இன்றைய சுப்பிரமணிய யோக
ஞானத்திறவுகோல் நிகழ்வு - 03
நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா
நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம
...... வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம
...... பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா
நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம
...... கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம
...... அருள்தாராய்
ஈத லும்பல கோலா
லபூஜையும்
ஓத லுங்குண ஆசா
ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா
தசேவையு ...... மறவாத
ஏழ்த லம்புகழ் காவே
ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா
ளுநாயக ...... வயலூரா
ஆத ரம்பயி லாரூ
ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே
முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே
றிமாகயி ...... லையிலேகி
ஆதி யந்தவு லாவா
சுபாடிய
சேரர் கொங்குவை காவூர்
நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா
னதேவர்கள் ...... பெருமாளே.
ஒவ்வொரு திருப்புகழும் ஒவ்வொரு
தலத்தில் உறையும் முருகனைப் பற்றிப் பேசுகிறது. இதை உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும்
அவர் முருகன் மேல் இருக்கும் பக்தியாய் அந்த முருகனைப் போற்றிப் புகழ்கிறார் என்ற
உணர்ச்சியில் கருதி வருகிறார்கள். ஆனால் அருணகிரிநாதர் குரு உபதேசித்த தனது
சடாட்சர மந்திர உபாசனையை, யோக சாதனையை ஒவ்வொரு தலத்திலும் நிகழ்த்தி அங்கு தான்
பெற்ற அனுபவம், யோக சித்திகளை அளித்த அந்த முருகன் என்பதைப் பாடிச் செல்கிறார்.
அந்த வகையில் இந்தப்பாடல் பழனி
முருகன் அடிவாரத்தில் இருக்கும் திருவாவினன் குடி முருகன் அவரிற்கு என்ன ஆன்ம யோக
அனுபவத்தை அளித்தான் என்பதைப் பார்ப்போம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.