இன்று யோகம் பழகவேண்டும் என்றவுடன் தமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடும் என்று பயந்துபோய் விடுகிறார்கள்! உலக இன்பம் கெட்டு விடும் சன்னியாசியாகி விடுவோம் என்று பயந்து ஓடுபவர்கள் அனேகர்! இப்படி இவர்கள் வெருள்வதற்கும் உண்மையான யோக சாதனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!
இந்த உண்மையை சித்தத்தில் பதியவைக்கவே காயத்ரி மந்திரத்துடன் ம்ருத்யுஞ்ஜெய மந்திரமும் கற்பிக்கப்படுகிறது. இந்த மந்திரத்தின் பொருள் வருமாறு;
ஓம்
யார் நல்ல சுகந்தம் நிறைந்த வாழ்வைப் புஷ்டியாக்கும், செம்மையாக்கி வளர்ச்சியைத் தரும் அந்த முக்கண்ணனை நாம் வணங்குகிறோம்!
அவன் வெள்ளரிப்பழம் எப்படி முற்றியது கொடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறதோ அப்படி விடுவித்து அமரத்துவத்தைத் தரட்டும்!
இதில் முக்கியமான வரி "வெள்ளரிப்பழம் எப்படி முற்றியது கொடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறதோ" என்பது! வெள்ளரிப்பழம் முற்றியதும் தனது கொடியிலிருந்து விடுபட்டுவிடும்! அதுவரை அது கொடியைப் பற்றிக் கொண்டு தன்னை வளர்த்துக் கொள்ளும்! அது போல் உலகில் இருக்கும் வரை எமக்கு கர்மத்தால் அமைந்த வாழ்க்கை, தொழில், மனைவி, பிள்ளைகள் இவற்றை நன்கு கவனித்துக் கொண்டு எமது உடலையும், மனதையும் நன்கு போசித்துக்கொண்டு, ஆன்மாவைப் போசிக்கும் சாதனையையும் செய்து கொண்டிருக்கும் சாதகனுக்கு ம்ருத்யுஞ்ஜெய தேவனான அந்த சிவபெருமான் வெள்ளரிப்பழம் எப்படி முற்றியது கொடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறதோ அப்படி பலனை வழங்குவார்!
அதுவரை பிஞ்சிலே வெம்பாமல், ஆன்மீகம் என்று வாழ்க்கையைக் குழப்பாமல் இன்பமாக வாழ வேண்டும்! மனதில் ஆன்மீகம் என்ற பேராசை வளர்ந்து வாழ்க்கையைக் கெடுக்கக் கூடாது! அது போல் எமக்கு மேல் ஒரு உண்மை இருக்கிறது என்பதை உணராமல் நாம் தான் என்று ஆணவம் கொள்ளவும் கூடாது!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.