மந்திர விஞ்ஞானம்


ஒருவன் “ராமா” என்று பலத்து கத்தினால் அவனை சுற்றிலும் குறித்த தூரத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் கேட்கிறது. எப்படி கேட்க முடிகிறது. கத்தினவனிடத்திலிருந்து கேட்டவர்கள் வரை சப்தம் சென்றிருக்க வேண்டும். காற்றின் வழியாக சப்தம் பரவுகின்றன. இங்கு காற்று என்பது வீசும் காற்றுகள் அல்ல. வாயு மண்டலம் என்று பொருள். நிலையான வாயு மண்டலத்திநூடாகவும் சப்தம் பயணிக்கும்.

இதுபோல் சப்தத்திற்கு வடிவமுண்டு, சப்தத்தினை குறித்த அலைவேகத்தில் அலைக்கழிக்க வைக்கும் போது குறித்த உருவங்களை உண்டு பண்ணும் என்பது தற்போது கணனிகளின் உதவியுடன் புரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்,

அதுபோல் சப்தத்திற்கு குறித்த நிறத்தினை உண்டும் பண்ணும் ஆற்றலும் உண்டு.

ஒருவரை மடையா என்று ஏசினால் அவரிற்கு கோபம் வரும், அதுபோல் சப்தத்தினால் உணர்சிகளை தூண்ட முடியும்.

சப்தங்களை வாயினாலோ, மனதினாலோ சொல்லும்போது, நினைக்கும் போது உடலில் சில மாறுதல்கள் ஏற்படும். இதனை பஞ்சபூத பீஜ மந்திரங்களினால் பரிசோதித்து பார்க்கலாம்.

ரம் என்பது அக்னி பீஜம், இதனை ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து “ரம்,ரம்” என்று தொடர்ச்சியாக ஆயிரத்தெட்டு தடவை வாய்விட்டு சொல்லுங்கள் உடலில் மெதுவாக சூடு பரவுவதை காணலாம். மனதில் சலனமில்லாமல் சொல்லத்தொடங்க சில நிமிடங்களில் அதிக சூடு உருவாகுவதை காணலாம்.

இதற்கு மாறாக “ஸம்” என்ற அப்பு – நீர் பீஜத்தினை கூறினால் உடலில் குளிர்ச்சி தன்மை உண்டாகும். இதுபோல் ப்ருதுவி பீஜம் ஜெபித்தால் இரத்தோட்டம் மந்தப்படும், வாயு பீஜம் ஜெபித்தால் நாடித்துடிப்பு  அதிகரிக்கும்.

இப்படி உடலில் ஏற்படும் மாறுதல்கள் உடலுடன் நிற்பதில்லை. உடலைச் சுற்றி உள்ள வாயு மண்டலத்தினையும் மாற்றுகிறது. உடலில் சூடு பரவும் போது உடலைச் சுற்றி உள்ள காற்று மண்டலத்திலும் கூடு பரவுவது போல் மனதில் மந்திரங்களால் உருவாக்கப்படும்  சக்தி சுற்றி உள்ள ஆகாயப்பரப்பில் உள்ள மன ஆகாய வெளியில் மாறுதலை செய்யும் என்பதனை புரிந்து கொள்ளலாம்.

மனித உடலிலும், மனதிலும் உள்ள சக்திகள் எல்லாம் வெளியிலிருந்து பெறப்பட்டவையே, வெளியே சூரியன் இல்லாவிட்டால் உடலில் பிராணன் இருக்காது, அதனாலேயே அதிக பிராணன் உள்ள பகலில் வேலை செய்து பிராண இழப்பினை ஈடு செய்ய இரவில் உறங்குகிறோம். அதுபோல் சந்திரன் இல்லாவிடில் மூளையில் திரவ தன்மை இருக்காது. பிண்டத்தில் உள்ளவை எல்லாம் அண்டத்தில் இருந்து பெறப்படுபவையே.

மந்திரம் என்பது குறித்த ஒரு சக்தியை அதிகமாக கவரும் ஆற்றலுடைய சொற்களின் கோர்வையே, குறித்த அளவு ஒரு மந்திரத்தை ஜெபிக்கும் போது அதற்குரிய மாறுதல் ஜெபசாதகரின் உடல், மனம் சுற்றியுள்ள ஆகாயத்தில் பிரதிபலித்து அதிக சக்தியை கவர்கின்றது. தெய்வ ஆகர்ஷண மந்திரங்கள் குறித்த நிற, வடிவங்களை ஆகர்ஷிக்கும் வகையில் மகான்களால் ஆக்கப்படுள்ளது. இவைகளின் ஜெபத்தால் அக்குறித்த தெய்வ உருவம் சூக்ஷ்மத்தில் இருந்து ஸ்தூலதிற்கு உருவாகிறது. இதற்கு மிகுந்த மனக்குவிப்பு தேவை. இந்த மனக்குவிப்பு அதிகமாகும் போது சாதகன் தனது இஷ்ட தெய்வத்தினை பௌதிக கண்களால் காண்கிறான்.

இதுபோல் காரிய சித்திக்கான மந்திரங்களை ஜெபிக்கும் போது உண்டாகும் மந்திர அலைகள் மன ஆகாயத்தில் பரவி காரிய சித்திக்கான சூழ்நிலைகளை உருவாக்கி வெற்றியடையச் செய்கிறது.

இவையே மந்திரங்கள் எப்படி செயற்படுகின்றன என்பதற்கான விளக்கங்கள் ஆகும்.

ஜெப முறை
மந்திரங்களை வாயால் உச்சரித்தே பலன் காணவேண்டுமானால் அதற்கு பலகாலம் வேண்டும். சிலசமயம் அவ்வப்போது ஜெபித்த மந்திரங்களின் பிரபாவம் மற்றொரு ஜெபத்தால் கலைந்து போகலாம். இப்படியானால் எத்தனை காலம் ஜெபித்தாலும் பலன் பெற முடியாது. அதனால் மந்திரங்களின் பலன்களை அடைய வேண்டுமானால் வாய் உச்சரிப்புடன் மனதிலும் சலனமில்லாமல் உச்சரிக்க பழக வேண்டும். மனதில் சலனமில்லாமல் உச்சரிக்க தெரிந்தவர்கள் வாயினால் உச்சரிக்காமலே மனதினால் உச்சரித்து விரைவில் பலன் காணலாம். தெய்வ காட்சிகளை காணும் விருப்பத்திற்கான மந்திரமானால் வாயில் உச்சரிக்கும் அதே வேளை மனதில் அதன் அர்த்தத்தினை பாவித்து வரவேண்டும்.

மந்திர தீக்ஷை
பலவித வர்ணங்கள் தாறுமாறாக தீட்டி இருக்கும் துணியில் சுத்தமானதொரு சித்திரத்தினை வரைய முடியாது. இதற்கு முதலில் பழைய வர்ணங்களை அகற்ற வேண்டும். அது போல மந்திர சக்திகளால் உருவாகும் புதிய வகை சக்தி அலைகளை தாங்கி கொள்ள மனதில், உடலில் பக்குவம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதவனுக்கு நன்மைக்கு பதில் தீமையும் கிடைக்கலாம். அப்படி விரும்புபவர்கள் தகுந்த ஒருவரிடமிருந்து அச்சக்தியினை பெற்றுகொண்டால் பின் பயமின்றி ஜெபித்து சித்தி பெறலாம். மந்திரத்தினை ஜெபிக்கும் போது திரண்டு வரும் சக்தியினை தாங்கும் ஆற்றலைத் தகுந்த ஒருவரிடமிருந்து பெறுவதுதான் மந்திர தீக்ஷை.

மந்திர தேர்வு

ஏதோ ஒரு பலனை நாடி ஏதோ ஓரு மந்திரத்தை ஜெபித்தால் பலன் பெற முடியாது. குறித்த பலனை தரக்கூடிய மந்திரங்களை அறிந்தே ஜெபிக்க வேண்டும். இப்படிச் செய்யாததால்தான் பலர் பலகாலம் ஜெபித்தும் பலன் பெறமுடியாது போயினர். 

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு