வசந்த நவராத்ரி லகு காயத்ரி அனுஷ்டான பூர்த்தி யக்ஜம் - 29 March 2015

வசந்த நவராத்ரியில் லகு அனுஷ்டானம் எனக்கூறப்படும் ஒன்பது நாட்களில் மந்திர அட்சர ஆயிரம் ஜெபிக்கும் சாதனையினை காயத்ரி மந்திரத்திற்கு செய்யலாம் என்று கூறியிருந்தோம். 

சில அன்பர்கள் முயற்சித்திருந்தாலும் குறித்த எண்ணிக்கையினை பூர்த்தி செய்ய முடியாமல் போய்விட்டது என்று கவலைப்பட்டார்கள். கவலைப்படத்தேவையில்லை. அன்னை பராசக்தி படிப்படியாக அதற்குரிய வல்லமையினை தருவாள். மேலும் செய்த அளவிற்கு பலன் உண்டு. 

யக்ஜம் என்ற சொல்லிற்கு மூன்று பொருள் உண்டு. முதலாவது தேவ வழிபாடு, இரண்டாவது தர்மம் மூன்றாவது கூட்டுறவு. என்பது. எமக்கு இலகுவாக கிடைக்கும் பசு நெய், காய்ந்த மரசுள்ளிகளை அக்னியில் போட்டு குறித்த மந்திரங்களை ஜெபித்து  அவற்றின் பலன்களை எமக்கு மட்டும் அல்லாமல் இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆழமாக எண்ணி எண்ண சக்தியில் தெய்வ சக்தியை கலக்கும் ஒரு செயல் முறை. இந்த செயலில் எண்ணமும், செயலும் தூய்மை பெறுகிறது. 

ஆக யக்ஜம் என்பது அனைவரும் கூட்டுறவாக செய்யும் செய்முறை. சமூக ஒருமைப்பாட்டிற்கும், ஒருங்கிணைவிற்கும், ஒற்றுமைக்கான குறியீடு. காயத்ரி என்பது புத்தியினை தூய்மைப்படுத்தி அனைவரையும் ஒருங்கிணைக்கும் பிரபஞ்ச சக்தி.


பூர்ணாகுதி 

இந்த வசந்த நவராத்ரி எமது நண்பர்கள், இந்த தளத்தை வாசிக்கும் அனைத்து அன்பர்கள், எம்மிடம் குணம் வேண்டி வைத்தியம் பார்க்க வருபவர்கள், எமது நாட்டு மக்கள், உலக மக்கள் அனைவரும் நலம் பெறவேண்டும் என்ற எண்ணி தேவியிடம்;
அருளொடு செல்வம் ஞானம் ஆற்றலும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா, ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தி அன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா !

என பிரார்த்தித்து பூர்ணாகுதி தரப்பட்டது.  இந்த யக்ஜத்தின் பலன் இதை படிக்கும்  உங்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதனை பெறுவதற்கு கீழ்வரும்  படிமுறைகளை பின்பற்றவும். 

நீங்கள் பூஜை அறையில் அமரும் நேரத்தில் எமது வலைத்தளத்தில் தரப்பட்டுள்ள குரு நாமங்களை கூறி, பின்னர் ஒன்பது தடவை காயத்ரி மந்திரம் ஜெபித்து. கையில் சிறிதளவு விபூதி எடுத்து வைத்துக்கொண்டு பலஸ்மரணம் எனப்படும் சித்தத்தில் உள்ள  தன் பாபங்கள் அழிந்து, புண்ணியம் கிடைத்ததாக நினைத்துக் கீழே உள்ள சுலோகத்தைச் சொல்லவும்:
ஒழிந்தன துன்பமெல்லாம் ஓடின பகைமையெல்லாம்,கழிந்தன வினைகளெல்லாம், காந்ந்தன பாபமெல்லாம்!இன்பமும் சுகமும் பேறும் இருந்திடும் பாக்கியங்கள்,நன்மையும் செய்வம் கீர்த்தி, நல்கிடும் அருளும் ஞானம்நாடிய பொருள் கைகூடும்நலிவெலா மகன்று ஓடும்தேடிய தவத்தின் சித்தி தெரிந்திடும் வாழ்க்கை மீதில்.ஓம் சாந்திஸ் சாந்திஸ் சாந்தி.
சொல்லி "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க" என்ற எண்ணத்துடன் நெற்றியில் இட்டு உங்கள் குடும்பத்தவர்கள் அனைவரும் நலம் பெறவேண்டும், சூழ உள்ளவர்கள், நாடு, உலகம் நலம் பெறவேண்டும் என எண்ணி விபூதியை தரித்துக்கொள்ளவும். 

மன ஆகாயத்தில் உங்களுக்காக பகிர்ந்தளிக்கப்பட்ட சக்தி உங்களை வந்தடைந்து எல்லா நன்மைகளையும் தரும்!

Comments

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு