பல ஆண்டுகளாக எமது குருநாதர் எமக்கு கூறிய அறிவுரைப்படி பலருக்கும் காயத்ரி சாதனை கற்பித்து வருகிறோம். பொதுவாக காயத்ரி சாதனை செய்யத்தொடங்கிய சிறிதுகாலத்திற்குள் எல்லோரும் உடல், மனதில் புதிய ஆற்றலைப் பெறுவதையும், ஆரோக்கியமடைவதையும் குறிப்பிடுவார்கள். இந்தக் கொரோனாக் காலத்தில் தொற்றடைந்த சாதகர்கள் சிலர் துரிதமாக மீண்டும் இருக்கிறார்கள்.
ஸ்ரீ காயத்ரி உபாசனை எமது சம்பிரதாயத்தில் பிராணசாதனையாக கொள்ளப்படுகிறது. குறித்தளவு காயத்ரி மந்திரத்தை நீண்ட காலம் பயிற்சி செய்த சாதகன் அதை மூச்சுடன் எப்படிக் கலப்பது என்பது காயத்ரி சாதனையின் ஒரு உயர் அமிசம்!
இது ஸ்ரீ காயத்ரி தந்திரத்தின் இறுதியில் விளங்கப்படுத்தப்படுகிறது.
காயத்ரி என்பது எட்டுச் சொற்கள், 24 எழுத்துக்கள் கொண்ட மந்திரத்தைக் குறிக்கும் சொல்; இதை காயத்ரி சந்தஸ் - சந்தம் என்று குறிப்பிடுவார்கள். கீதையில் கிருஷ்ணன் சந்தங்களில் நான் காயத்ரி என்று கூறுகிறார். இந்த காயத்ரி சந்தஸ் உடைய மந்திரங்களை உச்சரிக்கும் போது உயிர் சக்தியாகிய பிராணன் ரட்சிக்கப்படுகிறது. இந்த பிராணன் ரட்சிக்கப்படுவதற்கு மூச்சு ஒழுங்குபடுத்தப்படவேண்டும். இப்படி மூச்சை ஒழுங்குபடுத்தி பிராணனை ரட்சிப்பதால் இந்த மந்திரம் பிராணமாதா - பிராணனின் தாய் எனப்படுகிறது.
ஆகவே இந்த சாதனை என்பது மனம் - மூச்சு - உடல் ஆகிய மூன்றையும் இணைக்கும் ஒரு பயிற்சியாக மாறுகிறது.
நேற்று அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மூச்சுப்பயிற்சியுடன் கூடிய காயத்ரி மந்திர ஜெபம் நடுத்தர பாதிப்புக் கொண்ட கொரோனா தொற்று நோயாளிகள் தமது நோயிலிருந்து எவ்வளவு துரிதமாக மீள்கிறார்கள் என்பதையும் C-reactive protein அளவு எப்படி இருக்கிறது என்பதையும் அறிய ஒரு postdoctoral researcher இனை நியமித்திருக்கிறது.
இந்த ஆய்வுகள் சம்பிரதாயத்தில், எமது முன்னோர்கள் கூறிய பலன்களுடன் எப்படி அறிவியல் ரீதியாக உடலில் செயற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள நல்ல ஆய்வுகள்!
தமிழ் ஊடகங்கள் இவற்றை வழமையான பாணியில் "கொரோனாவைத் தீர்க்கும் காயத்ரி மந்திரம்" என்று sensation இனைக் கிளப்ப, நாத்திகர்கள் அதை கேலி செய்ய இதைப் பார்த்து மக்கள் குழம்ப கடைசியில் உண்மை எது என்று தெரியாமல் மேலும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும், அறிவியல் ஏற்கனவே இருந்த பழைய சம்பிரதாயத்தை தனது வழியில் புரிந்துகொள்ள முயற்சிக்கிறது என்பதை நாம் சமநிலையாகப் புரிந்துகொள்வது மிக அவசியமான ஒன்று!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.