இலங்கையில் உள்ள சித்தர் தலங்கள் - புஜண்டகிரி நாக நாத சித்தர்

குயில்வத்தை சிவாலயத்தில் உள்ள காக புஜண்டர் சிலை 
மூன்று நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் மூலம் இந்தியாவிலிருந்து ஒரு சாது வந்திருப்பதாகவும் அவர் இலங்கையில் நூறாண்டுகளுக்கு முன்னர் மலையக தோட்ட மக்களிடையே வாழ்ந்து தபஸ் புரிந்து பின்னர் சிவகங்கை மாவட்டம் வடவன் பட்டியில் சமாதியான நாகநாத சித்தரின் ஜீவ சமாதியை பராமரிப்பவர் என்றும் இலங்கயில் நாக நாத சித்தர் வாழ்ந்த இடங்களை ஈழத்து சித்தர்கள் என்ற ஆத்ம ஜோதி நா. முத்தையா ஐயா அவர்கள் எழுதிய நூலின் உதவியுடன் தனக்கு கிடைத்த சில காகபுஜண்ட மகரிஷியின் ஓலையுடன் புஜண்ட மகரிஷியின் சீடரும் இலங்கையில் வாழ்ந்து சித்தர்  தபம் செய்த இடங்களை பார்த்து தரிசித்து செல்வதற்காக வந்து செல்வதாகவும் கூறினார். மேலும் தான் என்னை சந்திக்க விரும்புவதாகவும் சனிக்கிழமை கொழும்பில் சந்திக்கலாம் என்றும் கூறினார். அவருடன் பேசும்போது நான் இலங்கையில் இன்னொரு திசையில் இருந்தேன். சந்திக்கும் வாய்ப்பு இல்லை, மேலும் வார இறுதியில் நான் கண்டிக்கு செல்வதால் சந்திக்கும் வாய்ப்பு இல்லை என்றும் கூறினேன். அதற்கு தான் வெள்ளிகிழமை மாலை தான் கண்டியில் நாகநாத சித்தர் தபஸ் புரிந்த ஒரு குகை இருப்பதாகவும் தான் அங்கு செல்வதாகவும் கண்டி வரும்போது தன்னை அங்கு சந்திக்கலாம் என்றும் கூறினார். அப்போதைய சூழல் பிரகாரம் செல்லுவதற்கான எந்த சாத்தியக்கூறும் இருக்கவில்லை. சரி குருவருள் முடிவு செய்யட்டும் என்றுவிட்டு வேலையில் மூழ்கிவிட்டேன். எதிர்பாராத விதமாக வெள்ளிக்கிழமை கொழும்பு வரவேண்டியதாகிவிட்டது. வேலை முடித்து கண்டி செல்ல எப்படியும் இரவு பத்துமணியாகும். ஆகவே சந்திப்பது சாத்தியமில்லை என்ற எண்ணத்தில் வேலையினை தொடங்க எதிர்பாரதவிதமாக இரண்டு உறவினர்கள் கொழும்பு வர அவர்களை கூட்டிக்கொண்டு மீண்டும் மாலை கண்டி செல்லவேண்டும் என்பதால் ஒருமணித்தியாலம் முன்னராக புறப்படவேண்டியதாகிவிட்டது. வாகன நெரிசல் எல்லாம் தாண்டி கண்டி வர இரவு எட்டு முப்பது ஆகிவிட்டது. அதேவேளை அந்த சாது இன்று மாலை சென்னை செல்வதால் நேற்றிரவு கண்டியிலிருந்து கொழும்பு செல்லவேண்டும் ஆகவே சந்திப்பது சாத்தியமில்லை என்ற நினைப்புடன் இருக்க அவரிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. தான் இன்னும் புறப்படவில்லை எனக்காக காத்திருப்பதாகவும், ஒருதடவை வந்து நாகநாத சித்தர் தபஸ் செய்த குகையினையும், கோயிலையும் தரிசித்து செல்லுமாறும் கேட்டார். சரி என்று முடிவெடுத்து விட்டு கண்டியில் இருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தமிழர்கள் செறிந்து வாழும் அம்பிட்டிய என்ற ஊரினை நோக்கி செல்ல ஆரம்பித்தோம். சரியா இருபது நிமிடங்களில் மலைப்பாங்கான தோட்டப்பகுதியை அடைந்துவிட்டோம். அவர்கள் வரும்படி கூறிய இடத்தை அடைந்தவுடன் அங்கு கோயிலை பராமரிக்கும் அன்பர் ஒருவருடன் சாது வரவேற்றார். அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு காரில் இன்னும் மலைஏற ஆரம்பித்தோம். இலங்கையின் வீதி அபிவிருத்தியின் பயனாக காபட் ரோட்டில் பயணித்து ஒரு இடத்தில் நின்றோம்.
ஒரு செங்குத்தான மலையில் சிறிது ஏறியவுடன் பெரிய கருங்கல் அந்தக்கல்லில் குண்டலினி விழித்து சகஸ்ராரத்தில் விரிந்த நிலையினை குறிக்கும் ஐந்து தலை நாகம் தலை மேல் விரிந்து நிற்க நாகநாத சித்தர் தபஸ் கோலத்தில் பத்மாசனத்தில் வீற்றிருக்கும் ரூபமும், அருகில் சித்தர்களில் தாயான வாலை சக்தியும் செதுக்கப்பட்டு மேலே “புஜண்டகிரினாதன் துணை 1920
என்று செதுக்கப்பட்டிருந்தது. அருகில் கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இவை நாகநாதரின் சீடாராக அந்த தோட்டத்தில் வசித்த அன்பர் ஒருவர் அவரது ஆசியின் பின்னர் சிற்பாச்சாரியாராக மாறி செதுக்கிய சிற்பங்கள் என்று கூறப்பட்டது. மேலே கல்லின் உச்சியில் ஏழடி உயரத்தில் சுப்பிரமணியர் சிலை செதுக்கப்பட்டிருந்தது. கோயிலை திறந்து சுவாமிகள் கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்தார்கள். தனியே தரிசனம்!

எல்லாம் முடிந்து வரும்போது மனதிற்குள் ஒரு பிரமிப்பு. இதேபோல் சிலவருடங்களுக்கு நாகநாத சித்தர் தபஸ் புரிந்த குகையான குயில்வத்தை சிவாலயத்திற்கு நண்பர் குமரகுரு அவர்களின் அழைப்பின் பேரில் சென்று கணபதி தர்ப்பணம், காயத்ரி பூஜை, யாகம் செய்து, பிள்ளைக்களுக்கு காயத்ரி மந்திரம் சொல்லிக்கொடுத்து அறநெறி பாடசாலையினை ஆரம்பித்துவிட்டு வந்தோம். அதே பாணியில் சில வருடங்கள் கழித்து நாகநாத சித்தரின் இன்னொரு இடத்திற்கு செல்லும் சந்தர்ப்பம், எனது விருப்பினை மீறி, எதுவித திட்டங்களும் இன்றி நடைபெறுகிறது.


நாகநாத சித்தர் ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷியின் சித்தர் குழாத்தை சேர்ந்தவர். இற்றைக்கு நூறுவருடங்களுக்கு முன்னர் இலங்கை வந்து மலையகத்தின் ஹட்டனில் உள்ள குயில்வத்தை, கண்டியில் அம்பிட்டிய என்ற ஊர், வன்னியில் உள்ள மாங்குளம் ஆகிய பிரதேசங்களில் மக்களுடன் மக்களாக வாழ்ந்து மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக தமது தபஸ் சக்தியை தெய்வ ரூபங்களாக பதிப்பித்து வைத்துள்ளார். இந்த கோயில்கள் கணபதி, சிவகாமசுந்தரி எனப்படும் வாலை, சுப்பிரமணியர் ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இறுதியாக மீண்டும் இந்தியா சென்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடவன் பட்டி என்ற ஊரில் ஜீவசமாதியானார். 

நேரம் கிடைக்கும்போது இன்னும் எமக்கு தெரிந்த இலங்கையில் உள்ள சித்தர் தலங்களை பற்றி எழுதலாம் என்று எண்ணி உள்ளோம். குருவருள் எப்படி முடிவு செய்கிறது என்று பார்ப்போம்!

Comments

 1. ஆன் மிக தகவல் , சித்தர்கள் பற்றிய செய்திகள் ஜோதிடம் , வைத்தியம் ஆகி அனைத்தும் குவித்து வைத்துள்ள பெரும் பொக்கிஷம் இந்த வலை பூ . அருமையான பதிவுகள் . . அறிய செய்திகள். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் . தங்களுக்கும் தங்களை சரந்தவர்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் . எல்ல வளமும் நலமும் கிடைக்க இறை அருள் புரிக . !!!
  அன்பான ஆசியுடன்
  வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி

  ReplyDelete
 2. அன்பின் ஐயா,

  பணிவான வணக்கங்கள்!

  தங்களைப்போன்ற யோகிகளது வரவும் ஆசிகளும் பெறுவது எம் அனைவரதும் பாக்கியம்,

  அன்புடன்

  ஸ்ரீ ஸக்தி சுமனன்  ReplyDelete
 3. ஆஹா....அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 4. Kindly give the address of Naganatha Sidhar jeeva samadhi at Vadavanpatti, Sivagangai, Tamilnadu. thanks a god.

  Mohanraj.M
  Madurai.

  ReplyDelete
 5. ஐயா நான் கண்டியில் இருக்கிறேன், தங்களை சந்திப்பது எப்படி ?

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு