காயத்ரி மந்திர அட்சர தெய்வ சக்தி விழிப்பு சாதனை

காயத்ரி மந்திரத்தின் ஒவ்வொரு அட்சரமும் பிரபஞ்ச பிராணனிலும், மனித சூக்ஷ்ம ஸ்தூல உடலிலும் குறித்த தெய்வ சக்தியை விழிப்பித்து மனிதனுக்கு பல போக பாக்கியங்களை அளிக்க வல்லது என்பதை எமது முன்னைய கட்டுரையில் விளக்கியுள்ளோம்.

இந்தபதிவில் எமது பதிவுகளை வாசித்து, குருமண்டலத்துடன் தொடர்பு கொண்டு சாதனை புரியும் அன்பர்கள் தமது சாதனையின் பலனை துரிதமாக பெறவைக்கும் ஒரு அரிய சித்த சாதனையினை வெளியிடுகிறோம்.

இதனை பயிற்சித்து பலன் பெற  தினசரி 108 காயத்ரி ஜெபம் செய்பவராக இருக்கவேண்டும்.

இந்த சாதனை படிப்படியாக காயத்ரி மந்திர சக்திகளை உங்கள் மனதிலும், உடலிலும் விழிப்படைந்து உங்கள் உலகவாழ்க்கையின் தேவைகள் பூர்த்தியாகி ஆன்ம பாதையில் இட்டுச்செல்லும்.

இதனை பயிற்சிக்கும் முறை:
முதலில் சித்தவித்யா மண்டல பத்து குருநாமம், பின்னர் 108 காயத்ரி மந்திர ஜெபம், அதன் பின்னர் காலை மாலை  மூன்றுதடவை ஆறுதலாக கீழ்வரும் சித்த சாதனையினை வாசித்து மனதில் பாவித்து வரவேண்டும்,
 1. ஓம் அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள சஹாஸ்ரார  சக்கர சக்தியை விழிப்படைய செய்து பரப்பிரம்ம நிலையினை உண்டாக்கி தெய்வ சக்திய உடையவன் ஆக்குகிறது. நான் பரிபூரண தெய்வ சக்தி உடையவன்//ள்
 2. பூர் அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் பிராணனை நிறைவிக்கின்றது. நான் பிராண சக்தி நிறைந்தவன்/ள்
 3. புவஹ அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள தீமைகள், நோய்களை அழிக்கிறது. நான் எந்த தீமைகளும் அண்டாதவன்/ள்.
 4. ஸ்வஹ அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் இன்பத்தினை தரும் சக்திகளை ஈர்க்கிறது. நான் எப்போதும் இன்பம் உடையவன்
 5. தத் அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள தாபினி சக்கர சக்தியை விழிப்படைய செய்து  எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் ஆற்றல் என்னில் உருவாக்குகிறது. நான் எடுத்த காரியத்தில் வெற்றி அடைபவன்/ள்
 6. அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள சப்ஹல்த சக்கர சக்தியை விழிப்படைய செய்து எனது மனதிலும் உடலிலும் துணிவு  ஆற்றல் என்னில் உருவாக்குகிறது. நான் எப்போதும் துணிவு உடையவன்/ள்
 7. வி அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள விஸ்வ சக்கர சக்தியை விழிப்படைய செய்து  எனது மனதிலும் உடலிலும் எடுத்த காரியங்களை சரியாக பரிபாலிக்கும் ஆற்றலை  உருவாகிறது. நான் எக்காரியத்தையும் சிறப்பாக முடிப்பவன்.
 8. துர் அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள துஷ்டி சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் நல்லவற்றை பெறும் கல்யாண குணத்தினை உருவாக்கிறது. நான் எப்போதும் நல்லவற்றை எண்ணும் கல்யாண குணம் உடையவன்/ள்.
 9. அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள வரத சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் யோக சக்தியை பெறும் தன்மையினை உருவாக்கிறது. நான் யோக சக்தி உடையவன்/ள்.
 10. ரே அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள ரேவதி சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் எல்லாவற்றையும் அன்பு செலுத்தும் பண்பினை உருவாக்குகிறது. நான் அன்பு நிறைந்தவன்/ள்.
 11. ணி அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள சூக்ஷ்ம சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும்  பணத்தினை பெறுவதற்குரிய பண்பினை உருவாக்கிறது. நான் எனக்கும் என்னை உதவி நாடிவருபவர்களுக்கும் உதவக்கூடிய பண வசதி உள்ளவன்/ள்.
 12. யம் அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள ஞான சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் தேஜஸ் எனும் ஒளிமயமான அறிவினை பெறுவதற்குரிய பண்பினை உருவாக்குகிறது. நான் ஒளிமயமான அறிவு உடையவன்/ள்.
 13. பர் அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள பார்க சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் நல்லவற்றை பாதுகாக்கும் சக்தியினை உருவாகுகிறது. எனது நல்லவற்றை எப்போதும் பாதுகாக்கும் ஆற்றல் உள்ளவன்/ள்.
 14. கோ அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள கோமதி சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் நல்லறிவினை உருவாக்குகிறது. நான் நல்லறிவு உள்ளவன்/ள்,
 15. தே அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள கோமதி சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் தீமையை அடக்கும் சக்தியினை உருவாக்குகிறது.  நான் எல்லாவித தீமைகளையும் அடக்க கூடியவன்/ள்,
 16. அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள வராகி சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் எந்த செய்கையிலும் முழுமையாக ஈடுபடும் தன்மையினை உருவாக்குகிறது. நான் எடுத்த காரியத்தில் முழுமையாக ஈடுபடுபவன்/ள்.
 17. ஸ்ய அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள ஸின்ஹநி  சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் தாரணை – ஏகாக்கிர சக்தியினை உருவாக்குகிறது. நான் தாரணா சக்தி உடையவன்/ள்.
 18. தீ அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள தியான  சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் பிராணனை நிறைவிக்கின்றது. நான் பிராணன் நிறைந்தவன்//ள்
 19. அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள மர்யாதா சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் சுயகட்டுப்பாட்டு சக்தியினை தருகிறது. நான் சுய கட்டுப்பாடு உடையவன்//ள்
 20. ஹி அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள ஸ்வதா சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் தபஸ்  சக்தியினை தருகிறது. நான் தபஸ் சகதி உடையவன்/ள்.
 21. தி அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள மேதா சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் தூரநோக்குடன் செயற்படும்  சக்தியினை தருகிறது. நான் தூரநோக்கு சிந்தனை உடையவன்/ள்.
 22. யோ அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள யோகமாயா  சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதும் உடலும் விழிப்புணர்வுடன் இருக்கும் சக்தியினை தருகிறது. நான் எப்போதும் விழிப்புணர்வு உடையவன்/ள்.
 23. யோ அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள யோகினி சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் நல்ல பலனைத்தரும் செயல்களை, பொருட்களை  உற்பத்தி செய்யும்   சக்தியினை தருகிறது. நான் நல்லவற்றை உருவாக்குபவன்/ள்
 24. நஹ அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள தாரிணி சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் எல்லோரிடமும் இனிமையாக பழகும் பண்பினை தருகிறது. நான் இனிமையான பண்பு உடையவன்/ள்.
 25. ப்ர அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள ப்ரபாவ சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் இலட்சியத்தில் உறுதியாக இருக்கும் சக்தியினை தருகிறது. நான் எனது இலட்சியத்தில் உறுதியானவன்/ள்.
 26. சோ அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள ஊஷ்மா  சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் எந்த செய்கையையும் தைரியத்துடன் அணுகும் தன்மையினை தருகிறது. நான் தைரியம் உடையவன்/ள்.
 27. அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள தர்ஷய சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் தெய்வ ஞானத்தினை பெறும்  தன்மையினை தருகிறது. நான் தெய்வ ஞானம் உடையவன்/.ள்
 28. யாத் அட்சரம் எனது ஸ்தூல சூக்ஷ்ம உடலிலும் உள்ள நிரஞ்சன சக்கர சக்தியை விழிப்படையச் செய்து எனது மனதிலும் உடலிலும் மக்களிற்கு தன்னலம் அற்ற சேவையினை   செய்யும் ஆற்றலை தருகிறது. நான் தன்னலமற்ற சேவை புரிபவன்/ள்

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு