இன்று யோகம் பயிலும் பலரும் ஸ்தூல உடலை செம்மைப்படுத்துவதிலேயே யோகப் பயிற்சியை நிறுத்திக் கொள்கிறார்கள்! ஆனால் இந்த ஸ்தூலத்திற்கு ஆதாரமான மனம், பிராணன் இவற்றைப் பற்றி ஆழமாகக் கற்பதில்லை!
பிராணாயாமம் என்றால் பிராணனை கட்டுப்படுத்துவது என்ற அர்த்தத்தினை உடைய மூச்சுப் பயிற்சியை மாத்திரம் பயிற்சிக்கிறார்கள்; ஆனால் பிராணாயாமத்தின் உயர் நிலை பிராணனை விரிவுபடுத்தி உயர் உணர்வுத் தளங்களை அடையும் இரகசியம், இது பற்றி எவரும் உரையாடுவதில்லை!
இது போல் மனம் என்பதை மேலோட்டமாகத் தான் உரையாடுகிறோம்! ஆனால் யோகதத்துவம் அதன் ஆழமான பகுதிகளையும், செயலையும் பற்றி உரையாடுகிறது!
அகத்தியர் வழி யோகம் மனதை ஆழமாகபுரிந்து எப்படி எமக்கு நண்பனாக்குவதன் மூலம் செம்மையடைவதைக் கூறுகிறது.
அகத்தில் ஈசன் ஒளிரும் மகாகுருவான அகத்தீசரை மூலகுருவாகக் கொண்டது சிருஷ்டியின் குருபரம்பரை!
இவையனைத்தையும் சிருஷ்டியின் இரண்டு அடிப்படைக் கற்கை நெறிகளான,
1) மானச யோக வித்யா : https://forms.gle/mZQQKFdgEMjPAyup6
2) அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் : https://forms.gle/U47pD8yYLFzPoof69
ஆகிய இரு கற்கைகளிலும் விரிவாகக் கற்க முடியும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.