நாம் இன்னொருவருடன்
எண்ண ரீதியாக, பொருள் ரீதியாக, கோட்பாட்டு ரீதியாக ஏதாவது ஒரு பரிமாற்றத்தை
ஆரம்பிக்கும்போது, செல்வாக்குச் செலுத்தும்போது நாம் ஆட்டத்திற்குள் (Game)
நுழைகிறோம்.
ஆட்டத்திற்குள் நுழைந்தபின்னர் ஆட்ட விதிகளை (rules of the Game) புரிந்துகொண்டு அந்த ஆட்டத்தை நன்கு ஆடமுடிந்தால் மாத்திரமே ஆட்டம் சிறக்கும்!
வியாபாரம், அரசியல், சமூகத் தொடர்பாடல்கள், முரண்பாடுகள், காதல், உறவுகள் அனைத்தும் ஒருவித ஆட்டம்தான்!
கண்ணன் ஒரு தீராத
விளையாட்டுப்பிள்ளை என்பதன் அர்த்தமும் அவன் ஒரு strategic game player
என்பதுதான்! மகாபாரதம் பண்டைய ஆட்டவிதிகளுக்கான ஒரு கோவை என்று கூறலாம்!
ஆட்டத்தில் ஆட்டக்காரர்கள்
ஆட்டத்திற்குரிய தர்க்க விதிகளைப் புரிந்துகொண்டு அந்த விதிகளுக்கு அமைய ஆடுவோம்
என்றால் மாத்திரமே ஆட்டம் இரசிக்கக்கூடியதாக, இன்பம் தரக்கூடியதாக இருக்கும்.
ஆட்டத்தில் ஆட்டக்காரர்கள், உத்திகள், ஆட்டத்தின் பலன் (players, strategies, and payoffs) இந்த மூன்றும் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்!
ஆட்டக்காரர்கள் தகுந்த தர்க்க விதிகள் இன்றி மனம் பிறழ்ந்த நிலையில் ஆட்டம் ஆடுவது எப்போதும் குழப்ப நிலையிலேயே (Chaotic state) ஆட்டத்தினை வைத்திருக்கும்!
ஆட்டம் இரு வகைப்படும். ஒத்திசைந்த கூட்டுறவு ஆட்டம் (co-operative game) ஒத்திசையாத கூட்டுறவற்ற எதிர்ப்பு ஆட்டம் (non co-operative game) என இரு வகைப்படும்!
எனக்கும் வெற்றி - உனக்கும் வெற்றி என்பது கூட்டுறவு ஆட்டம்! எனக்கு வெற்றி - உனக்குத் தோல்வி என்பது எதிர்ப்பு ஆட்டம்.
ஆட்டம் தொடரும்....
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.