ஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம் - 01

ஸ்ரீ கண்ணைய யோகியார் 1882ம் ஆண்டு வைகாசி மாத பௌர்ணமியில் பிறந்து, ஆறு வயதில் அகஸ்திய மகரிஷியால் ஆட்கொள்ளப்பட்டு பதினாறு வருடங்கள் பொதிகை, நீலகிரி போன்ற மலைகளில் அமைந்துள்ள சூக்ஷ்ம ஆசிரமத்தில் ஆன்ம, யோக, ஞான சாதனைகள் பயின்று ஆன்ம பரிணாமத்தினை பூர்த்தி செய்து பின்னர் தனது உலக பரிணாமத்தையும் பூர்த்தி செய்வதற்காகவும், ரிஷி பரம்பரை மாணவர்களுக்கு தற்காலத்திற்கு ஏற்றவகையில் யோக வித்தையினை பயிற்றுவிப்பதற்காகவும் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் ஆணையின் பேரில் பூவுலகில் எண்பது வருடங்கள் வாழ்ந்து, யோகமாணவர்களுக்கு பல்வேறு கலைகளை கற்பித்த உன்னத யோகி, தான் பல்லாண்டு காலம் வழி, நூறாண்டு வாழும் சாதனை என்பதனை கற்பித்ததற்கு சான்றாக நூற்று எட்டு ஆண்டுகள் வாழ்ந்து   1990ம் ஆண்டு கார்த்திகை பௌர்ணமியில் உடலை விட்டு இன்றும் சூக்ஷ்மமாக வேண்டியவர்களுக்கு யோக ஆன்மீக வித்தைகளை கற்பித்து வழிகாட்டி வருகிறார். 

யோகியாரின் மாணவர்களில் நீண்டகால மாணவர் இலங்கை, நுவரெலியா  ஸ்ரீ காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள். சுவாமிகள், 1957 அளவில் வேலை நிமித்தமாக திருச்சி சென்றபோது ஸ்ரீ ரங்கம் கோயிலில் வைத்து ஒரு முதியவரால் நீலகிரி மலைச்சாரலில் உள்ள ஆசிரமம் ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் அந்த முதியவரால் சென்னையில் அம்பத்தூரில் கண்ணைய யோகி என்பவர் இருக்கிறார், அவரே உனது குரு என்று அனுப்பி வைக்க அவரை சரண் புகுந்து அவர் உடல் நீக்கும் 33 வருடங்கள் வரை சீடனாக இருந்து, அவர் இட்ட ஆணைப்படி காயத்ரி மந்திரத்தை உன்னை தேடி வரும் மக்கள் அனைவருக்கும் உபதேசி என்ற வாக்கின் படி  அவர்காலம் வரை உபதேசித்து வந்தார். இன்றும் அவரது பணி ஸ்ரீ காயத்ரி பீடத்தினால் செவ்வனே நடத்தப்படுகிறது. 

ஸ்ரீ கண்ணைய யோகியாரின் சிறப்பியல்பே அவர் தான் கற்பித்த பாடங்களை தனது கையெழுத்த்தில் பாடங்களாக எழுதி கொடுப்பார். அந்த பாடங்கள் அவரின் மாணாக்கரான எனது குருநாதர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளிடமிருந்து கற்கும் பாக்கியத்தை எமக்கு தந்தார்.  

இதேபோல் கண்ணைய யோகியாரின் பாடங்களை ஆன்மீக படைப்புகளாக சென்னையில் வெளியிடும் பணியினை அவரது இன்னுமொரு நேரடி மாணவரான அருட்திரு. இராஜமோகன் ஐயா அவர்கள் ஆத்ம ஞான யோக சபை மூலம் செய்துவருகிறார். 

எமது வாசகர்களுக்கு நாம் எமது குருநாதரிடமிருந்து கற்ற இந்த உன்னத யோகியாரின் உபதேசங்களை, யோக விளக்கங்களை சுருக்கமாக ஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தமாக தரலாம் இன்று வசந்த நவராத்திரியிலிருந்து பதிவிடலாம் என்று எண்ணியுள்ளோம். 

Comments

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு