்தக கொள்வனவில் வாங்கிக்கொண்ட புத்தகம் இது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.