சித்த வித்யா காயத்ரி உபாசனை மண்டலி
எளிய தமிழில் அன்னை
பராசக்தியினை உபாசித்து தெய்வ சக்தியினை கவர்ந்து எமது அன்றாட துன்பங்களை தீர்த்து
இன்ப வாழ்வினை பெற சித்த வித்யா விஞ்ஞான பிரசுரம் சித்தர்களின், குருமண்டலத்தின்
ஆசியுடன் வழிவகை செய்துள்ளது.
இதன் படி ஆர்வம் உள்ள
எவரும் காயத்ரி உபாசனையினை கற்று தமது குடும்பத்தவர்களுடனோ, நண்பர்களுடனோ வாரம்
ஒரு முறை பூஜையாகவும், சிறிய யாகமாகவும் செய்யலாம்.
தியான ஸ்லோகம், காயத்ரி
மந்திரம், யாக மந்திரங்கள் சிலது தவிர்ந்து மற்றைய அனைத்தும் தமிழில் இருக்கும்.
இது தொடர்பான சில அடிக்கடி
கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும் கீழே;
சந்தேகம்
தெளிதல்:
காயத்ரி என்பது
பிராமணர்கள் மட்டும்தானே உபாசிக்க கூடியது?
இந்த மாயை சுயநலமிகளால்
உருவாக்கப்பட்ட கட்டுக்கதை. பழைய சாஸ்திரங்களை ஆராய்ந்தால் காயத்ரி
பிராமணர்களுக்கு மாத்திரமல்ல, ஷத்திரியர், வைசியர் ஆகிய மூவருக்கும்
விதிக்கப்பட்டிருக்கிறது, தகுந்த பண்பையும், தெளிந்த அறிவையும் பெற்றவன் பிராமணன், இது பிறப்பால் வரும் தகுதி
அல்ல, பிராமணத்துவம் ஒருவன் காயத்ரியை
உபாசிப்பதாலேயே பெறுகிறான், ஆகவே காயத்ரியினை உபாசிப்பதால் எவரும் பிராமணத்துவம்
பெறலாம். எவர் அறிவினை சுத்தப்படுத்தி உயர் நிலை அடையவேண்டும் என நினைக்கிறார்களோ,
தாற்கால நிலையில் கூறுவதானால் கணணி பொறியியல், ஆலோசகர், வியாபாரம், அரசியல்,
அறிவியல், முகாமைத்துவம் சார்ந்த துறைகளில் மூளையையும், மனதையும் பாவித்து
முடிவெடுக்கும் தொழில்களில் இருப்பவர்கள் கட்டாயம் காயத்ரி உபாசனையினை
செய்யவேண்டும்.
சந்தேகம்
தெளிதல்:
காயத்ரியினை என்
பிராமணர், ஷத்திரியர், வைசியர் ஆகிய ஜாதிகளை சேர்ந்தவர்கள் மட்டும் செய்ய வேண்டும்
சூத்திரர் செய்யக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளதே? இதற்கான காரணம் என்ன?
காயத்ரி மந்திரத்தின்
பொருளைப் பார்த்ததால் அது அறிவினை சுத்தம் செய்வது என்று பொருள், இன்னொரு பலன்
உடலில் உயிர் எனப்படும் பிராண சக்தியை காப்பாற்றுவது!
பழைய சமூக அமைப்பில்
பிராமணன் என்பவன் முழுமையாக தனது அறிவினையும், மனதினையும் பயன்படுத்தி செயல்
புரிபவனாக இருந்தான், ஆகவே அவனுக்கு அதிகளவு புத்தி பலமும், மனோபலமும் தேவை, அதனை
பெறுவதற்கு அதிகளவு காயத்ரி மந்திர ஜெபத்தினை அவன் செய்ய வேண்டும், மறுதலையாக யார்
அதிகளவு காயத்ரி ஜெபிக்கிரார்களோ அவர்கள் பிராமணத்துவம் பெறுவார்கள். இக்கால சமூக
அமைப்பபில் ஆலோசகர்கள், விஞ்ஞானிகள் என்பவர்களை ஒப்பிடலாம், என்றாலும் முழுமையாக
இல்லை! இவர்கள் பௌதீகத்தை மட்டும் நம்புவதால் முழுமையான பிராமணத்துவம் என்று சொல்ல
முடியாது!
அடுத்து ஷத்திரியர்கள்
இவர்களுக்கும் அறிவுபலம் அதிகம் இருக்க வேண்டும், அரசியல்வாதிகள், நிர்வாகிகள்
என்பவர்கள்,
வைசியர்கள் பொருள்
சேர்க்கும் வியாபாரிகள், இவர்களுக்கும் அறிவு பலம் அவசியம்.
சூத்திரர்கள் என்பவர்கள்
அறிவின் பலமின்றி தனது உடல் பலத்தை மாத்திரம் மூலதனமாக கொண்டு வாழ்பவர்கள்.
இவர்கள் காயத்ரியினை உபாசிக்க அறிவு விழிப்படைந்து மேல் நிலை அடைவர்.'
காயத்ரி உபாசனை
மூலம் சமூக மாற்றம் சாத்தியமா?
ஆம், நிச்சயமாக,
காயத்ரி என்பது எமது முன்னோர்கள் கண்டு பிடித்த ஒரு அரிய விஞ்ஞானம், சக்தியுடைய
அட்சரங்கள் மூலம் பிரபஞ்ச அறிவு சக்தியினை கவர்ந்து ஜெபிப்பவருடைய மனதினை
சுத்தமடையச் செய்து அறிவினை விழிப்பிக்கிறது.
அடிப்படையில்
எல்லாப் பிரச்சனைகள், துன்பங்களுக்கு காரணம் மனிதனின் மனதில் இருக்கும்
குழப்பங்களும், அறியாமைக்களுமே, இவற்றை நீக்கும் போது மனிதன் துன்பங்களை
நீக்குகிறான். இந்தப்பநியினை காயத்ரி உபாசனை செம்மையாக செய்யும்!
இப்படி தனிமனிதன்
ஒருவன் முன்னேற அவனைச்சுற்றி உள்ளவர்களும் படிப்படியாக முன்னேறுவார்கள்! இதன்
மூலம் குறித்த சமூகமும் முன்னேறும்!
இந்த காயத்ரி
உபாசனா மண்டலி உபாசனா முறையின் படிமுறைகள் என்ன?
இந்த முறையில் நீங்கள்
மூன்று படிகள் கற்றுக் கொள்வீர்கள்,
- காயத்ரி சித்த
சாதனை: இது உங்களில் இருபத்தி நான்கு வகையான பௌதீக, ஆன்மீக
சித்திகளை விழிப்பித்து இன்பமான வாழ்க்கைக்கு இட்டுச்செல்லும். இதனை தனிப்பட
ஒவ்வொருநாளும் நீங்கள் செய்து வரவேண்டும். இதற்கு உணவோ, வேறு எந்த கட்டுப்பாடோ
இல்லை.
- வாராந்த காயத்ரி
உபாசனை: இது உங்கள் குடும்பத்தவர்கள், நண்பர்கள் குழுவாக சேர்ந்து
குறித்த ஒரு இடத்தில் வாரம் ஒரு முறை தமிழில் அன்னை பராசக்தியை துதித்து தெய்வ
சக்தியை விழிப்பித்து அனைவரும் பயன் பெறும் கூட்டு முயற்சி.
- வாராந்த காயத்ரி
யாகம்: மேற்குறித்த பூஜையின் பின்னர் அனைவரும் சேர்ந்து
செய்யக்கூடிய சிறிய, எளிய யாக விதானம். இதனால் வேறு எதனாலும் பெற முடியாத அரிய
நன்மைகள் பெறலாம். இது நாம் வாழும் சூழல், கிராமத்தில் தெய்வ சக்தியினை
விழிப்பிக்கும். இதனால் அந்த இடமே பயன் பெறும்.
காயத்ரி
உபாசனையினை தமிழில் எப்படி கற்றுக்கொள்வது?
இதற்காக முழு
விளக்கத்துடன் எளிய தமிழில் காயத்ரி உபாசனை விளக்க நூல் எழுதப்பட்டுள்ளது. அதனை
முதலில் படித்து விளங்கி கொள்ள வேண்டும். பின்னர் பூஜை துதிகள், மந்திரங்கள் ஒலிநாடாக்களாக
பெற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்கு விருப்பம் இருப்பின் எமது மின்னஞ்சலிற்கு (sithhavidya@gmail.com) அறியத்தரவும்.
இவற்றை கற்றுக்கொள்ள
கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா?
இல்லை, அனைத்தும்
முற்றிலும் இலவசமானது, உங்கள் ஆர்வமும் சிரத்தையுமே கட்டணம்!
அன்பளிப்புகள்
தரமுடியுமா?
நூற்கள் அச்சிடுவதற்கு,
தபால்செலவிற்கு நீங்கள் மனமுவந்து அளிக்கும் தானத்தின் மூலம் இந்தப்பணி
தொடர்ச்சியாக நடைபெற நீங்களும் ஒரு குடும்பத்தவராக உதவி செய்யலாம். பணமாக எந்த
அன்பளிப்புகளும் ஏற்றுக்கொள்வதில்லை, நூற்கள் அச்சிடுவதில், யாகங்கள்,
பூஜைகளிற்கானசெலவுகள், என உங்கள் விருப்பத்திற்கு உகந்த எமது பணியில் இணையலாம். இந்தப்பணியில்
பங்கு பெறும் மனப்பாங்கு அன்னை பராசக்தியின் குடும்பத்தில் ஒருவனாக இந்த பணி வளர
எனது பங்களிப்பு என்ற மனநிலையில் இருந்து தரப்படுவன பெற்றுக்கொள்ளப்படும்.
குறிப்பாக ஒருவருக்கோ, ஒரு நிறுவனத்திற்கு என்று அல்லாமல் புத்தங்கள் அச்சிட
விரும்பினால் நீங்கள் விரும்பிய அளவு பிரதிகளை அச்சிட்டு தரலாம்.'
காயத்ரி பூஜை
முறையினை யார் செய்யலாம்?
விருப்பம் உள்ள எவரும்
செய்யலாம், முறையாக கூறப்பட்ட விடயங்களை விளங்கி கொண்டு கடைப்பிடித்து அதன் படி
செய்யக் கூடியவர்கள் எவரும் செய்யலாம். ஜாதி, இனம், ஆண், பெண் வித்தியாசங்கள்
எதுவும் முக்கியம் இல்லை.
காயத்ரி பூஜையினை
செய்வதற்கு உணவுக்கட்டுப்பாடுகள் உண்டா?
இல்லை, முழுமையான பலனினை
பெறுவதற்கு சைவ உணவு உதவி புரியும்.
நான் புலால் உணவு
உண்பவர், ஆகவே காயத்ரி பூஜையினை செய்வதில் தவறு ஏற்பட்டு விட்டால்?
உபாசனை சாதனைகளில்
உணவுக்கட்டுப்பாடு இருப்பதன் காரணம் நாம் உண்ணும் உணவின் ஒருபகுதி மனமாக திரிந்து
எமது எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் உருவாக்குகின்றது என்பதே! புலால் உணவு
உண்ணும் போது எமது மனமும், உடலும் தெய்வ சக்தியினை ஈர்க்கும் தன்மை கடினமாக
இருக்கும். ஆகவே வாரம் ஒருமுறை பூஜைக்காக ஒதுக்கும் நாளில் சைவ உணவினை
எடுத்துக்கொள்வதால் அதிக பலனை பெறுவீர்கள்.
எனக்கு
சம்ஸ்க்ருதம் தெரியாதே, எப்படி பூஜை மந்திரங்களை கற்றுக்கொள்வது?
கவலை வேண்டாம் தியான
ஸ்லோகமும், காயத்ரியும், சில மந்திரங்களும்
தவிர்ந்த அனைத்தும் தமிழிலேயே உள்ளது. சமஸ்கிருதத்தில் உள்ள
மந்திரங்களையும் தமிழ் பூஜை முறைகளையும் ஒலி வடிவில் தருவோம். உங்களுக்கு
கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீராத ஆர்வம் இருந்தால் ஒரு சில நாட்களில்
கற்றுக்கொள்ளலாம்.
சந்தேகம்
தெளிதல்:
தமிழில்
காயத்ரியினை எப்படி உபாசிப்பது?
தமிழும் சமஸ்கிருதமும்
ஒரே நாணயத்தின் இரு கண்கள், பிற்காலத்தில் அந்நியர்களின் சூழச்சியால்
சமஸ்கிருதத்தின் மேல் தமிழர்களுக்கு
வெறுப்பை உருவாக்கின் விட்டார்கள், சமஸ்க்ருதத்தின் ஒலி அமைப்பினால் சூஷ்ம
உடலில் சில கிரந்திகளை தாக்கி தெய்வ சக்திகளை விழிப்பிக்க முடியும், உபாசனையில்
இரண்டு அங்கங்கள் உள்ளன, ஒன்று தேவியிற்கு அன்பினை வெளிப்படுத்துவது, மற்றையது
சூக்ஷ்ம கிரந்திகளை தாக்கி தெய்வ சக்திகளை விழிப்பிப்பது, அன்பினை வெளிப்படுத்த
தமிழ் பாடல்களையும், தெய்வ சக்திகளை விழிப்பிக்க சமஸ்கிருதத்தினையும் இந்த
உபாசனையில் பயன் படுத்துகிறோம்.
காயத்ரி
உபாசனையில் எப்படி பலன் கிடைக்கின்றது?
சில உபாசனைகள் பௌதீக
சித்திகளையும் சில ஆன்மீக சித்திகளையும் தரும். பௌதீக சித்திகள் மனிதன் இந்த
உலகில் நலமாய் வாழ தேவையானவற்றை தரும், ஆன்மீக சக்திகள் எமது ஆன்ம பரிணாமத்தினை
உயர்த்தி முக்திப்பாதையில் முன்னேற வைக்கும். காயத்ரி உபாசனை இந்த இரண்டினையும்
தரும்.
காயத்ரி
உபாசனையில் என்னென்ன பலன்கள் கிடைக்கின்றது?
அடிப்படை பலன் அறிவு
சுத்தியாகி, மனதில் உள்ள மாசுகள் நீங்கி இன்ப வாழ்வு பெறுதல், அதற்கு மேலாக கீழ்வரும்
பௌதிக ஆன்மீக சித்திகளை பெறுவார்.
பரிபூரண தெய்வ சக்தி,
பிராண சக்தி, தீமைகளும் நோய்களும் அண்டாத தன்மை, குறையாத மாறாத இன்பம், எடுத்த
காரியத்தில் வெற்றி, துணிவு, எடுத்த காரியங்களை சரியாக பரிபாலிக்கும் ஆற்றல்,
நல்லவற்றை பெறும் கல்யாண குணம், யோக சக்தி, எல்லாவற்றிலும் அன்பு செலுத்தும்
பண்பு, பணத்தினை பெறுவதற்குரிய பண்பு/முயற்சி, தேஜஸ், நல்லவற்றை பாதுகாக்கும்
சக்தி, நல்லறிவு, தீமையை அடக்கும் சக்தி, எந்த செய்கையிலும் முழுமையாக ஈடுபடும்
தன்மை, தாரணை – ஏகாக்கிர சக்தி, சுயகட்டுப்பாட்டு, தபஸ் சக்தி, எதிர்காலத்தை சிந்தித்து தூரநோக்குடன்
செயற்படும் சக்தி, விழிப்புணர்வுடன்
இருக்கும் சக்தி, நல்ல பலனைத்தரும் செயல்களை, பொருட்களை உற்பத்தி செய்யும் சக்தி, எல்லோரிடமும் இனிமையாக பழகும் பண்பு,
இலட்சியத்தில் உறுதியாக இருக்கும் சக்தி, எந்த செய்கையையும் தைரியத்துடன் அணுகும்
தன்மை, தெய்வ ஞானத்தினை பெறும் தன்மை, மக்களிற்கு
தன்னலம் அற்ற சேவையினை செய்யும் ஆற்றல்
போன்ற அடிப்படை சித்திகளும், இதனால் வரும் பல நூற்றுக்கணக்கான நன்மைகளும் ஒருவர்
தனிப்பட பெறலாம்.
'
காயத்ரி சாதனையின் தொடங்கிய நாட்களில் முதல் அனுபவம் எப்படி
இருக்கும்?
காயத்ரி சாதனை தொடங்கி
சில நாட்களுக்குள் உங்கள் அகச்சூழலில் அதீத சக்தியையும், மன அமைதியையும்
உணர்வீர்கள். இது சாதகரின் மனம், எண்ணங்கள், உணர்ச்சிகளை சரியான பாதையில் இட்டுச்
செல்கிறது என்பதன் அறிகுறியாகும். இதன் பின்னர் மெதுவாக சாதகனில் உள்ள தீய
குணப்பிரபாவங்கள், மனதின் பலவீனங்கள் என்பவற்றை நீக்கி அக ஆற்றலை மேம்படுத்தும்.
இப்படியாக உங்கள் அகத்தில் தெய்வ சக்தி விழிப்படைவதை உணர ஆரம்பிப்பீர்கள். பலர்
சாதனை தொடங்கி சில நாட்களிலேயே தம்மில்
அமைதியான மாற்றத்தினை உணர்ந்துள்ளனர்.
மேலும் காயத்ரி மந்திர
அலைகள் எழுப்பும் பிராண சக்தியால் மனம் நேர்மறை எண்ணங்களால் நிரப்ப பட்டு
வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் மனவுறுதியை ஏற்படுத்தும்.
காயத்ரி மந்திர ஜெபம் எப்படி ஒருவனில்
செயற்படுகிறது என்பதற்கான விஞ்ஞான விளக்கம்
மந்திர ஜெபம் என்பது குறித்த
சக்தியுடைய எழுத்துக்களை கோர்வையாக குறித்த சந்தத்துடன் மனதில் கூறுதல். வாயினால்
கூறுவதும் மனதிலிருந்தே வருகிறது. மந்திரங்கள் பிரபஞ்சத்தில் உள்ள குறித்த
சக்திகளை மனதில் விழிப்படையச் செய்யும் கருவிகளாகும்.
இந்த வகையில் காயத்ரி
மந்திர ஜெபம் சாதகனின் ஆன்ம உணர்வினை (individual consciousness) பிரபஞ்ச உணர்வுடன் (cosmic consciousness) இணைக்கும் செயலினை செய்கிறது. இதனால்
சாதகனிற்கு பிரபஞ்ச மூல சக்தியினை தன்னில் ஈர்க்கும் தன்மையினை
பெறுகிறான். பிரபஞ்ச சக்தியுடன் ஒருவன் தன்னை இணைக்கும் போது அவன் இந்த இயற்கையின்
தன்மைகளை உணர்ந்து செயற்படக் கூடியவனாக ஆகிறான். இதானால் அவன் அறிவு பிரபஞ்ச
முழுமையினை புரிந்து செயலாற்றும் ஞானத்தினை பெறுகிறான். படிப்படியாக மனம் அவனை
ஆட்சி செய்வதிலிருந்து விடுபட்டு மனதினை ஆளும் திறனினை பெறுகிறான்.
ஆகவே காயத்ரி சாதகன்
தன்னில் நிகழும் மாற்றத்திற்கு தானே சாட்சியாக இருக்கிறான். எனவே இது வெறுமனே
கண்மூடி மந்திரத்தை கூறுங்கள் இந்த பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை அல்ல! ஒருவன்
தன்னை அறிந்து பிரபஞ்ச சக்திகளை விழிப்படைய செய்யும் அறிவியல்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.