ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீக்கி கிரக பலம் பெற நவக்கிரக காயத்ரி சாதனைகள்

இன்றைய உலகில் ஜோதிடத்தினை நம்பி விதியினை பழி கூறாதவர்கள் இருக்க முடியாது. கிரகங்கள் எவ்வாறு செயற்படுகிறது என்ற உண்மைகளை மறைந்து சனி உன்னை பார்க்கிறான், கெட்டகாலம் என்று கிரகங்களை பயம் கலந்த எண்ணத்தோடு ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழித்து பரிகாரம் செய்கிறோம், சாந்தி செய்கிறோம் என்று நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கின்றார்கள்.

எங்கும் அலையாமல் இப்படிப்பட்ட பிரச்சனையில் இருந்து மீண்டுவர வழி உள்ளதா என்றால் ஆம் உள்ளது. அந்த வழியினைத்தான் பலன் பெறவேண்டும் என்று எண்ணும் அன்பர்களுக்காக கூறப்போகிறோம். இதில் கூறப்பட்ட வழியில் நீங்கள் முயற்சித்து வேறெதனாலும் பெறமுடியாத பலன்களை துரிதமாக பெறமுடியும். இதற்குரிய தகுதி உங்கள் முயற்சியும் சிரத்தையும் மட்டுமே ஆகும்.

யாருக்கு இவை உபயோகப்படும்?
யாருக்கு துன்பங்கள், தொல்லைகள் இருக்கின்றனவோ, ஜாதகத்தில் கிரக தோஷங்கள் இருக்கின்றது எனக்கூறப்படுகிறதோ, எந்தவிதமான ஜாதகக் கோளாறுகள், எந்தக்கிரங்களாவது பலமிழந்து, நீச்சமடைந்து இருப்பின் அவற்றால் நல்ல பலன்கள் பெறவேண்டி இருப்பின், வேலை கிடைக்காமை, தீராத நோய்கள், பணப்பிரச்சனை, இன்னும் பல நன்மைகள் 

எப்படி சாதனையினை தொடங்குவது?
  • முதலில் காயத்ரி சித்த சாதனைப்பயிற்சியினை ஞாயிற்றுக்கிழமை தொடங்கவேண்டும். இந்தப்பயிற்சியில் குரு நாமம், காயத்ரி மந்திரம் பின்பு சித்த சாதனை ஆகியவற்றை தரப்பட்ட அறிவுரைப்படி செய்யவேண்டும். இந்த கையேட்டினை பெறுவதற்கு எமக்கு மின்னஞ்சலில் அறியத்தரவும்.
  • அத்துடன் உங்களுக்கு பலமிழந்து காணப்படும் கிரக நிலை எதுவேன்பதனை ஒரு ஜோதிடரின் உதவி கொண்டு அறிந்து கொள்ளுங்கள். எம்மிடம் ஜாதகம் அனுப்பி இவற்றை சொல்லும்படி கேட்க வேண்டாம்,
  • அந்த விபரத்துடன் எமக்கு மின்னஞ்சலில் அறியத்தரவும். உங்களுக்குரிய நவக்கிரக சாதனை என்னவேன்பதனை அறியத்தருகிறோம்.
  • இந்த முறை தினசரி 15 – 25 நிமிடங்கள் ஒதுக்கி உங்கள் வீட்டில் இருந்தவாறே செய்துவர அத்தனை ஜாதகப் பிரச்சனைகளிலிருந்தும் மீண்டு இன்பமான வாழ்க்கையினை பெறலாம். 


இந்த சாதனை எப்படி உங்களுக்கு பலன் தரும்?
எமது சித்தப்பதிவுகளிற்கு ஏற்ப பலனைத்தருவதே நவக்கிரகங்களின் வேலை. ஆக கிரகதோஷம் என்பது எமது சித்தத்தில் பதிந்த பாவப்பதிவுகளிற்கு ஏற்ப பிறப்பின் போது எமது சூஷ்ம உடலில் கிரகங்களின் சக்தியின் அளவு கூடிக்குறையும் நிலையே ஆகும். பரிபூரணமாக இருந்தால் நன்மையையும், நீச்சமாக இருந்தால் அதனால் கிடைக்கக்கூடிய நன்மை கிடைக்க முடியாத நிலைமையும் ஏற்படுகின்றன. இந்த கிரகங்களின் சக்தி எம்மில் நிறைந்து இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் எம்மால் குறிந்த நன்மைகளை பெறமுடியும்.

சாதனா மார்க்கம் என்பது சித்தர்களும் ரிஷிகளும் இந்த நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு எமக்கு அருளிய ஒரு அரிய வழி, இதன் மூலம் நாம் எமது சித்தத்தில் உள்ள பாவப்பதிவுகளை மாற்றி, பற்றாக்குறையாக உள்ள கிரகங்களின் சக்தியினை எம்மில் ஈர்த்து நன்மை பெறும் முறை.

இதற்கு எம்மைவிட வலிமையான ஒரு தெய்வ சக்தியின் உதவியும், அந்த சக்தியுடன் எம்மை இணைக்கும் குருமண்டலமும், சக்தியினை பெறுவதற்குரிய கருவியும் அவசியம். இதற்காக நாம் காயத்ரி மந்திரத்தினையும், குரு மண்டல மந்திரங்களையும், சில மந்திரங்களையும் பயன்படுத்துகிறோம்.

மூல காயத்ரி (தத் ஸவிதுர் வரேண்யம் .................) பிரபஞ்ச மூலசக்தி, இந்த மந்திரத்திற்கு சித்தத்தில் பதிந்துள்ள பாவ சம்ஸ்காரங்களை (பதிவுகளை) அகற்றும் வல்லமை உண்டு. தரப்பட்ட காயத்ரி சித்த சாதனையினை சித்த வித்யா குருமண்டல மந்திரங்களுடன் நாற்பது நாட்கள் (இது எல்லோருக்கும் பொருந்தாது, அவரவர்கள் நிலைக்கு ஏற்ப பல மண்டலங்கள் செய்ய வேண்டி வரும்) செய்து, குறித்த கிரக மந்திரங்களை செய்யும் போது நாம் மேலே விளக்கிய முறையில் உங்களது துன்பங்கள் தீர்ந்து இன்ப வாழ்க்கை பெறுவீர்கள்.


இந்த முறைகளில் பயிற்சித்து பயன் பெறவிரும்புபவர்கள் மின்னஞ்சலில் அறியத்தரவும். 

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு