தெய்வ சாதனையில் தத்துவங்களை புரிதலின் அவசியம்

சித்தர்பாடல்கள் படிப்போர், யோக சாதனை புரிபவர்கள், குண்டலினி சாதனை புரிபவகள், உபாசனை செய்பவர்களுக்கு, வேதாந்தம் கற்பவர்களுக்கு மிக அவசியமான ஒரு புரிதல் தத்துவங்களை விளங்கி கொள்ளுதல். பொதுவாக இந்திய தத்துவ மரபில் தத்துவங்களின் எண்ணிக்கை இருபத்தி நான்கில் தோடங்கி சித்தர்பாடல்கள் தொண்ணூற்று ஆறாக முடிகின்றது. இன்று சித்தர் மார்க்கம், ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யோகசாதனை பயின்ற அனைவரும் இவற்றை விளங்கி பிரயோகிப்பதில்லை. விஞ்ஞானம் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று கற்பிக்கப்பட்ட மனதினை உடைய செயற்கை சமூகம் இயற்கையின் தத்துவங்களை விளங்கும் ஆற்றலை இழந்து விட்டது. ஆகவே எமது ரிஷிகளின் மரபில் நிற்க விரும்புபவர்கள் அவர்களது தன்னறிவால் உணர்ந்த ஞானத்தின் அடிப்படைகளை புரியாமல் முயற்சிப்பது வீண் முயற்சியே,

தத்துவம் என்பது படைப்பின் அடிப்படை அலகுகள். இதன் குறைவு, இணைவு, கூடுதலால் இந்த பௌதீக உலகம், மனித உடலும் படைக்கப்படுகிறது. இதன் அளவு வேற்றுமையினால் பல்வேறு வேற்றுமைகளில் பொருட்கள் உண்டாகின்றன.

உபநிடதத்தின் மகாவாக்கியங்களில் ஒன்றான “தத்துவமசி” எனும் வாக்கியம் இதன் பொருளினை நன்கு விளக்கும். இதன் பொருள் “அதுவே நான்” என்பதாகும். அதாவது நான் படைக்கப்பட்ட போருளினாலேயே இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டுள்ள மூலப்பொருட்கள் எல்லாம் படைக்கப்பட்டுள்ளது என்பதனை அறியும் ஞானமே தத்துவம். தத்துவமஸி என்பது இறுதியான நிலை, அதனை அடைவதற்குரிய வரைபடத்தை காட்டுவது தத்துவம். அதாவது “அதுவே நான்” என்பதை அடையும் பாதையில் உள்ள இடைநிலைகளை வரைபு படுத்தி தந்துள்ளார்கள். இது சாங்கிய தத்துவத்தில் 24 நிலைகளாக விளக்கப்பட்டுள்ளது, சாக்த – சைவ – தாந்திரீக தத்துவத்தில் 36 ஆக விளக்கப்பட்டுள்ளது, சித்தர் நூற்களில் 96 ஆக கூறப்பட்டுள்ளது.

ஏன் எண்ணிக்கைகளில் வேற்றுமை காணப்படுகிறது என்றால் ஒவ்வொன்றும் திருத்தப்பட்ட மேலதிக புரிதலாக கொள்ளலாம், காலத்தால் முந்திய சாங்கிய தத்துவம் இருபத்தி நான்கில் இருந்து மேலதிக புரிதலுடன் 36 சாக்த –சைவ – தாந்திரீக தத்துவங்களும், அதிலிருந்து 96 சித்தர் தத்துவங்களும் பெறப்பட்டுள்ளது. இது ஆய்வினூடே பெறப்பட்ட புதுப்புரிதல்கள் என்பதனை புரிந்து கொள்ளவேண்டும்.

வேறொரு சந்தர்ப்பத்தில் இதுபற்றி விரிவாக பார்ப்போம்! 

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு