இன்றைய உரை கந்தகுரு கவசத்தின் முதல் 50 வரிகளுக்கான யோக ஞானவிளக்கம்
... விநாயகர் வாழ்த்து
...
கலியுகத் தெய்வமே
கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப்
பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை
கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின்
திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி வினாயக ஜயமருள்
போற்றுகிறேன் ...... 5
சிற்பர கணபதே
நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக்
கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்து என்னை
ரக்ஷித்திடுவீரே.
... செய்யுள் ...
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா
சரணம்
சரவணபவ குகா சரணம்
சரணம் ...... 10
குருகுகா சரணம் குருபரா
சரணம்
சரணம் அடைந்திட்டேன்
கந்தா சரணம்
தனைத் தானறிந்து நான்
தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா
தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா
வந்திடுவீர் வந்திடுவீர் ...... 15
அவதூத சத்குருவாய்
ஆண்டவனே வந்திடுவீர்
அன்புருவாய் வந்தென்னை
ஆட்கொண்ட குருபரனே
அறம் பொருள் இன்பம்
வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை
ஸ்கந்தகுருநாதா
ஷண்முகா சரணம் சரணம்
ஸ்கந்த குரோ ...... 20
காத்திடுவாய்
காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன்
போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா
போற்றி
போற்றி போற்றி முருகா
போற்றி
அறுமுகா போற்றி
அருட்பதம் அருள்வாய் ...... 25
தகப்பன் ஸ்வாமியே என்
இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமி மலைதனில்
சொன்னதனைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா
செப்பிடுவாய் ப்ரணவமதை
அகக்கண் திறக்க
அருள்வாய் உபதேசம்
திக்கெலாம் வென்று
திருச்செந்தில் அமர்ந்தோனே ...... 30
ஆறுமுக ஸ்வாமி உன்னை
அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ
அன்பு மயமாய் வருவாய்
அமரத் தன்மையினை
அனுக்கிரகித்திடுவாயே
வேலுடைக் குமரா நீ
வித்தையும் தந்தருள்வாய்
வேல் கொண்டு
வந்திடுவாய் காலனை விரட்டிடவே ...... 35
தேவரைக் காத்த
திருச்செந்தில் ஆண்டவனே
திருமுருகன் பூண்டியிலே
திவ்ய ஜோதியான கந்தா
பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்
திருமலை முருகா நீ
திடஞானம் அருள் புரிவாய்
செல்வமுத்துக் குமரா
மும்மலம் அகற்றிடுவாய் ...... 40
அடிமுடி யறியவொணா அண்ணா
மலையோனே
அருணாசலக் குமரா
அருணகிரிக்கு அருளியவா
திருப்பரங்கிரிக் குகனே
தீர்த்திடுவாய் வினை முழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனாய்
ஆக்கிடுவாய்
எட்டுக்குடிக் குமரா
ஏவல்பில்லி சூனியத்தை ...... 45
பகைவர் சூதுவாதுகளை
வேல்கொண்டு விரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும்
எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்தா
எண்கண் முருகா நீ
என்னுள் அறிவாய் நீ
உள்ளொளியாய் வந்தருள்வாய்
திருப்போருர் மாமுருகா
திருவடியே சரணமய்யா ...... 50
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.