இன்று பங்குனி ஆயில்யம்!
யாழ்ப்பாணத்து சிவயோக
சுவாமிகளின் திருவடிக்கலப்பு நாள்!
சுவாமிகள் பெற்ற மகாவாக்கியங்களை
அவரவர் உலகப்பிரச்சனைக்கு உகந்தபடி பேச்சுவழக்கில் பாவித்தாலும் அவை நான்கும்
சிவயோகத்தின் உயர் அனுபவத்தின் சாரம்;
எப்பவோ முடிந்த காரியம்
நாம் அறியோம்
ஒரு பொல்லாப்பும் இல்லை
முழுதும் உண்மை
எந்த ஒரு காரியமும் ஸ்தூலத்திற்கு
வருமுன்னர் அது சூக்ஷ்மத்தில் முடிவுற்று, சூஷ்மத்தில் தோற்றம் பெற முன்னர்
காரணத்தில் முடிவுற்று விடும். சித்தர் தத்துவத்தில் நோய் தோற்றம் ஸ்தூலத்தில்
தோன்றுவதற்கு பலமாதங்களுக்கு முன்னர் சூக்ஷ்ம உடலில் தோன்றி, சிலவருடங்களுக்கு
முன்னர் காரணத்தில் தோன்றுகிறது என்பதும் அதை எப்படி அறிவது என்பதும்
விளக்கப்பட்டிருக்கிறது. ஆகவே காரணத்தில் முடிவுற்று, சூக்ஷ்மத்தில் எப்போதோ
முடிந்த காரியம் சூக்ஷ்மத்தில் வந்து, பிறகு இருந்து அழுது, புலம்பி என்ன பயன்;
நாம் காணும் அனைத்தும் எப்பவோ முடிந்த காரியம்!
நானும் இறைவனும் வேறல்ல என்ற
சிவபோக நிலை அடைந்துவிட்டால் பிறகு நான் அறிகிறேன் என்ற நிலை இல்லை.
நாம் எமக்கு நடப்பதைக் கண்டு தீமை, துன்பம் ஆகிவிடும் என்று அஞ்சிப் புலம்புகிறோம்; ஆனால் நடப்பவை அனைத்தும் எமக்கு ஏதோ ஒருவழியில் ஞானத்தைப் புகட்டவே திருவருள் நடாத்துகிறது என்று அறிந்தவனுக்கு எதுவும் பொல்லாப்பு இல்லை!
அனைத்தும் அந்த சத்தியமயமான - (உண்மை) சிவத்தின் வெளிப்பாடு என்று அறிந்த பின்னர் உலகில் எதை நாம் பொய் என்று ஒதுக்க முடியும்! ஆகவே முழுவதும் உண்மை!
***********************************
யோகர் சுவாமிகளை செல்லப்பர்
ஒவ்வொரு பங்குனித் திங்கள் அன்றும் நடையாக மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோயிலிற்கு
அழைத்துச் சென்று இரவில் பொங்கலிட்டு படைத்துவிட்டு சாப்பிட உட்காரும்போது பொங்கல்
பானையை உடைத்தெறிந்துவிட்டு போதும் செல்வோம் என்று அழைத்து வந்துவிடுவாராம்!
(செல்லத்துரை சாமியிடம்
கேட்டது)
*************************************************
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.