சித்தர் யோக ஆசிரியர் யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்களின் ஆசியும் வீட்டில் வாசியோக பாடங்களும்

பேராசிரியர், முனைவர் யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்கள் சித்தர் வழியில் உயர்ந்த சாதனையான சிவயோகத்தில் இருந்து காயசித்தி, யோக சித்தி, வேதை சித்தி பெற்றவர். சித்தர் மருத்துவம், கற்பம், யோக சாதனை என்பவற்றை  விஞ்ஞான ரீதியாக விளக்கும் ஆற்றல் உள்ளவர். ஐயா விவசாய விஞ்ஞானத்தில் (வேளாண்மை) முனைவர் பட்டம் பெற்ற ஒய்வு பேராசிரியர்.

சித்தர்களின் வாசி யோகத்தினை தற்காலத்து மக்கள் விளங்கிக்கொள்ளும் படி யாரையும் பயமுறுத்தாமல், குழப்பாமல் எளிய பாடங்களாக எழுதி அனைவரும் பயன்படும்படி வெளியுட்டுள்ளார். தனது அனுபவத்துக்கு வராத எதையும் வெளிப்படையாக தனக்கு தெரியாது என்று கூறும் வெளிப்படையான மனமுடையவர். அதேபோல் தான் அறிந்த அனுபவித்த விடையத்தை அதீத கற்பனைகளை சேர்க்காமல் உறுதியுடன் உரைப்பவர்.

தன்னுடன் உரையாடும் அனைவருக்கும் “இறை அருள் பெறுக! தான் அவன் ஆகுக” என்ற சித்தர்களின் உயர்ந்த இலட்சியத்தை ஆசியாக கூறி அவர்கள் மனதில் உயர்ந்த ஆன்ம இலட்சியத்தை விதைப்பவர்!  

ஐயாவுடன் எனக்கு தொடர்பை ஏற்படுத்தி தந்தது அகத்தியர் ஞானம் முப்பது, பல்லாண்டுகளாக குருநாதர் ஆணையில் நாம் கற்று வரும் அகத்தியர் ஞானத்திற்கு ஐயா சுருக்க பொருள் கூறியிருக்கிறார். அதே நூலை நாம் இங்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலையில் ஒருமணிநேரம் கற்று வருகிறோம். தற்போது குருநாதர் அருளால் முழுமயான விரிவான சித்த வித்யா உரையினை எழுதி வருகிறோம். அதற்கு ஐயா மதிப்புரை தருவதாக ஆசி கூறியிருக்கிறார். 

ஐயாவுடன் சித்தர் தத்துவங்கள், விஞ்ஞானம் பற்றி உரையாடும்போதெல்லாம் எனது எழுத்துக்களையும், வலைத்தளத்தையும் பற்றி கூறுவதற்கு மனம் ஒப்புவதில்லை. பெரியவரான அவரது அறிவிற்கும் ஞானத்திற்கும் முன்னால் சிறியவனான எனது எழுத்துக்கள் எம்மாத்திரம்! இந்த நிலையில் ஐயா எனது வலைத்தளத்தை பார்த்தபின்னர் அவராக தெரிவித்த வாழ்த்துக்களும், ஆசிகளும் என்னை ஆனந்தத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது.

அவரது வாழ்த்தும் ஆசிகளும் வருமாறு;
“ஆன்மிக தகவல் , சித்தர்கள் பற்றிய செய்திகள் ஜோதிடம் , வைத்தியம் ஆகி அனைத்தும் குவித்து வைத்துள்ள பெரும் பொக்கிஷம் இந்த வலை பூ . அருமையான பதிவுகள் .  அறிய செய்திகள். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் . தங்களுக்கும் தங்களை சரந்தவர்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் . எல்ல வளமும் நலமும் கிடைக்க இறை அருள் புரிக . !!!
அன்பான ஆசியுடன் 
வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி 


ஐயாவின் வாசி யோக பாடங்களை இந்த தளத்தில் படிக்கலாம் ; http://www.siddharyogam.com/

யோக சாதனை, சித்தர் நூற்கள் படிப்பவர்களுக்கு பல அரிய அனுபவ உண்மைகளை விளக்கும் தளம்.

எமது வாசகர்கள் அனைவரும் வாசித்து பயன் பெறுக!

Comments

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு