விஞ்ஞான பைரவ தந்திரம்
பற்றி ஏற்கனவே சில பதிவுகள் சென்ற வருடங்களில் எழுதியிருந்தோம். எமது
காலக்கோட்டில் தேடிப்பார்க்கவும்!
இது விஞ்ஞான பைரவ தந்திரத்தின் உத்திகள் பற்றிய தொகுப்பு!
ஒருவன் பூரண விழிப்பு நிலை - பைரவத்துவம் - பெற 112 உத்திகளைப் பயன்படுத்த முடியும் என்று சிவன் சக்திக்கு உபதேசித்த உத்திகளின் தொகுப்பு!
தந்திரம் என்றால் உத்தி
- technique என்று அர்த்தம். இந்த 112 உத்திகளும்
கீழ்வருமாரு,
மூச்சுடன் தொடர்புடைய
உத்திகள் - 09
மந்திர சாதனையுடன்
தொடர்புடைய உத்திகள் - 11
மனதை இன்பமான நிலைக்கு
கொண்டு செல்வதால் (உடலுறவும், காமம் ஆகியவற்றின் மூலம்) பெறப்படும் விழிப்புணர்வு
பற்றிய உத்திகள் - 22
தாரணையால்
விழிப்புணர்வு பெறும் உத்திகள் - 12
உடலை அமைதிப்படுத்துவதால்
பெறும் உத்திகள் - 03
திராடகத்தால் பெறும்
உத்திகள் - 07
ஜோதியை தியானிப்பது -
10
புலன்களை
ஸ்தம்பிப்பதால் - 05
பரம்பொருளைப்
பற்றுவதால் - 12
தர்க்க மனதினைப்
பயன்படுத்தும் உத்திகள் - 11
உணர்வினைப்
பயன்படுத்தும் உத்திகள் - 07
சூன்யத்தினை
பயன்படுத்தும் உத்திகள் - 03
மொத்தம் = 112 உத்திகள்
இதற்கு மேல் கிருஷ்ணபக்ஷ இரவின் கருமையை பாவித்து விழிப்புணர்வு பெறும் உத்தி - 01 உம் குறிப்பிடப்படுகிறது.
விஞ்ஞான பைரவ தந்திரம் மனிதனது
விழிப்புணர்விற்கான அனைத்து வழிகளினதும் தொகுப்பு! அனைத்து மதங்கள், யோகங்கள்,
தந்திர மார்க்கங்கள் இந்த உத்திகளில் ஒவ்வொரு வடிவமாகவே இருக்கும்!
ஆர்வமுள்ளவர்கள் கீழே
விருப்பத்தைத் தெரிவியுங்கள்; எப்போதாவது திருவருள் கூடி இதை முழுமையான குழுவாக
கற்க முடியும் சந்தர்ப்பத்தில் இணைத்துக்கொள்கிறோம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.