காயத்ரி சித்த சாதனை – எளிய வடிவம்

காயத்ரி மந்திரம் உலகபொது மறை மந்திரம், இதனை ஜெபிப்பவர்களுக்கு பல அற்புத சக்திகளையும் நலனையும் தரக்கூடியது. அவற்றை நீங்கள் பெறுவதற்குரிய சித்தர்களின் ஒரு இரகசிய முறையினை இங்கு வெளிப்படுத்துகிறோம். இந்த முறையினை தினசரி பின்பற்றி வருவீர்களேயானால்  உலகில் வேறு எதனாலும் பெறமுடியாத நன்மைகளை பெறுவீர்கள். இந்த முறையினை பின்பற்றுவதற்கு எந்தவித கட்டுப்படும் இல்லை. தரப்பட்ட முறையினை உங்கள் வசதிப்படி செய்துவரலாம். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் அவரவர்களுக்கு வசதிப்படும் நேரத்தில் செய்து வரவேண்டும். குருமண்டல வணக்கத்தினை கட்டாயம் செய்யவேண்டும். இதுவே இந்த சாதனைக்கு கடவுச்சொல் (password) போன்றது. இதை தொடர்ச்சியாக செய்து வர உங்கள் உடலிலும், மனதிலும் தெய்வ சக்தி நிறைந்து ஒவ்வொரு அட்சரத்திற்கும் கூறப்பட்ட பண்புகளை பெற்று பேரின்ப பெருவாழ்வு வாழ்வீர்கள்.
ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கீழ்வரும் படிமுறைகளை தரப்பட்ட அறிவுறுத்தல் படி தினசரி செய்து வரவும்.
குருமண்டல் வணக்கம் : மூன்று தடவை கூறி மனதில் ஒளிவடிவில் தியானித்து வணங்கவும்
·         ஓம் தாயே போற்றி
·         ஓம் தந்தையே போற்றி
·         ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே போற்றி!
·         ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்தியகுருவே போற்றி!
·         ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவேபோற்றி !
·         ஓம் ஸ்ரீ போக நாத குருவே போற்றி!
·         ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே போற்றி!
·         ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே போற்றி!
·         ஓம் பரம் தத்வாய நாராயண குருவே போற்றி!
·         ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே போற்றி!
·         ஓம் ஸ்ரீ ராம் ஷர்மா ஆச்சாரிய குருவே போற்றி!
·         ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே போற்றி!
·         ஓம் ஸ்ரீ ஸோமானந்த நாத குருவே போற்றி!
காயத்ரி மந்திரம்:  உங்கள் வசதிக்கு தகுந்த படி தினசரி  09/27/54/108 தடவைகள் ஜெபிக்கவும்
ஓம் பூர் புவஹ ஸ்வஹ தத் சவிதுர் வரேணியம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ நஹ ப்ரசோதயாத்

சித்த சாதனை – இதில் உள்ள ஒவ்வொரு வாக்கியத்தினையும் மூன்று தடவை நிதானமாக கூறி மனதில் கிரகிக்க வேண்டும்.
1.        ஓம் அட்சரம் என்னில் பரப்பிரம்ம நிலையினை உண்டாக்கி தெய்வ சக்திய உடையவன் ஆக்குகிறது. நான் பரிபூரண தெய்வ சக்தி உடையவன்/ள்
2.        பூர் அட்சரம் எனது உடலில் பிராணனை நிறைவிக்கின்றது. நான் பிராண சக்தி நிறைந்தவன்/ள்
3.        புவஹ அட்சரம் எனது உடலிலும் மனதிலும் உள்ள தீமைகள், நோய்களை அழிக்கிறது. நான் எந்த தீமைகளும் அண்டாதவன்/ள்.
4.        ஸ்வஹ அட்சரம் என்னில் இன்பத்தினை தரும் சக்திகளை ஈர்க்கிறது. நான் எப்போதும் குறையாத மாறாத இன்பம் உடையவன்
5.        தத் அட்சரம் எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் ஆற்றல் என்னில் உருவாக்குகிறது. நான் எடுத்த காரியத்தில் வெற்றி அடைபவன்/ள்
6.        அட்சரம் எனது மனதிலும் உடலிலும் துணிவு  ஆற்றல் என்னில் உருவாக்குகிறது. நான் எப்போதும் துணிவு உடையவன்/ள்
7.        வி அட்சரம் எனது மனதிலும் உடலிலும் எடுத்த காரியங்களை சரியாக பரிபாலிக்கும் ஆற்றலை  உருவாகிறது. நான் எக்காரியத்தையும் சிறப்பாக முடிப்பவன்.
8.        துர் அட்சரம் எனது மனதிலும் உடலிலும் நல்லவற்றை பெறும் கல்யாண குணத்தினை உருவாக்கிறது. நான் எப்போதும் நல்லவற்றை எண்ணும் கல்யாண குணம் உடையவன்/ள்.
9.        அட்சரம் எனது மனதிலும் உடலிலும் யோக சக்தியை பெறும் தன்மையினை உருவாக்கிறது. நான் யோக சக்தி உடையவன்/ள்.
10.     ரே அட்சரம் எனது மனதிலும் உடலிலும் எல்லாவற்றையும் அன்பு செலுத்தும் பண்பினை உருவாக்குகிறது. நான் அன்பு நிறைந்தவன்/ள்.
11.     ணி அட்சரம் எனது மனதிலும் உடலிலும்  பணத்தினை பெறுவதற்குரிய பண்பினை/முயற்சியினை உருவாக்கிறது. நான் எனக்கும் என்னை உதவி நாடிவருபவர்களுக்கும் உதவக்கூடிய பண வசதி உள்ளவன்/ள்.
12.     யம் அட்சரம் எனது மனதிலும் உடலிலும் தேஜஸ் எனும் ஒளிமயமான அறிவினை பெறுவதற்குரிய பண்பினை உருவாக்குகிறது. நான் ஒளிமயமான அறிவு உடையவன்/ள்.
13.     பர் அட்சரம் எனது மனதிலும் உடலிலும் நல்லவற்றை பாதுகாக்கும் சக்தியினை உருவாகுகிறது. எனது நல்லவற்றை எப்போதும் பாதுகாக்கும் ஆற்றல் உள்ளவன்/ள்.
14.     கோ அட்சரம் எனது மனதிலும் உடலிலும் நல்லறிவினை உருவாக்குகிறது. நான் நல்லறிவு உள்ளவன்/ள்,
15.     தே அட்சரம் எனது மனதிலும் உடலிலும் தீமையை அடக்கும் சக்தியினை உருவாக்குகிறது.  நான் எல்லாவித தீமைகளையும் அடக்க கூடியவன்/ள்,
16.     அட்சரம் எனது மனதிலும் உடலிலும் எந்த செய்கையிலும் முழுமையாக ஈடுபடும் தன்மையினை உருவாக்குகிறது. நான் எடுத்த காரியத்தில் முழுமையாக ஈடுபடுபவன்/ள்.
17.     ஸ்ய அட்சரம் எனது மனதிலும் உடலிலும் தாரணை – ஏகாக்கிர சக்தியினை உருவாக்குகிறது. நான் தாரணா சக்தி உடையவன்/ள்.
18.     தீ அட்சரம் எனது மனதிலும் உடலிலும் பிராணனை நிறைவிக்கின்றது. நான் பிராணன் நிறைந்தவன்//ள்
19.     அட்சரம் எனது மனதிலும் உடலிலும் சுயகட்டுப்பாட்டு சக்தியினை தருகிறது. நான் சுய கட்டுப்பாடு உடையவன்//ள்
20.     ஹி அட்சரம் எனது மனதிலும் உடலிலும் தபஸ்  சக்தியினை தருகிறது. நான் தபஸ் சகதி உடையவன்/ள்.
21.     தி அட்சரம் எனது மனதிலும் உடலிலும் எதிர்காலத்தை சிந்தித்து தூரநோக்குடன் செயற்படும்  சக்தியினை தருகிறது. நான் எதிர்காலத்தை சிந்தித்து தூரநோக்கு சிந்தனை உடையவன்/ள்.
22.     யோ அட்சரம் எனது மனதும் உடலும் விழிப்புணர்வுடன் இருக்கும் சக்தியினை தருகிறது. நான் எப்போதும் விழிப்புணர்வு உடையவன்/ள்.
23.     யோ அட்சரம் எனது மனதிலும் உடலிலும் நல்ல பலனைத்தரும் செயல்களை, பொருட்களை  உற்பத்தி செய்யும்   சக்தியினை தருகிறது. நான் நல்லவற்றை உருவாக்குபவன்/ள்
24.     நஹ அட்சரம் எனது மனதிலும் உடலிலும் எல்லோரிடமும் இனிமையாக பழகும் பண்பினை தருகிறது. நான் இனிமையான பண்பு உடையவன்/ள்.
25.     ப்ர அட்சரம் எனது மனதிலும் உடலிலும் இலட்சியத்தில் உறுதியாக இருக்கும் சக்தியினை தருகிறது. நான் எனது இலட்சியத்தில் உறுதியானவன்/ள்.
26.     சோ அட்சரம் எனது மனதிலும் உடலிலும் எந்த செய்கையையும் தைரியத்துடன் அணுகும் தன்மையினை தருகிறது. நான் தைரியம் உடையவன்/ள்.
27.     அட்சரம் எனது மனதிலும் உடலிலும் தெய்வ ஞானத்தினை பெறும்  தன்மையினை தருகிறது. நான் தெய்வ ஞானம் உடையவன்/.ள்

28.     யாத் அட்சரம் எனது மனதிலும் உடலிலும் மக்களிற்கு தன்னலம் அற்ற சேவையினை   செய்யும் ஆற்றலை தருகிறது. நான் தன்னலமற்ற சேவை புரிபவன்/ள்

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு