காயத்ரி சாதனை வழிகாட்டி


எமது தளத்தினை படித்து காயத்ரி ஜெபம் செய்பவர்களுக்கும், அதிலிருந்து உயர்ந்த சாதனை செய்து மன, பிராண, ஆன்ம சக்திகளை அதிகரித்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் இதனை எப்படி தொடங்குவது என்பதில் பல்வேறு மனத்தடங்கல்கள் இருக்கும். அவற்றில் இருந்து வெளியே வந்து தெய்வான்மீக பாதையில் எப்படி முன்னேறுவது என்பது பற்றி இந்த பதிவு படிமுறைகளாக வழிகாட்டும். மேலும் உங்களை நீங்கள் எந்த நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு எப்படி தயாற்படுத்திக்கொள்வதுன் என்பது பற்றி விளக்கத்தினையும் தரும்.
 1. மந்திர ஜெபம் என்பது மூடநம்பிக்கையில் அல்லது ஏதோவொரு நம்பிக்கையில் கண்ணை மூடிக்கொண்டு இயந்திர தனமாக உச்சரிப்பதில்லை. அது பிராணன் – மனம் – உடல் ஆகிய மூன்றையும் இணைத்து சக்தி பெறும் முறை.
 2. பிராணனை இணைக்க மூச்சினை மெதுவாக, ஆழமாக உள்ளிழுத்து வெளிவிட தெரிந்திருக்க வேண்டும். நிறுத்துவது அவசியமில்லை. நாடிசுத்தி தெரிந்தவர்களாக இருப்பின் குறைந்தது ஐந்து வட்டமாவது செய்துவிட்டு ஜெபத்தினை ஆரம்பிக்கவேண்டும்.
 3. மனதிற்கு காயத்ரி போன்ற மந்திரமானால் மந்திரத்தின் பொருளை கிரகித்து வைத்திருக்க வேண்டும். ஜெபத்தின் போது மனம் அலையும் வேளைகளில் மந்திரத்தின் பொருளை சிந்தித்து நிறுத்த வேண்டும்.
 4. உடல் வசதியாக இருக்கவேண்டும். ஜெபத்தின் போது முள்ளந்தண்டு, தலை நேராக இருக்கவேண்டும் என்பதே நிபந்தனை. அதற்காக உங்களால் முடியாத பத்மாசனம் போன்ற கடின ஆசனங்கள் கைவந்தபின்னரே ஜெபத்தினை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்து விடாதீர்கள். உங்களுக்கு வசதியாக பஞ்சு மெத்தையில் அமர்ந்து சுகாசனம் இட்டு செய்யலாம்.அல்லது முதுகினை நேராக வைத்து இருக்க கூடியவாறு நாற்காலியில் இருந்தும் செய்யலாம்.
 5. இப்படி மேலே கூறிய விடயங்களை ஒழுங்கு படுத்தி கொண்டு எவ்வளவு ஜெபம் செய்வது என்பதனை துணிந்துகொள்ள வேண்டும். அந்த எண்ணிக்கை உங்களின் நாளாந்த வாழ்க்கை நடவடிக்கைகளை செய்துகொண்டு நிம்மதியாக சாதனை செய்ய கூடிய அளவாக இருக்கும். ஆரம்பத்தில் 09 என்று தொடங்கி ஒருவாரத்தில்  18 ஆக அதிகரித்து மூன்றாவது வாரத்தில்  27 ஆக்கி நான்காவது வாரத்தில் 54 எண்ணிக்கை கொண்டு வரவேண்டும். ஐந்தாவது வாரத்தில் 108 ஜெபம் செய்யும் அளவிற்கு வந்தால் ஒரு சாதகன் என்ற நிலையினை அடைந்து விட்டீர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
 6. மேலேகூரியபடி செய்துகொண்டு வருப்ம்போது காயத்ரி சித்த சாதனையினையும் சேர்த்து செய்து வரவேண்டும்.
 7. இப்படி உங்களை தாயார்படுத்திய பினனர் லகு அனுஷ்டானம் எனும் ஒன்பது நாட்களில் 24000 ஜெபிக்கும் சாதனையும், பூரண அனுஷ்டானம் எனும் நாற்பது நாட்களில் 125,000 ஜெபிக்கும் சாதனையும் விருப்பமுள்ளவர்கள் முயற்சிக்கலாம். இத்தகைய அனுஷ்டானங்கள் ஒன்று இரண்டு முடித்தபின்னர் தினசரி 108 ஜெபம் செய்து வருவார்களே ஆனால் அவர்களுடைய மன, பிராண சக்திகள் பலப்பட்டு தமது வாழ்க்கை பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி பெறும் வலிமையினை பெறுவார்கள். 

Comments

 1. ஐயா,
  நன்றி
  வி.ரவீந்திரன்.

  ReplyDelete
 2. குருவிற்கு வணக்கம் நான் சிவ.வள்ளியப்பன் gs 123 தினசரி குரு நாமாவளி 9முறையும் காயத்திரி மந்திரம் 108 முறை மட்டுமே செய்து வருகிறேன் இது சரிதானா அய்யா

  நன்றி
  சிவ.வள்ளியப்பன்

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு