விஞ்ஞான பைரவ
தந்திரத்தினை யார் பயிற்சிக்கலாம் என்பதற்குரிய வரைவிலக்கணமாக இதன் புராதன
உரையாசிரியர் க்ஷேமராஜர் கூறுவது,
"யார் தீவிர சக்தி நிபாதத்தினால் தூய்மையுற்றவர்களோ" அவர்களே! இவற்றைப் பயிற்சிக்க முடியும் என்கிறார்.
தீவிர சக்தி நிபாதம் என்பதற்கு ஏதோ அடையமுடியாத எட்டாக்கனி என்று விளக்கம் கொடுக்கத்தேவையில்லை! இதைச் சிறு உதாரணம் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.
இந்த நூலைப் பார்த்த, கேட்டவுடன்
யாருக்கு கற்கவேண்டும், பயிற்சிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறதோ அது அந்த
பைரவரின் ஆயிரத்தில் ஒரு கதிர்ப்பு சக்தி நிபாதமாக எம்மில் மின்னுவதால் ஏற்படுவது.
நூலைப்படிக்க வேண்டும்,
பயிற்சிக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணம், உத்வேகம் ஏற்படுவது மந்தமான சக்தி
நிபாதம்.
படித்தே தீருவேன் என்று
விடாமுயற்சியாய் எண்ணம் ஏற்பட தீவிர சக்தி நிபாதமும், கற்பிக்கும் குருவும் எமக்கு
அண்மையில் தோன்றுவார்கள்!
அதன் பின்னர் அதிதீவிர சக்திநிபாதம் வாய்க்க கற்பது மாத்திரமல்ல, தடையுறாத தீவிர சாதனையும் கைக்கூடி அனுபவமும் வாய்க்கும்!
பொதுவாக 90% ஆனவர்கள் கற்க விருப்பம் என்ற எண்ணத்துடன் மாத்திரம் நின்றுவிடுவார்கள்! சிலருக்கு குருவிடம் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கும், ஆனால் பயிற்சிக்கும் உத்வேகம் அமையாது! இப்படி அனைத்தையும் தாண்டி அதி தீவிர சக்தி நிபாதமாக யோகத்தில் இந்தப்படிகளூடாக முன்னேறும் சாதகன் கோடியில் ஒருவன் என்கிறார் அகத்தியர் பெருமான்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.