ஆட்டம் தொடர்கிறது...
ஆட்டங்களில் தந்திரோபாய உத்திகள்
(strategies) மிகமுக்கியமானவை. தந்திரோபாய உத்திகளை கோட்பாட்டு அடிப்படையில்
இரண்டாக பிரிக்கலாம்.
தூய தந்திரோபாய உத்தி -
pure strategy
கலப்பு தந்திரோபாய உத்தி - mixed strategy
தூய தந்திரோபாய உத்தி என்பது அனைத்து நிபந்தனைகளும் மாறாமல் இருக்கிறது என்று கற்பனை செய்துகொண்டு ஆட்டத்தினை வரையறுப்பது. பொதுவாக தமிழர்களின் அரசியல் இப்படித்தான் வடிவமைக்கப்படுகிறது. போராட்டம் செய்துவிட்டால் அமெரிக்காக்காரனும், வெள்ளைக்காரனும் அதைப் பார்த்து எமக்கு தீர்வு தருவான் என்று நம்புவதைப் போன்ற வெள்ளந்தியான தந்திரோபாயம். ஆனால் இயற்கையில், நிஜத்தில் எப்போதும் இப்படி இருப்பதில்லை!
ஒரு ஆட்டம் ஆரம்பித்தவுடன் எதிராளி அந்த ஆட்டத்திற்கெதிராக தர்க்கத்திற்கு உட்பட்டோ, தர்க்கம் எதிராளிக்குப் புரியாமலோ தனது எதிர் தந்திரோபாயத்தினைப் (counter strategy) பிரயோகிக்க ஆரம்பிப்பான்! எதிராளியை ஏளனம் செய்யும் மனம், முட்டாள் என்று சிந்திக்கும் மனம், எதிராளியைப் புரியாமல் சொந்த இன்பத்திற்காக மட்டும் விளையாடும் ஆட்டம் ஒரு போதும் சமநிலையை, வெற்றியைத் தராது!
ஆகவே ஒருவன் கலப்பு தந்திரோபாய உத்திகளை ஆட்டத்தின் ஒவ்வொரு நிலைக்கு ஏற்ப யதார்த்தமாக பிரயோகிக்கத் தெரிந்தால் மாத்திரமே ஆட்டம் பலனுள்ளதாக இருக்கும்!
ஆட்டத்தில் ஒத்திசைந்த கூட்டுறவு ஆட்டம், (co-operative game) ஒத்திசையாத கூட்டுறவற்ற எதிர்ப்பு ஆட்டம் (non co-operative game) இரண்டையும் எதிராளியின் தெரிவிற்கு ஏற்ப தேர்ந்து ஆடும் போதுதான் அதிகாரச் சமநிலை வரும்!
இப்படி இல்லாமல் எப்போதும் கூட்டுறவு ஆட்டம் என்றால் அடிமைகளாகவும், எப்போதும் ஒத்திசையாத கூட்டுறவு ஆட்டம் என்றால் எதிராளியாக மாத்திரமே ஆட்டத்தின் முடிவு இருக்கும்!
இதை ஆட்டக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.