காயத்ரி மந்திர சாதனையும் ஆயுர்வேத வைத்திய சித்தியும்


ஆயுர்வேத வைத்தியர் ஒருவருக்கு நோயினை நிதானிக்கும் நுண்புத்தியும், சிகிச்சி, மருந்தினை முடிவு செய்யும் ஆற்றலும் அவசியம். இது வெறும் நூற்களை கற்பதாலோ பட்டங்களை பெறுவதாலோ வருவதில்லை. மனமும், பிராணனும் உடலில் எப்படி செயற்படுகிறது என்பதனை அறியும் ஆற்றல் இருக்க வேண்டும். இதனை தருவது காயத்ரி மந்திர சாதனை. இதற்கு சான்றாக இருப்பது மாதவ நிதானம்.
ஆயுர்வேதத்தில் இன்றும் நோயினை நிதானிப்பதற்கு மூல நூலாக இருப்பது மாதவ நிதானமாகும். இதனை எழுதியவர் மாதவாச்சாரியார் எனும் பிருந்தாவனத்தில் வசித்த ஞானி ஒருவராகும். இவர் இந்த நூலினை எழுதுவதற்கு முன்னர் பன்னிரண்டு வருடம் காயத்ரி உபாசனையினை செய்து வந்தார். ஆனால் காயத்ரி தேவியின் தரிசனத்தை பெறமுடியாமல் மனம் விரக்தியாகி ஒரு தாந்திரீகரின் ஆலோசனையின் பேரில் பைரவ உபாசனையினை தொடங்கினார். பைரவ உபாசனை தொடங்கி ஒருவருடத்திற்குள் பைரவரின் தரிசனத்தை பெற்றுவிட்டார். பைரவர் மாதவாச்சாரியாரின் முன்னால் தோன்றாமல் பின்புறமாக நின்றுகொண்டு அவரது விருப்பத்தினை கேட்கும்படி கூறினார். ஆச்சரியமடைந்த மாதவாச்சாரியார் தனக்கு முன்னால் வந்து தரிசனம் தரும்படி கூற, பைரவர் “காயத்ரி சக்தியால் ஒளி நிரம்பிய சாதகன் முன்னால் நான் நிற்க முடியாது” என்று பைரவர் கூற, ஆச்சரியமடைந்த மாதவாச்சாரியார் காயத்ரி சாதானையின் மகிமையினை கேட்க, பைரவர் காயத்ரி சாதனை சகல பாபங்களையும் சித்தத்தில் இருந்து அழித்து சாதகனுக்கு இறுதியில் இறை ஞானத்தை கொடுக்கும் என்று கூறி மீண்டும் காயத்ரி சாதனையினை தொடங்கும்படி கூறி மறைந்தார். இதன் படி மாதவாச்சாரியார் மீண்டும் தனது காயத்ரி சாதனையினை தோடங்கி அதன் பயனாக விழிப்படைந்த ஞானத்தின் மூலம் மாதவநிதானத்தை எழுதினார்.

ஆயுர்வேத சித்த வைத்தியர்கள் காயத்ரி சாதனையின் மூலம் என்ன பலனை பெறலாம் என்பதனை இந்த வரலாற்று உதாரணம் விளக்குகிறது.

காயத்ரி சாதனை செய்யும் வைத்தியர்கள் தமது நுண் புத்தி விழிப்படைந்து, நோயினை சரியாக நிதானித்து தீர்க்கும் வல்லமை பெறுவார்கள் என்பது அனுபவம்! 

Comments

  1. ஐயா,
    வாசித்தறிந்தேன்
    நன்றி
    வி.ரவீந்திரன்.

    ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு