வித்யா தான திட்டம் - எளிய ஸ்ரீ வித்யா சாதனை வழிகாட்டி - ஸ்ரீ யந்திர சாதனை மின்னூல்


எளிய ஸ்ரீ வித்யா சாதனை பயிற்சி நூலினை பெற விண்ணப்பியுங்கள் : இங்கே
*************************************************************************************************************************

அன்புள்ள சாதகரே, 

நீங்கள் எளிய ஸ்ரீ வித்யா சாதனை வழிகாட்டி - ஸ்ரீ யந்திர சாதனை நூலினை பெறுவதற்காக விண்ணப்பித்து உள்ளவராக இருந்தால் நீங்கள் தெய்வ சாதனையினால் இறைசக்தியினை பெற விருப்பம் உள்ள சாதகர் என நம்புகிறோம். நீங்கள் அத்தகையவராக இருந்தால் இந்த சிறு நூல் உங்களுக்கு வழிகாட்டும்!

உங்கள் நியாயமான விருப்பங்கள், இன்பங்கள் அனைத்தையும் பெறுவதற்கு இந்த நூல் வழிகாட்டும், இதில் கூறியுள்ள படி பயிற்சிக்க உங்கள் வாழ்க்கை இன்ப மயமாக மாறும் என்பதனை பலர் அனுபவ பூர்வமாக உணர்ந்துள்ளனர். 

உங்களது தனிப்பட்ட சாதனைக்கு இந்த மின்னூலினை பயன்படுத்தி கொள்ளவும். 

மேலும் இந்த தெய்வ ஞானம் பலருக்கு சென்றடையவேண்டும் என விருப்பம் உள்ளவராக இருந்தால் கீழ்வரும் வித்யா தான திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். 

வாசகர்களின் வசதி கருதி இந்த பிரசுரம் அச்சுப்பிரதியாக வெளிவருவதற்கு இந்த சாதனையினால் பலன் பெற்ற அன்பர்கள் ஒழுங்கு செய்துள்ளனர். அந்தப்பிரசுரத்துடன் குரு நாமம், மூல மந்திரம் அச்சடிக்கப்பட்ட ஸ்ரீ சக்கரம் வழங்கப்படும். இதற்கு எதுவித கட்டணமும் இல்லை. 

உங்களுக்கு விருப்பம் இருப்பின் இந்தப்பணி மேலும் தொடர பின்வரும் வகைகளில் உதவலாம்; 
  1. நீங்கள் பெறும் இந்த மின்னூலை எதுவித மனத்தடங்களும் இல்லாமல் தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல். 
  2. குறைந்தது ஐந்து பிரசுரங்களுக்கான தபால் செலவு, அன்பளிப்பு தொகையினை செலுத்தி புத்தகங்களை பெற்று உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அன்பளிப்பாக தரலாம். 
  3. இவற்றை அன்பளிப்பு தொகையினை செலுத்தி பெற்று நூலகங்களுக்கு வாங்கி பரிசளிக்கலாம். 
  4. இவற்றை அச்சடித்து பலருக்கும் சென்றடைந்து பலரும் பயன் பெறவேண்டும் என விரும்பினால் (திருமணம் போன்ற 
    உங்கள் வீட்டு நல்ல காரியங்களில் பிரசுரித்து வாழ்த்த வருபவர்களுக்கு) வித்யா தானமாக தரலாம். 
  5. இவற்றில் எதாவது ஒன்றில் பங்கு பெற்ற விரும்பின் எமக்கு மின்னஞ்சலில் (sithhavidya@gmail.com) அறியத்தரவும். விபரம் தருகிறோம். 
இந்த நூலில் கூறியுள்ள படி பயிற்சித்து பலன் பெற்று இன்பமுடன் வாழ வாழ்த்துக்கள். 

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு