வீரசிவாஜியாருடன்
மும்பை ரயில் நிலையத்தில் ஒரு செல்பி!
இன்று சிவாஜி
மகராஜாவின் பிறந்த நாள்,
சிவாஜி கணேசனாரினது அல்ல!
ஏனென்றால் பலகாலம் நான் சிவாஜி கணேசனையே சிவாஜி மகாராஜா என்று நினைத்திருந்தேன்!
சிறுவயதில் கோகுலம் இதழில் சிவாஜி மகாராஜாவின் கதைகள் வரும். அதில் மூன்று கதைகள் என்றும் ஞாபகத்தில் இருப்பது!
ஒன்று, அவர் தனது குரு சமர்த்த ராமதாஸிடம் கருவில் உபதேசம் பெற்றார் என்பது, தாயின் கருவிலேயே வீரம் ஊட்டி வளர்க்கப்பட்டார் என்பது!
இரண்டாவது, சிவாஜி 16 வயதில் இருபது முப்பது பேருடன் தனியாக வாள்சண்டை போட்டு வென்றார் என்பது. இந்தக்கதையை வாசிக்கும்போது நான் சிவாஜி என்பது சிவாஜி கணேசன்தான் என்று பலகாலமாக நம்பிக்கொண்டிருந்தேன்.
மூன்றாவது, சிவாஜி நேரடியாக பெரிய கோட்டையைத் தாக்கித் தோல்வி அடைந்து கிராமப்புறமாக ஒரு மூதாட்டியிடம் உணவிற்காக கஞ்சி அருந்தும் போது கஞ்சியின் நடுப்பாகத்தை உடனடியாக அருந்தி சூட்டினால் வாயை சுட்டுக்கொண்டார். இதைப்பார்த்த அந்த மூதாட்டி அவரை சிவாஜியின் படைவீரர் என்ற நினைப்பில் நீயும் உன் மன்னன் போல் அவசரம் பிடித்தவனாக இருக்கிறாயே என்று கடிந்துகொள்ள, மன்னன் ஆச்சரியத்துடன் ஏன் பாட்டி அப்படிக்கூறுகிறீர்கள் என்று கேட்டான்.
அதற்கு அந்த மூதாட்டி, கோப்பையின் கரையில் ஆறிய கஞ்சி இருக்கும் முதலில் அங்கிருந்து அருந்தத்தொடங்கினால் சற்று நேரத்தில் நடுவில் உள்ள கஞ்சி ஆறிவிடும், அதுபோல் எதிரிகளின் அரண்களை மெதுவாக உடைத்து எதிரி வலிமை குறைந்த பின்னர் மத்தியைத் தாக்க வேண்டும், இது தெரியாததால்தான் உனது மன்னன் தோல்வியைத் தழுவினான் என்றாள்.
இதைகேட்ட சிவாஜி தனது போர் உத்திகளை மாற்றினார் என்பதுதான் அந்தக்கதை!
இந்த நூல் வீரசிவாஜியின் வரலாறு கூறுகிறது! மும்பையில் வாங்கினேன்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.