குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Wednesday, August 06, 2014

தீட்சை என்றால் என்ன? - தீக்ஷா விஞ்ஞானம்

எனது குருநாதரின் பாடக்குரிப்புகளில் இருந்து,

ஒருவன் எளியவன் திறமைசாலி ஆனால் நல்ல முறையில் தொழில் செய்து முன்னேற அறிவும், முயற்சியும் உண்டு ஆனால் பணம் இல்லை. இந்த நிலையில் அவனிற்கு யாராவது பணம் கொடுத்தால் அவன் அதனை வைத்து முன்னேறிக்கொள்வான்.

ஒருவனுக்கு சமஸ்க்ருதம் கற்க விருப்பம் ஆர்வம் உண்டு. யாராவது அவனுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டால் அவன் தனது முயற்சியில் அதனை கற்று தேறிவிடுவான்.

உடல் நோயுள்ளவனுக்கு நல்ல மருத்துவனின் உதவி தேவை.

மனிதன் தனது உடலையும் மனதையும் வளர்த்திட பிறரது உதவியும் பொருளும் வேண்டித்தான் இந்த உலக வாழ்க்கை அமைத்துள்ளது.

பணம் வேண்டியவனுக்கு பணத்தை பற்றிய விளக்கத்தை மட்டும் கொடுத்தால் போதாது, பணத்தையும் கொடுத்து அதனை பெருகும் வழியினையும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

நோயாளிக்கு மருந்தினைப்பற்றி வர்ணிப்பதனால் பலன் எதுவும் இல்லை, மருந்தினை தரவேண்டும்.

கடவுளின் அருளைபெறல், சித்தி செய்யும் ஆற்றலை பெறல், பிரபஞ்ச ஆற்றலை தெரிந்து கொள்ளல், பயன்படுத்தல் என்பவற்றிற்கு சாதாரண உடல் மன அறிவு நிலைகள் போதுமானவை அல்ல. மனிதன் தனது ஐம்பொறிகளால் தொடர்பு கொள்ளும் உலகைப்பற்றிய அறிவை தானாகவே அறிந்து கொள்ளலாம், அதற்கான அமைப்பு பிறப்பிலேயே மனித உடல், மனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. சூஷ்ம விஷயங்களை காண, அனுபவிக்க வேண்டுமானால் அதனை அனுபவிப்பதற்கான சூஷ்ம கருவிகள் மனிதனில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவை செயலற்று இயக்கமற்று கிடக்கின்றன. இவைகளை செயற்படச் செய்தால்தான் மனிதன் சூஷ்ம ஞானத்தினை, அனுபவத்தினை பெறமுடியும். அவைகளை செயல் நிலைக்கு கொண்டுவர அவைகளில் புதுவகை சக்தியினை புகுந்த வேண்டும். ஆனால் அந்த சக்தி மனிதனின் சாதாரண உபயோகத்தில் இருக்கும் எந்த சக்தியும் இல்லை. மனிதனின் சாதாரண உபயோகத்தில் இருக்கும் சக்திகள் அனைத்தும் பௌதீக சக்திகள். இவற்றால் உபயோகம் இல்லை, சூஷ்ம கருவிகளை செயற்படுத்த சூக்ஷ்ம சக்திகள் தேவை, இந்த சக்தியை இருப்பவரிடமிருந்து ஓரளவு பெற்றுவிட்டால் பின்பு மனிதன் தனது முயற்சியால் மேலும் தேவையான அளவு அவனவன் பரிபக்குவத்திற்கு ஏற்ப வளர்த்துக்கொள்ள முடியும்.

இப்படியான சூக்ஷ்ம சக்திகள் இருப்பவரிடத்திலிருந்து இத்தகைய சூக்ஷ்ம சக்தியினை பெறும் முறையினைதான் தீட்சை – தீக்ஷை என்கிறோம். இதுவே இந்த வார்த்தைக்கான உண்மைப்பொருளும், பாரம்பரியமான பொருளும் ஆகும்.

இடைக்காலத்தில் தெய்வம், கடவுள், பிரபஞ்சம் முதலான விஷயங்களைத் தெரிந்துகொள்வதே மனிதனுக்கு போதுமானது என்ற எண்ணம் வலுப்பட்ட காலத்தில் ஒரு மந்திரத்தை, ஒரு உபாசனை முறையினை கற்பிப்பதே தீக்ஷை எனக் கொள்ளப்பட்டது. அதாவது உண்மையான சக்தி பரிமாற்றம் இல்லாமல் வெறும் வெளிச்சடங்கினை, மந்திரத்தினை உபதேசிப்பதை தீட்சை என கூறத்தொடங்கினர். இப்படி தவறான தீஷைகள் மலிந்ததால் உண்மை தீக்ஷைகளை தேடி அலைபவர்கள் குறைந்து விட்டனர். தெய்வ சாதனைகள் எல்லாம் வாய் அளவில், வெளிச்சடங்கு அளவில் நின்று விட்டன. சாதனை அளவிற்கு பிரச்சாரப்படுத்த படவில்லை.

பணம் வேண்டு நிற்பவனுக்கு உதவி தேவைதான் ஆனால் கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு தானும் வளர்ந்து மற்றவர்களுக்கும் உதவக்கூடிய பண்பு உள்ளவனாக முன்னேறும் ஆற்றல், அறிவு உள்ளவனாக இருக்கவேண்டும். இல்லாவிடின் அவ்வாறானவனுக்கு உதவுவதால் யாருக்கும் பயன் இல்லை. அதுபோல் தெய்வ சாதனையில் முன்னேற வேண்டும் என்று ஆசை இருப்பவனுக்கு மட்டும் தீக்ஷை தரப்படுவதில்லை. தீக்ஷை மூலமாக தரப்படும் சிறு அளவு சக்தியினை வளர்த்து சாதனையில் முன்னேறக்கூடியவர்களுக்கே தீக்ஷை பயனுடைத்ததாக இருக்கும். இதனால் ஆசைப்படும் அனைவருக்கும் தீக்ஷை தரப்படுவதில்லை. பக்குவம் உடையவர்களுக்கு மட்டுமே தர்ப்படுகிறது.

தீக்ஷை என்பது சூஷ்ம சக்தியினை பெறுவது எனக்கண்டோம், அதனால் அதனை பெறுபவனுக்கு அதனை ஏற்றுக்கொள்ளும் பண்பு இருக்க வேண்டும் அல்லவா? இது இல்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் சூக்ஷ்ம சக்தி சிதறிப்போகும். அவர்களில் பற்றி நிற்காது.

தீக்ஷையினை பெறுவதற்கான பண்பு மனதினை எகாக்கிரப்படுத்தி, தானே நினைப்பதை விட்டு தன் மனதில் புகும் விஷயங்களை கிரகிக்கும் பண்புதான். இப்பண்பு பல வழிகளில் உண்டாகலாம். முறையான உண்மை பக்தி உள்ளவர்களுக்கு இந்த பண்பு இருக்கும். முறையறிந்து உபாசனாதிகளை செய்து வருபவர்களுக்கு அவ்வுபாசனை முறைகளில் இருக்கும் தியானம், மானச பிரார்த்தனை ஆகிய முறைகளால் இந்த பண்பு வளர்ந்திருக்கும் ஆதாலால் அவர்கள் இலகுவில் தீக்ஷை பெறும் தகுதியினை பெறுவார். முறையான யோக சாதனை பயில்பவர்களுக்கு ஏகாக்கிர (தாரணை) தியான பயிற்சியால் இந்த பண்பு வளர்ந்திருக்கும்.  

சாதாரணமான ஏகாக்ர நிலையினை அடைந்தால் மனதிற்கு வரும் கிரகிக்கும் பண்பினால் தீக்ஷையினால் அளிக்கப்படும் சக்தியினை கவர்ந்து மனம் பலப்பட “சுய தீக்ஷை” என்ற சடங்கு மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இந்த சடங்கில் ஒளிநிலையில் உள்ளவர்களின் ஒளி உடலில் இருந்து சக்தியினை கவர்ந்து தமது மனம், பிராணன், அறிவு ஆகியவற்றை பலப்படுத்திக்கொள்ளும் பண்பினை பெறுகின்றனர். ஆனால் நியமம் தவறாமல் காயத்ரி ஜெபம், உபாசனைகள் முதலியவற்றை மேற்கொண்டு இருப்பவர் களுக்கு இவை தேவையில்லை. அவர்களது மனம் அதிலேயே பண்பட்டிருக்கும் ஆதலால் இலகுவில் கிரகிக்கும் ஆற்றலை பெறுவார்.

இப்படியான சக்தி பரிமாறும் வகைகளை கொண்டு தீக்ஷைகளை மந்திரம் மூலம் சக்தியை விழிப்படைய வைக்க மந்திர தீக்ஷை, பிராணனில் சக்தியை விழிப்படைய வைக்க பிராண தீக்ஷை, மனச்சக்தியினை விழிப்படைய வைக்க மானச தீக்ஷை, ஞான தீக்ஷை, ஆன்ம தீக்ஷை, பிரம்ம தீக்ஷை என பலவகைப்படும்.

தீக்ஷை என்பது சூக்ஷ்ம சக்தி பரிமாற்றம்!


4 comments:

 1. அவ்வாறு பக்குவமில்லாதவர்களுக்கு தரப்படும் தீக்ஷையினால் தீக்ஷை தருபவருக்கு ஏதேனும் சூக்ஷும சக்தி இழப்பு ஏற்படுமா?
  அல்லது தீக்ஷை கொடுக்கக்கூடிய உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவர் அவரது சூக்ஷும சக்தியினால் தீக்ஷை பெறுபவரின் ஆன்மிக நிலையினை உணர முடியுமா?
  ஆம் எனில் இன்று அனைவருக்கும் தீக்ஷை வழங்கும் நபர்களை/நிறுவனங்களைப் பற்றி என்ன நினைக்கலாம்?
  தீக்ஷை பெற்ற பிறகு சாதகன் சாதனை செய்யாமல் போனால் தீக்ஷை வேலை செய்யுமா?

  தயவு கூர்ந்து விளக்குங்கள் ஐயா

  ReplyDelete
 2. அன்பின் சேர்ம ராஜ்,

  உங்கள் முதலாவது கேள்வி: //அவ்வாறு பக்குவமில்லாதவர்களுக்கு தரப்படும் தீக்ஷையினால் தீக்ஷை தருபவருக்கு ஏதேனும் சூக்ஷும சக்தி இழப்பு ஏற்படுமா?//

  ஆம், ஏற்படும், ஆனால் தருபவறது நிலையினை பொறுத்து! உதாரணமாக சாதாரணமாக மாதம் பத்தாயிரம் உழைப்பவரிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினால் அவருக்கு அது பெரும் பணம், ஆனால் மாதம் பத்து லட்சம் உழைப்பவரிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினால் அது அவரிற்கு இழப்பு இல்லை! அடுத்த மாதத்திற்குள் அவர் அதனை அதனை ஈட்டிக்கொள்வார்

  இரண்டாவது: அல்லது தீக்ஷை கொடுக்கக்கூடிய உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவர் அவரது சூக்ஷும சக்தியினால் தீக்ஷை பெறுபவரின் ஆன்மிக நிலையினை உணர முடியுமா?

  ஆம் சூஷ்ம புலன்கள் விழிப்படைந்த ஒருவரால் உணரமுடியும்.

  அனைவருக்கும் தீக்ஷை தருபவர்கள் நான் முதலாவது பதிலில் கூறியபடி வற்றாத மூலசக்தியுடன் தொடர்புடையவராக (பிரம்மா சாக்ஷாத்கார நிலை அடைந்தவராக) இருந்தால் யாருக்கும் பிரச்சனையில்லை.

  தீக்ஷையில் பல நிலைகள் உள்ளன, தீட்சைகள் பெற்றபின் சாதனை செய்யாமல் விட்டால் இல்லாமல் போவதில்லை, களிம்பு படிந்ததுபோல் மூடப்பட்டுவிடும், கர்மத்தின் அளவு பொறுத்து அதன் சக்தி இருக்கும்.

  ReplyDelete
 3. அப்படியானால் முதல் சித்தர் அகத்தியருக்கு தீட்சை வழங்கியது யார்?

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

முடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making

முடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...